கந்தன் நாடி
சகல நலம் பெற ஏற்ற வழிமுறை
எங்களுடைய ஆன்மீக குருவான சிவப்பிரகாசம் ஐயா அவர்களுடைய வழிகாட்டுதலில் அவர்களுடைய சீடர்கள் கடைபிடிக்கும் ஒரு மகத்தான வழிமுறை பிரசன்ன மார்க்கம் என்ற இறையருள் பெற்ற பிரத்தியேகமான கர்மவினை தீர்க்கும் நாடி படித்தலாகும்.
அந்த வகையில் மிகவும் பிரபலமான கந்தர் நாடி என்பது அதனுடைய பெயருக்கு ஏற்ப சிவபெருமானின் ஞானக் குழந்தையான கார்த்திகேயனின் பெயரால் வழங்கப்படுகிறது. மனித குல நல்வாழ்வுக்காக சிவபெருமானின் இரண்டாவது மகனான கந்தன் என்ற கார்த்திகேயன் அருளிய நாடி ஜோதிடம் கந்தர் நாடி என்று அழைக்கப்படுகிறது. அந்த கந்தர் நாடியில் செய்யுள் வடிவத்தில் உள்ள கால கணக்கை காட்டும் பதிவுகள் மூலம் தெரியப்படுத்தும் ஆன்மீக பொக்கிஷங்களை குருவின் அருள் பெற்ற ஒரு சீடரால் மட்டுமே சரியாகப் புரிந்து பலன்களை எவ்வித தவறுகளும் இல்லாமல் உரைக்க முடியும்.
கந்தர் நாடி மூலம் பலன்களை அறிந்து தெளிவு பெறும் வாடிக்கையாளர்கள் அந்த பலன்களை அடுத்து வரக்கூடிய ஒரு வருட காலகட்டத்திற்கு பெற்று வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லலாம்.