மூலிகை சாம்பிராணி

மூலிகை தூப பொடி

திரிகாலா - 108 தூப பொடி இயற்கை மூலிகைகளிலிருந்து உருவாக்கப்பட்ட உயர்தரமான தயாரிப்பாகும். சுற்றுச்சூழலில் ஆன்மிக சக்தி பெருகச்செய்யும் வகையிலும், அரிய மூலிகைகள் அடங்கிய தயாரிப்பாகவும் உள்ள திரிகாலா - 108 மூலிகை தூப பொடி அனைத்து இடங்களையும் தெய்வீகம் நிரம்பியதாக மாற்றுகிறது. அரிய மூலிகைகள், விதைகள், இலைகள், உலர் பூக்கள், மரப்பிசின், கனிகள், வேர்கள், மரப்பட்டைகள், மூலிகை எண்ணெய் உள்ளிட்ட 108 வகையான ஆன்மிக மரபுசார் பொருட்கள் அடங்கிய பிரத்யேக சித்த முறை தயாரிப்பாகும்.

பயன்படுத்த எளிதாக உள்ள இந்த தூப பொடியை வீடுகள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தி ஆன்மிகம் நிலவும் சுற்றுச்சூழலை எளிதாக உருவாக்கி, இறை சக்தியின் ஆசிகளை எல்லா இடங்களிலும் பரவச் செய்யலாம்.யாகம், ஹோமம், பூஜை, கோவில் வழிபாடு, தியானம், யோக பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளும்போது இந்த தூப பொடியை பயன்படுத்தி தெய்வீக சூழலை ஏற்படுத்தலாம்.

மூலிகை தூப பொடியின் நன்மைகள்

  • சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டுகிறது
  • கண் திருஷ்டி, மாந்த்ரீக தொல்லைகளுக்கு சிறந்த நிவாரணம்
  • இதன் சுகந்த நறுமணம் செல்வ வளம், உடல் நலம் தருகிறது
  • விஷ ஜந்துகளை விரட்டும் சக்தி கொண்டது
  • வியாபார ஸ்தலங்களில் சுப அதிர்வலைகளை ஏற்படுத்தும்

பஞ்சலோக கை காப்பு

ஆன்மிக மரபில் பஞ்சலோகம் என்பது முக்கியத்துவம் பெற்றது. அதில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு ஆகிய ஐந்து உலோகங்கள் அடங்கியுள்ளன. அவை மனித உடலையும், மனதையும் சமநிலைப்படுத்தி அமைதியான வாழ்க்கையையும், அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகளையும் அமைத்து தருவதாக ஐதீகம். அதனால் பஞ்சலோக கை காப்பு என்பது ஆண், பெண் இரு பாலாருக்கும் உற்ற தெய்வீக துணையாக அமைகிறது.