
கடந்த காலத்தைப் பற்றி அறிவது என்பது தற்போதைய வாழ்வு நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் ஆகும். கர்மவினையை ஆராந்தறிதல் என்பது கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால வாழ்க்கையுடனான அதன் தொடர்பையும் ஆராய்வதாகும். ஏன் சில சூழ்நிலைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதையும், கடந்த கால வாழ்க்கையிலிருந்து அறிந்தவை மூலம் உங்கள் வாழ்வு எங்கே செல்கிறது என்பதையும், உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து நன்மைகளை பெறுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளவும் அந்த ஆய்வு உதவுகிறது.
* நாடியின் மூன்று வகைகளைப் பயன்படுத்தி கர்ம வினைகளை நாங்கள் அறிகிறோம். அவை கந்தர் நாடி, ஜீவ நாடி, பிரசன்ன நாடி ஆகும். கந்தர் நாடியின் 24 பிரிவுகளையும், ஜீவ மற்றும் பிரசன்ன நாடியில் ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரிவை பயன்படுத்தியும் கர்மவினைகளை ஆராய்ந்தறிகிறோம்.
* நமது சித்தரின் (ரிஷி பிரசன்னம்) தெய்வீக வழிகாட்டுதலையும், ஆத்மநிலை வழிகாட்டிகள், தேவதைகள் மற்றும் தெய்வீக படைப்புகளின் வழிகாட்டுதல்களை பெற ஆன்மீக ரீதியான எட்டு வித கேள்வி-பதில் முறையை பயன்படுத்துகிறோம்.
* உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து, குறிப்பிட்ட பிறப்பு நேர திருத்தம், திருமணப் பொருத்தம் அல்லது கர்ம வினைப்படி ஏற்பட்ட உறவுப் பிணைப்புகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய வேத ஜோதிட முறைகளையும் பயன்படுத்துகிறோம். உங்கள் கேள்வியின் அடிப்படையில், கர்மா வினையின் பாதையை துல்லியமாக அறிய மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது மேலே உள்ள அனைத்தையும் நாங்கள் பயன்படுத்தலாம்.
கர்மவினை என்பது பிராரப்த கர்மா, சஞ்சித கர்மா, ஆகாமிய கர்மா என்று மூன்று வகையாக இருக்கிறது.
பிராரப்த கர்மா என்பது இந்த பிறவியில் நாம் அனுபவித்துக்கொண்டுள்ள இன்ப துன்பம் என்ற கர்ம வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.
சஞ்சித கர்மா என்பது இந்த பிறவியில் நாம் இனிமேல் எதிர்கொள்ள வேண்டிய கர்மா வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.
ஆகாமிய கர்மா என்பது இனிமேல் நாம் எடுக்கக்கூடிய பிறவிகளில் பலனை அளிப்பதற்கான கர்ம வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.
ஒருவரது வாழ்க்கையை இந்த மூன்று விதமான கர்மவினைகள் தான் வழிநடத்திச் செல்கின்றன. மனித வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு பிராரப்த கர்ம வினைகளை அகற்றும் பொழுது தற்போதைய நடைமுறை துன்பங்களுக்கு ஒரு விடிவு ஏற்படுகிறது. அதை சித்தர்களுடைய வழிமுறைகளை பயன்படுத்தி ஒருவருடைய நாடியை அறிந்து படிப்பதன் மூலமாக பிராரப்த கர்மாவை சுலபமாக தீர்த்துக் கொள்ள முடியும்.
சஞ்சித கர்மா என்பது பல பிறவிகளாக பின் தொடர்ந்து வரக்கூடிய கர்ம வினைகளை குறிப்பிடுகிறது. அந்த சஞ்சித கர்ம வினை என்பதை அவ்வளவு எளிதாக உடைக்க இயலாது. அதன் காரணமாகவே மனிதர்களால் தாங்க இயலாத துன்பங்களான பலவித நோய்கள், பொருளாதார முடக்கங்கள், உடல் மற்றும் மன ரீதியான தீர்க்க இயலாத சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கான சரியான தீர்வுகளும் சித்தர்கள் நாடிமுறையில் மற்றும் பல்வேறு ஆன்மீக வழிமுறைகளில் தீர்ப்பதற்கு நெறிகளை வகுத்து அளித்துள்ளார்கள்.
ஆகாமிய கர்மா என்பது இனிமேல் எடுக்கக்கூடிய பிறவிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்பதன் மூலம் அது முற்றிலும் ஆன்மீக ரீதியான வழிகாட்டுதல்கள் மூலமே கண்டறிந்து தீர்க்கப்பட முடியும். அதற்கான வழிமுறைகளையும் சித்தர் பெருமக்கள் நமக்கு தந்து சென்றுள்ளார்கள்.
திரிகாலாவில் மேற்கண்ட மூன்று விதமான கர்ம வினைகளையும் அகற்றுவதற்கான நாடி படிக்கும் தெய்வீக வழிமுறை சித்தர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படுகிறது.
13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எங்களுடைய அன்பிற்குரிய குரு ரிஷி சிவப்பிரகாசம் அவர்கள் இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி என்ற நகரத்திற்கு அருகில் முக்தி அடைந்தார். அவ்வாறு அவர் முக்தி அடைவதற்கு முன்பாக, மனித உடலில் இருந்து அவர் எங்களுக்கு அளித்த போதனைகள் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் மூலமாக இன்றும் எங்களை அவர் வழிநடத்தி வருகிறார்.
திரிகாலாவில் உள்ள நாடி படிப்பவர்கள் மற்றும் ஆன்மீக சேவை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவருமே எங்களுடைய அன்பிற்குரிய குருவான ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்களுடைய அருளாசியை பெற்றவர்கள். 15 வருடங்கள் முதல் 45 வருடங்கள் வரை நாடி ஜோதிட துறையில் அனுபவம் பெற்றவர்கள்.