சரபேஸ்வரர் ஹோமம் செய்ய சிறந்த சேவை மையம்

வாழ்க்கை தடைகளை நீக்குவதற்கான சிறந்த பரிகார ஹோமம்

சரபேஸ்வரர் ஹோமம் - தீய சக்திகளை அகற்றி பாதுகாப்பு தரும்

Embrace New Beginnings

எதிர்மறை மற்றும் தீய சக்திகளிலிருந்து நீங்கள் பாதுகாப்பைத் தேடுகிறீர்களா? உங்கள் தேடலுக்கு சிறந்த ஆன்மீக தீர்வு சரபேஸ்வர ஹோமம் ஆகும். சிவபெருமானின் தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த வடிவமாக அறியப்படும் சரபேஸ்வரா, எதிர்மறை எண்ணங்களை அழித்து, ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்களை நிலைநாட்டுவதில் திறமையானவர்.


சரபேஸ்வரா அல்லது சரபா என அழைக்கப்படும் சரபேஸ்வரர், சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவர் பொதுவாக சிங்கத்தின் உடலுடன், பறவையின் இறக்கைகளுடன் மற்றும் சிங்கத்தின் வாயிலிருந்து வெளிவரும் மனித தலைவுடன்காட்சியளிக்கிறார்.


சரபேஸ்வர ஹோமம் என்பது, சரபேஸ்வரரின் அருளையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான ஒரு ஆன்மீக சடங்காகும். இந்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம், நீங்கள் அவரின் தெய்வீக அருளையும், ஆற்றலையும், தலையீட்டையும் அனுபவிக்க முடியும். இது உங்கள் வாழ்க்கையில் எதிரிகளை தோற்கடிக்கவும், தடைகளை உடைக்கவும், எதிர்மறை சக்திகளை அகற்றவும், நலமுடன் வாழ்வதற்கும் உதவும்.

சரபேஸ்வரர் ஹோமம் ~ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த சரபேஸ்வரர் ஹோமத்தை செய்வதால், சரபேஸ்வரரின் அருளைப் பெற்று, நாம் நினைத்த செயல்களில் வெற்றி அடைய உறுதுணையாக இருக்கும்.,

  • எதிர்மறை ஆற்றல்கள், பில்லி, சூனியம் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறது.
  • வாழ்க்கையின் சங்கடங்கள் மற்றும் தடைகளை சமாளித்து, உங்கள் முயற்சிகளுக்கு சிறந்த பலனை பெற உதவுகிறது.
  • குணப்படுத்தும் சக்திகளை அளித்து, உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • ஆன்மீக எண்ணங்களை வளர்த்து, விழிப்புணர்வை ஊக்குவித்து, உயர்ந்த ஆற்றலுடன் இணைப்பை உருவாக்க உதவுகிறது.

எங்களுடைய குருமார்கள், உங்கள் பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவற்றை விண்வெளி நிகழ்வுகளுடன் பொருத்தி, கர்ம வினைகளை சமன் செய்ய உகந்த நேரம் மற்றும் தேதியை ஆராய்ந்து தீர்மானிப்பார்கள். பின்னர், உங்களுடன் கலந்துகொண்டு சரபேஸ்வரர் ஹோமத்தின் நிகழ்வுகளை உறுதி செய்யப்படும்.


ஹோமம் செய்வதற்கு உகந்த இடம் : கோவில்கள், இல்லங்கள், அலுவலகங்கள், மற்றும் மத சடங்குகள் நடைபெறும் பிற இடங்கள்.


மங்களகரமான நேரம் பிரம்ம முகுர்த்தம், சூரிய உதயத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை.


மங்களகரமான தேதி : வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில், குறிப்பாக அஷ்டமி தினங்களில் செய்யுவது விசேஷமாக கருதப்படுகிறது.

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எங்களுடைய உயர்தர வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சரபேஸ்வரர் ஹோமத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்கான உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில், எங்களுடைய தலைமை குருநாதர் ஹோமத்தை நடத்துவார். அவர் வழங்கும் வழிகாட்டுதலின்படி, உங்கள் கர்ம வினைகளை நீக்குவதற்கான சரபேஸ்வரர் ஹோமம், சடங்குகள், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, எந்த கூடுதல் செலவின்றி உங்கள் இடத்திலிருந்தே உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் அல்லது,


நேரில் ஹோமம் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

ஹோமத்தின் மூலம் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்கள் சரபேஸ்வரரின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சரபேஸ்வரரின் அருளினால், கர்ம வினைகளால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகள் மற்றும் தடங்களை உடைதெறிந்து ஒளிமயமான எதிர்காலத்தை, நல்ல அறிவு பெற்று , பாதுகாப்புடன் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற உதவுகிறது.


இந்த சரபேஸ்வரர் ஹோம வழிபாட்டில் "ரட்சை" என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் உங்கள் நெற்றியில் பூசிக் கொண்டே பயன்படுத்தி வர, இறைவனின் அருளைப் பெற உதவுகின்றது.

