சண்ட தாண்டவ மூர்த்தி | திரிகாலா - பரமசிவனின் 64 அவதாரங்கள்

சிவன், காளி, பைரவர் இணைந்த தாண்டவ ரகசியம்

சிவனை நினைத்து, சிவமயமாய், “சிவனே” என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும், நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலைக் குறிப்புகளும் புராணங்களும் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப் பிரபஞ்சத்தை காத்து அருள்புரிகின்றார்.

சிவனின் அறுபத்தி நான்கு தாண்டவ வடிவங்களில், சண்ட தாண்டவ மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். சண்ட தாண்டவ மூர்த்தி, காளி காண ஆடிய நடன வடிவாகும்.

பெயர் : சண்ட தாண்டவ மூர்த்தி

வாகனம் : நந்தி தேவர்

மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்

சிவ அவதார காரணி

திருவாலங்காட்டில் இறைவனின் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர், அங்கு தாண்டவ நடனத்தைக் காட்ட வேண்டி தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் இருந்த பாம்பு, அவரது திருவிரலில் விஷம் கக்கியது.இதனைக் கண்ட இடபம், “நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்க வேண்டும்” என்று கார்கோடகனிடம் கூறியது. கார்கோடகனும் பயந்து சிவபெருமானிடம் முறையிட்டது.

உடனே சிவபெருமான், “திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்ட தாண்டவத்தை தரிசித்த பின் கைலாயம் வருவாய்” என்று அருளினார்.திருவாலங்காடு சென்ற கார்கோடகன், சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும் சப்தமாதர்கள் மற்றும் சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி, அவர்கள் இருவரையும் வதைத்தார்.அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்தபீசன்.அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால், அதுவொரு இரத்தபீசனாக மாறிவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி, பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள்.

காளி, அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகினாள். போர் நல்ல முறையில் முடிந்தது.பார்வதி, சண்டியாகிய காளி தேவி, சிவபெருமானிடம் நடனம் செய்து, அவருடன் வசிக்கும் வரத்தையும் பெற்றுக் கொண்டு சென்றார்.அசுரனின் மாமிசத்தையும் இரத்தத்தையும் குடித்ததால், காளி தேவி யாருக்கும் அடங்காமல் வனங்களில் அரசாட்சி புரிந்து வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி, அட்டகாசத்தை ஆரம்பித்தார்.

இச்செய்தி முனிவர்கள் மூலம் நாரதருக்கு தெரிவிக்கப்பட்டது. நாரதர் மூலம் சிவபெருமானிடம் அறிவிக்கப்பட்டது.உடனே சிவபெருமான் பைரவராக மாறி போர் புரிந்தார். போரில் காளி தேவி தோல்வியுற்றார்.தோற்ற காளி, நடனப் போருக்கு பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து, தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார்.

நவரசங்கள் ததும்ப, இருவரும் சலிக்காமல் நடனம் புரிந்தனர்.இந்த சண்ட தாண்டவம் நடைபெறும் போது, சிவபெருமானின் குண்டலம் கீழே விழுந்தது. அதைத் தன் காலால் எடுத்து, காதில் பொருத்தினார்.இதனைப் போட்டியாக ஆடிய காளி, வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். காளியின் செருக்கு அழிந்தது.சுனந்தர், கார்கோடகன், மேலும் அனைத்து தேவர்கள் மற்றும் முனிவர்கள், எல்லாக் காலமும் காணும்படி இறைவன் தாண்டவக் கோலத்தை அருளினார்.

இக்காரணத்தால், இறைவனை சண்ட தாண்டவ மூர்த்தி என அழைக்கிறோம்.

இவரை தரிசிக்கும் முறை

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே கீழ்க் கோட்டம் அமைந்துள்ளது. இத்தலத்தின் இறைவன் பெயர் நாகநாதர். இறைவி பெயர் பெரியநாயகி ஆவார்.

இங்குள்ள நடராஜ மண்டபத்தை நாம் பேரம்பலம் என அழைக்கிறோம்.

திரிகாலா தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு தொடர்புகொள்ளவும்.

திரிகாலா - கர்மவினைத் தீர்வுகள் 

Post Tags

Comments

Add a Comment

Categories