சிவபெருமானின் 64 அவதாரங்கள் - இறுதி பகுதி

சிவனின் 64 திரு அவதாரங்கள் - மூன்றாம் பகுதி

64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன .சைவ சமயக் கலைக்  களஞ்சியம் கஜாரி , கஜமுக அனுக்கிரக மூர்த்தி , இராவண அனுக்கிரக மூர்த்தி , ஹரிவிரிஞ்சதாரணர் , ஏகதசருத்திரர் , முயலகவத மூர்த்தி , சர்வ சம்ஹாரர் , யக்ஞேசுவரர் , உக்கிரர் ஆகியவற்றை பட்டியலிடுகிறது . 

மகேசுவர மூர்த்தங்கள் 

மகேசுவர மூர்த்தங்கள் என்பவை சைவக் கடவுளான சிவபெருமானின் இருபத்து ஐந்து உருவங்களைக் குறிப்பதாகும் . இந்த வடிவங்கள் சிவனது அறுபத்து நான்கு 64 சிவவடிவங்களிலும் இடம்பெருகின்றன . இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும் , பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன . 

வகைப்பாடு 

சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன . இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன . . 

ஈசானம் :  சோமாஸ்கந்தர் , நடராஜர் , ரிஷபாரூடர் , சந்திரசேகரர் , கல்யாணசுந்தரர் 

தற்புருஷம் : பிட்சாடனர் , காமசம்ஹாரர் , சலந்தராகரர் , கால சம்ஹாரர் , திரிபுராந்தகர் 

அகோரம்  : கஜசம்ஹாரர் , வீரபத்திரர் , தட்சிணாமூர்த்தி , நீலகண்டர் , கிராதர் 

வாமதேவம் :  கங்காளர் , கஜாரி , ஏகபாதர் , சக்ரதானர் , சண்டேசர் 

சத்யோசாதம் :  இலிங்கோத்பவர் , சுகாசனர் , அர்த்தநாரீஸ்வரர் , அரியர்த்த மூர்த்தி , உமா மகேஸ்வரர் .

மகேஸ்வர மூர்த்தங்களின் பட்டியல் மகேஸ்வர வடிவங்கள் , அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள் 

  1. சோமாஸ்கந்தர் - திருவாரூர் 
  2. நடராஜர் - சிதம்பரம்
  3. ரிஷபாரூடர் - வேதாரண்யம்
  4. கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
  5. சந்திரசேகரர் - திருப்புகலூர் ( திருவாரூர் )
  6. பிட்சாடனர் - வழுவூர் ( நாகப்பட்டினம் )
  7. காமசம்ஹாரர் - குறுக்கை
  8. கால சம்ஹாரர் - திருக்கடையூர் ( நாகப்பட்டினம் )
  9. சலந்தராகரர் - திருவிற்குடி
  10. திரிபுராந்தகர் - திருவதிகை ( கடலூர் )
  11. கஜசம்ஹாரர் - வழுவூர் ( நாகப்பட்டினம் )
  12. வீரபத்திரர் - கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் - ( நாகப்பட்டினம் )
  13. தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி ( திருவாரூர் )
  14. கிராதகர் - கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் )
  15. கங்காளர் - திருச்செங்காட்டங்டி திருவாரூர் )
  16. சக்ரதானர் - திருவீழிமிழலை ( திருவாரூர் )
  17. கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி ( திருவாரூர் )
  18. சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் ( அரியலூர் )
  19. ஏகபாதமூர்த்தி - மதுரை
  20. லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
  21. சுகாசனர் - காஞ்சிபுரம்
  22. உமா மகேஸ்வரர் - திருவையாறு ( தஞ்சாவூர் )
  23. அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் ( திருநெல்வேலி )
  24. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு ( நாமக்கல் )
  25. நீலகண்டர் - சுருட்டப்பள்ளி ஆந்திரா 

இனி வரும் பதிவுகளியில் சிவஅவதாரத்தின் காரணத்துவத்தை  தனி பதிவாக அறிந்துகொள்ளவும் .

எங்களின் தனித்துவமான கர்மா தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு  தொடர்புகொள்ளவும் 

Receive Divine Blessings of Lord Shiva
Participate in sacred Shiva rituals and homams performed with authentic Vedic traditions, devotion, and spiritual energy.
SPECIAL POOJA OFFER

Shiva Pradosha Pooja

Starting from
₹101
One-time pooja • Divine peace, protection & Shiva blessings
  • Removes negative energies
  • Brings spiritual positivity
  • Supports family well-being
  • Receives Lord Shiva blessings
Post Tags

Comments

Add a Comment

Categories