கந்தன் நாடி
கர்ம வினைப்படி உங்கள் ஆன்ம பாதையை கண்டறிந்து, அதற்கேற்ப தக்க பதில்கள் தெய்வீக வழிகாட்டுதலுடன் உடனே அளிக்கப்படுகிறது. அதனால் உங்கள் ஆத்ம சக்தியும், மனோதிடமும் வெளிப்பட்டு கர்மவினைகளை அகற்றும் வகையில் செயல்பட முடிகிறது.
திரிகாலா உங்களுக்கு பிரத்யேகமான சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. வாழ்வில் வளமும், நலமும் பெற கந்தர் நாடி, ரிஷி பிரசன்னம், பிரசன்ன நாடி ஆகியவற்றை இறையருள் பெற்றவர்களால் வாசிப்பதன் மூலம் சிறந்த சேவையை அளிக்கிறது. இணையதளம் மூலம் அந்த சேவை அளிக்கப்படுவதால், வீட்டிலிருந்தவாறே சுலபமாக கர்ம வினை அகற்றும் துல்லிய பரிகாரங்களை அறிந்து நீங்கள் நல்வாழ்வு பெறுவது நிச்சயம்.
எங்களுடைய பாரம்பரியம்
எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள், ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.
எங்களுடைய நாடி ஜோதிடர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட மையத்தில் பயின்று சிக்கலான நுட்பங்களை அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடி ஜோதிடத்தில் 25 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பாரம்பரியமிக்க நாடி ஜோதிட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் பரம்பரை பரம்பரையாக நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்களிடம் நாடி ஜோதிடம் படிக்க வரும் வாடிக்கையாளர்கள் கந்தர் நாடி, ஜீவநாடி, பிரசன்ன நாடி உள்ளிட்ட பல்வேறு நாடி வகைகளில் இருந்து தங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை பெற முடியும். அந்த வகையில் ஆன்ம ஞானம் பெற்ற ரிஷி முனிவர்களின் அருளால் அவர்கள் அளிக்கும் தெய்வீக வழிகாட்டுதல்கள் மூலம் தனிமனிதருடைய கர்மவினைகளின் தன்மைகளை அறிந்து, எளிமையான தீர்வுகளை எங்கள் நாடி ஜோதிடர்கள் அளிக்கிறார்கள்.
பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஜோதிடர்கள் குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.
திரிகாலா மூலம் தெய்வீகமான ஆன்லைன் வழிகாட்டுதல்களை உங்கள் வீட்டில் இருந்தபடியே பெற முடியும். அதற்கு எளிமையான செயல்முறைகளை திரிகாலா வகுத்துள்ளது. அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது :-
E-Copy முறையில் உங்கள் கையெழுத்தை தரவும்
உங்களுக்கு ஏற்ற நேரத்தை தேர்ந்தெடுக்கவும்
உணவு உயயம் செய்க (இயன்றால்)
கேள்விகளை தயாராக வைத்திருக்கவும்
நிபுணரோடு கலந்தாலோசித்து பதில் பெறவும்
விரும்பிய மொழியில் ஆலோசனை அளிக்கப்படும்
தெய்வீகம் தரும் பதில்களை ஏற்றுக்கொள்ளவும்
நல்வாழ்வு பெற பரிகார முறைகளை அனுசரிக்கவும்
ஒருவருடைய நாடியை படிக்கும்போது சம்பந்தப்பட்டவர் இறைநெறியின் வழி நடப்பதன் மூலம் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்பது சித்தர்கள் வகுத்த வழிமுறையாக அமைந்துள்ளது.
பிரபஞ்ச ரகசியமாக உள்ள ஒருவரது கர்மாவை அறிந்து கொள்ளும் நாடி படித்தலின்போது ஆன்மிக கட்டுப்பாடுகளான, அசைவம் தவிர்த்தல், மது அருந்துவதை தவிர்த்தல், தாம்பத்யத்தில் ஈடுபடாமல் இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருத்தல் ஆகிய நெறிமுறைகளை கடைபிடித்தால், இந்தப் பேரண்டத்தின் விதிமுறைப்படி கர்மவினைகளை ஒருவர் அறிந்து கொள்ளும் வழி காட்டப்படுகிறது.
முடியாது. பொதுவாக நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. இருந்தாலும் ஒருவரது வாழ்க்கையில் அவர் சந்தித்து வரும் கர்மவினையின் தீவிரத்தைப் பொறுத்து அந்த முறை பரிந்துரைக்கப்படலாம்.
அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், சம்பந்த நபர் பல காரணங்களால் வர இயலாது என்ற சிக்கலான சூழலில் அவருக்காக மற்றொருவர் நாடி படிப்பதை தெய்வீக அனுமதியின் பேரில் அனுமதிப்பது உண்டு.
உங்கள் பெயரை உங்கள் கைகளால் எழுதி தரப்படுவதை எங்கள் குருவின் முன்னால் வைக்கப்படுவதன் மூலம் அவர் உங்கள் கர்மவினை பதிவுகளை ஆராய்ந்து பலன்களை கூற ஏதுவாக இருக்கும்.
திரிகாலாவில் ஒருவரது கர்மவினையின் தாக்கத்தை துல்லியமாக அறிந்து அதற்கு இந்த பேரண்டம் அளிக்கும் தீர்வுகளை வர்த்தக நோக்கம் இல்லாமல் எளிமையாக அளிக்கப்படுகிறது. மேலும், ஒருவரது கர்மாவுக்கு ஏற்ப எங்கள் குருவால் அளிக்கப்படும் பிரத்யேக கர்மவினை தீர்க்கும் நெறிகளையே நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.