ஆபத்தோத்தாரண மூர்த்தி | சிவபெருமான் ஆபத்து ரட்சிப்பு

ஆபத்தோத்தாரண மூர்த்தி – சிவபெருமான் வரம்

சிவனை நினைத்து, சிவமயமாய், சிவனே என்று இருக்கச் சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசிகளை வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகள் மற்றும் புராணங்கள் பல காலகட்டத்தில் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்திற்கு ஆற்றலை சமன் செய்து அருள்புரிகிறார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், ஆபத்தோத்தாரண மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வீரின் ஆபத்தோத்தாரண மூர்த்தி வடிவமானது முனிவர்களின் இடர்கள் களைந்த வடிவமாகும்.

ஆபத்தோத்தாரண மூர்த்தி

பெயர் : ஆபத்தோத்தாரண மூர்த்தி

வாகனம் : நந்தி தேவர்

மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்

விளக்கம் மற்றும் அவதாரக் காரணம்

அனைத்து வித மங்களமான ஒளிமயமான, ஜோதி மயமான சிவனே உலகில் சஞ்சரிக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் துன்பத்தை போக்கும் சக்தியுள்ளவர். அவரையின்றி வேறொருவர் நமக்கு துணையாக இருக்க முடியாது.

அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் எண்ணற்ற தேவகணங்கள், பூதகணங்கள், நடனமங்கையர், நான்முகன், இந்திரன், திருமால், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், அசுரர், கிம்புருடர், கின்னரர், யமன், பதினெண் கணங்கள், முருகன், வினாயகன், தேவியர், பார்வதி, காளி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, அபிராமி, மகேஸ்வரி, சப்தகன்னியர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆயுதங்கள், சப்தமாதர்கள், நாரதர், சந்திர, சூரிய, கிரகங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சப்தரிஷிகள், நட்சத்திரக் கூட்டங்கள், மனிதர், நரகர், நாகர் என அனைத்து வகையான ஜீவராசிகளும் அவரைச் சுற்றிலும் நின்று, அனைவருக்கும் வேண்டிய வரங்களையும், வேண்டுவனவற்றையும் கொடுப்பார்.

அச்சமயங்களில் அவர் சாதாரண மனிதர் போல் சட்டையணிந்து இருப்பார். தண்டமும், கபாலமும் ஏந்தியபடி வீற்றிருப்பார். அவர் அனைவரின் குறைகளையும் கேட்டறிந்து, துன்பங்களில் இருந்தும், ஆபத்திலிருந்தும் அவர்களை காப்பாற்றி ரட்சிப்பார்.

ஆகவே அவரது அற்புதங்களும், அவதாரங்களும், மூர்த்தங்களும் இந்த காரணத்துக்கே உருவானவை. துன்பம் அடைந்தோரையும், ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தி ஆகும்.

தரிசன இடங்கள்

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர் என்றும், இறைவி பெயர் திருநீலைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார். ஆபத்து சமயங்களில் இவரை வேண்டினால், இவர் உதவுவார் என்பது ஐதீகம். அவரது திருவுருவங்கள் பலவற்றிற்கு இத்தன்மை இல்லாவிட்டாலும் அந்தந்த சூழலுக்கு கேற்றாற்போல் உதவி கிடைக்கும்.

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Post Tags

Comments

Add a Comment

Categories