இறையாற்றல் நிரம்பிய பொருட்களை பயன்படுத்தி தெய்வீகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். ஆன்மிக முன்னேற்றத்தை அவை அருள்கின்றன.

தெய்வீக பொருட்கள் உலகில் பல வகைகளில் உள்ளன. மந்திரம், எந்திரம், தந்திரம் ஆகிய உள்ளர்த்தம் கொண்ட வகையில் அவை பெறப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

கைகளால் எழுதிய யந்திரம்

திரிகாலாவில் கைகளால் எழுதப்படும் யந்திரங்கள் ஒருவருடைய தனிப்பட்ட கர்ம வினையின் அடிப்படையில் தயார் செய்யப்படுகின்றன. எங்களுடைய யந்திரங்கள் அனைத்துமே இந்த பேரண்டத்தின் சக்தி களத்தின் குறிப்பிட்ட அதிர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் துல்லியமாக வடிவமைக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக ஆற்றல்  அதை வைக்கும் இடத்திலும், வழிபடுபவருக்கும், தூய்மையான இறைசக்தியை அபரிமிதமாக வழங்குகின்றன.

பேரண்டத்தின் ஆன்மீக சக்தியூட்டப்பட்ட யந்திரம் என்பது நவ கோள்களின் தீய விளைவுளையும்,  ஆவிகள் பாதிப்பையும், இதர துன்ப, துயரங்களையும் அகற்றி ஒருவருக்கு நல்வாழ்வை அளிக்கும் சக்தி பெற்றதாகும்.

கைகளால் எழுதப்பட்டது - கர்ம வினை தீர்ப்பது -  தெய்வீக சக்தி நிறைந்தது 

Vazhaithandu kudineer to remove Kidney stone and UTI

வாழை தண்டு சாறு

திரிகாலாவின் தெய்வீக தயாரிப்பு 

திரிகாலாவின் வாழைத்தண்டு சாறு பாரம்பரிய முறையில் தூய்மையாக உருவாக்கப்பட்ட, ஆரோக்கியமான நல்வாழ்வை அளிக்கும் விதத்தில் செயல்படுவதாகும். வாழைப்பழங்களில் உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்பு ஆற்றலும் உள்ளது. அந்த வகையில் வாழைத்தண்டு சாறு என்பது உடல் எடையை  குறைத்து, சிறுநீரக செயல்பாட்டை தூண்டும் திறன் பெற்றது.


எங்களுடைய இந்த இயற்கை தயாரிப்பு உடலின் இயக்கங்களுக்கு பல நலன்களை அளித்து, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான சிறுநீரக செயல்பாட்டை தூண்டி, உடலின் நச்சுக்களை வெளியேற்ற உற்ற துணையாக  செயல்படுகிறது.

100% இயற்கையானது - ரசாயனங்கள் இல்லாதது - பதனம் செய்யப்படாதது

Herbal dhoop powder Online

மூலிகை சாம்பிராணி பொடி

திரிகாலா - 108 தூப பொடி இயற்கை மூலிகைகளிலிருந்து உருவாக்கப்பட்ட உயர்தரமான தயாரிப்பாகும். சுற்றுச்சூழலில் ஆன்மிக சக்தி பெருகச்செய்யும் வகையிலும், அரிய மூலிகைகள் அடங்கிய தயாரிப்பாகவும் உள்ல திரிகாலா - 108 மூலிகை தூப பொடி அனைத்து இடங்களையும் தெய்வீகம் நிரம்பியதாக மாற்றுகிறது. அரிய மூலிகைகள், விதைகள், இலைகள், உலர் பூக்கள், மரப்பிசின், கனிகள், வேர்கள், மரப்பட்டைகள், மூலிகை எண்ணெய் உள்ளிட்ட 108 வகையான பாரம்பரிய பொருட்கள் அடங்கிய பிரத்யேக சித்த முறை தயாரிப்பாகும்.


பயன்படுத்த எளிதாக உள்ள இந்த தூப பொடியை வீடுகள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தி ஆன்மிகம் நிலவும் சுற்றுச்சூழலை எளிதாக உருவாக்கி, இறை சக்தியின் ஆசிகளை எல்லா இடங்களிலும் பரவச் செய்யலாம்.


100% மூலிகை - செயற்கை பொருட்கள் இல்லாதது - இனிய நறுமணம் 

Valampuri Sangu Original from Rameshwaram

வலம்புரி சங்கு

திரிகாலாவில் கிடைக்கும் தக்‌ஷிணாவர்த்தி சங்கு அதாவது வலம்புரி சங்கு புனிதமான தெய்வீக ஆற்றலை ஈர்க்கக்கூடிய ஆன்மிக பொருட்களில் முதன்மையானதாக குறிப்பிடப்படுகிறது. பொதுவாக வலம்புரி சங்குகள் பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈர்க்கும் அற்புத தெய்வீக ஆற்றல் கொண்டவையாகவும், வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் இடங்களில் உள்ள எதிர்மறை சக்திகளை அடித்து விரட்டக்கூடிய சக்தி பெற்றவையாகவும் உள்ளன. 

எங்களிடம் உள்ள சான்றிதழ் பெற்ற வலம்புரி சங்குகள் தெய்வீக வழிமுறையின்படி தூய்மை செய்யப்பட்டவை. அதனால் அவற்றை பூஜை செய்பவர்கள் செல்வவளம் நிரம்பிய அதிர்ஷ்டகரமான நல் வாழ்க்கையையும், ஆரோக்கியமான உடல் நலத்தையும், ஆன்மிக அதிர்வலைகள் நிரம்பிய தெய்வீக சுற்றுச்சூழலை உருவாக்கியும் மகிழ்ச்சியான வாழ்வை பெறுகிறார்கள். 

100% இயற்கையானது - தர சான்றிதழ் பெற்றது -  தெய்வீக சக்தியூட்டப்படது