திரிகாலாவின் ஹோம சேவைகள் - சரபேஸ்வரர் ஹோமம்

திரிகாலா ஹோம சேவைகள் உங்கள் வீட்டிலிருந்தே பண்டைய ஆன்மிக சடங்குகளின் மகிமையையும் தெய்வீக அருளையும் அனுபவிக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. சரபேஸ்வரர் ஹோமத்தின் புனித ஆற்றலையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் மூலம் நேரடியாக உங்கள் பங்களிப்புக்கு கொண்டு வருகிறோம். நீங்கள் வீட்டில் இருந்து கலந்துகொண்டாலும், அல்லது நேரில் பங்கேற்றாலும், இந்த தெய்வீக நிகழ்வில் எளிதாக இணைந்து அனுபவிக்கலாம்.

திரிகாலாவின் தலைமை குருநாதரின் மேற்பார்வையில், குருமார்கள் ஆகம விதிகளை மிகத் துல்லியமாக பின்பற்றி சரபேஸ்வரர் ஹோமம் நடத்துகிறார்கள். இந்த சடங்கின் போது உருவாகும் அக்னியின் ஒளி மற்றும் மந்திரங்களின் ஒலி பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து, உங்கள் உள்ளார்ந்த ஆற்றல்களை சமநிலைப்படுத்தி, புத்துணர்வையும் தெய்வீக ஆற்றலையும் அளிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி, எதிர்மறை சக்திகளை அகற்ற உதவுகிறது.

ஆகம விதிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த சரபேஸ்வரர் ஹோமம், சரபேஸ்வரரின் தெய்வீக அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையின் தடைகளை அகற்றுவதற்கும், உங்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கும் உதவுகிறது. இக்சரபேஸ்வரர் ஹோமம், வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல்கள், தீய சக்திகள் ஆகியவற்றிலிருந்து அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய உதவுகிறது.

திரிகாலாவில் நடைபெறும் சரபேஸ்வரர் ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்:

எங்களை பற்றி

13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் சிவஞான ஜீவசமாதி அடைந்தார். தனது ஞானத்தினால் ஆன்மீக சித்தாந்தங்களை விளக்கி, மனித குலத்தின் கர்மவினை சவால்களை அகற்ற நெறிமுறைகளை உருவாக்கி, சீடர்களுக்கு போதனை செய்து வருகிறார்.


ஐயா சித்தர் சிவப்பிரகாசத்தின் மானசீக சீடர்களான எங்கள் குருமார்கள், அவருடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் கர்மவினை சவால்களுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்து, மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

எங்களின் நிபுணத்துவம்

தனிநபரின் கர்மவினைகளை ஆராய்ந்து வாழ்க்கை மேம்படுத்த தேவையான தீர்வுகளை வழங்குவதே எங்கள் நிபுணத்துவம். இது தமிழர் பாரம்பரிய ஆகம சாஸ்திரங்களின் தொன்மையான வழிமுறைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.


எங்கள் குருமார்கள், கர்மவினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை சமநிலைப்படுத்த பரசுராம கல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம், பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள், யந்திரம் போன்ற பரம்பரிய தீர்வு முறைகளில் சிறந்த அனுபவத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

எங்களின் சிறப்பம்சங்கள்

கர்மவினை தீர்வுகள் தனித்துவமான செயல்முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர ஆன்மீக ஜோதிடத் தீர்வுகளை வழங்க உதவுகின்றன.ஒவ்வொருவரின் கர்மவினைகளுக்கு ஏற்ப, கர்ம பலன்களை நிவர்த்தி செய்ய தகுந்த கோயில்கள், யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய பரிகார முறைகள் எங்களுடைய உள்கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.


மேலும், எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பரிகாரங்களை அதிகாரபூர்வமாக மற்றும் நேர்த்தியாக செயல்படுத்த உறுதிப்படுத்தும் சாத்தியங்களை உருவாக்குகிறது.

Guruji

எதிர்வினை தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தீர்வுகளை காண விரும்புகிறீர்களா

God Sarabeswara ~ Our Similar Services

சரபேஸ்வரர் யந்திரம்

வாழ்வில் தீய சக்திகளை அகற்றி, பிரச்சனைகளை தீர்த்து, பாதுகாப்பு, அமைதி மற்றும் நலனை உறுதிசெய்யும் சக்திவாய்ந்த சரபேஸ்வரர் யந்திரம்.

சரபேஸ்வரர் பூஜை

தீய சக்திகளை அகற்றி, எதிரிகளை சமாதானப்படுத்தி, வாழ்க்கையில் அமைதி, நலன் மற்றும் முன்னேற்றத்தை பெற இந்த சிறப்பு சரபேஸ்வர பூஜையில் பங்கேற்கவும்.

பிரத்தியங்கிரா தேவி ஹோமம்

தீய சக்திகள் மற்றும் திருஷ்டியை நீக்கி, எதிரிகளை தணித்து, வாழ்க்கை முன்னேற்றத்தை தரும் பிரித்திங்கரா ஹோமத்தில் பங்கேற்கவும்.

சரபேஸ்வர அபிஷேக பூஜை

தீய சக்திகளை நீக்கி, வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ள இந்த சரபேஸ்வர அபிஷேக பூஜையில் பங்கேற்கவும்.