பிரம்ம சிரச்சேத மூர்த்தி | திரிகாலா - சிவனின் 64 தாண்டவ அவதாரங்கள்

பிரம்ம சிரச்சேத மூர்த்தி திருக்கதை

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் மற்றும் பல நாடி ஓலை குறிப்புக்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு அருள்புரிகின்றார்.

பிரம்ம சிரச்சேத மூர்த்தி வடிவம்

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், பிரம்ம சிரச்சேத மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். பிரம்ம சிரச்சேத மூர்த்தி ப்ரம்மவின் தலை கொய்த வடிவாகும்.

பெயர்: பிரம்ம சிரச்சேத மூர்த்தி

வாகனம்: நந்தி தேவர்

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

விளக்கம்

மேருமலையில் இருக்கின்ற உயர்ந்த சிகரமொன்றில் திருமாலும், பிரம்மனும் வீற்றிருக்கின்றனர். அப்போது எண்ணற்ற முனிவர்களும், தேவர்களும் அங்குவந்து இருவரையும் தாழ்மையுடன் வணங்கி அவர்களிடம் உலக உயிர்கள் அனைத்தின் மனதிலும் இருப்பவர் யாரென்றுக் கூறுங்கள் என்றுக் கேட்டனர்.

இச்செய்தியால் கர்வம் கொண்ட திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே அனைவர் மனதிலும் இருப்பவன் என்ற ரீதியில சண்டை ஏற்பட்டது, இதனைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் நழுவினர். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னும் சண்டைத் தொடரவே வேதமும், பிரணவமும் கூறியது “உங்களில் இருவரும் பெரியவர் அல்ல, சிவபெருமானே பெரியவர்” என. மீண்டும் கேளாமல் சண்டை நீண்டது.

இதனையறிந்த சிவபெருமான் ஜோதி வடிவத்துடன் அங்கே வந்து அதன் நடுவே தம்பதி சமேதராய் திருக்கைலையில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காட்டினார். இதனைக் கண்ட திருமால் சிரம் தாழ்த்தி வணங்கி தோல்வியை ஒப்புக் கொண்டு சிவபெருமான் துதித்தார்.

ஆனால் பிரம்மனோ கர்வமடங்காமல் தன்னுடைய நடுத் தலையால் சிரம் சிவபெருமானை இகழ்ந்துப் பேசினார். இதனைக் கண்ட சிவபெருமான் அவரது கர்வத்தை அழிக்க பைரவரை நினைத்தார்.

பைரவர் வந்தவுடன் பிரம்மனின் நடுத்தலையை தன் நக நுனியால் கிள்ளி, தன் கைகளில் ஏந்தியபடி அனைத்து தேவர், முனிவர்கள் இருப்பிடம் சென்று இரத்தப் பிச்சைக் கேட்டார். இரத்தம் கொடுத்து மயங்கிய பிரம்மாவை எழுப்பி அவரது கர்வத்தை அடக்கினார். பின்னர் பிரம்மன் தன்னுடைய கர்வம் பைரவரால் அழியப் பெற்றது. சிவபெருமானை தவறாகப் பேசியதற்காக மன்னிப்பு வேண்டினார். பின் அவரை பலவிதமாகப் பாடித் துதித்து வழிபட்டார்.

அந்த சிரச்சேதம் செய்த தலை சிவபெருமானிடமே இருந்தது. இதனால் பிரம்மன் நான்முகன் என்றும் சதுர்முகன் என்றும் பெயர் பெற்றார்.

தரிசன இடங்கள்

இவரை வழிபட திருக்கண்டியூர் செல்ல வேண்டும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப்படுகின்றார்.

சேவை தொடர்பு

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Receive Divine Blessings of Lord Shiva
Participate in sacred Shiva rituals and homams performed with authentic Vedic traditions, devotion, and spiritual energy.
SPECIAL HOMAM OFFER

Rudra Homam

Starting from
₹11348
Lord Shiva blessings • Protection, peace & spiritual strength
  • Removes negative energies
  • Brings spiritual positivity
  • Supports health & success
  • Receives Shiva blessings

Categories