ஞான உபதேச அவதாரத்தின் தெய்வீக ரகசியம்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவபெருமான் இவ்வுலகைப் காத்து அருள்புரிகின்றார்.
தட்சிணாமூர்த்தி விவரங்கள்
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவமானது தென்முகமாக அமர்ந்து ஞான உபதேசம் அருளும் தெய்வீகக் கோலமாகும்.
பெயர் : தட்சிணாமூர்த்தி
வாகனம் : —
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
தட்சிணாமூர்த்தி அவதார காரணி
ஒருமுறை கையிலையில் சிவபெருமானுடன் உரையாடிக் கொண்டிருந்த பார்வதி தேவியார், தட்சனின் மகளாக பிறந்ததால் தாட்சாயினி என்ற பெயர் தமக்கு ஏற்பட்டதாகவும், தங்களை அவமதித்த தட்சனின் பெயரால் அழைக்கப்படுவது விருப்பமில்லை எனவும் கூறி, அந்தப் பெயர் மாற வேண்டுமென வரம் கேட்டார்.
அதற்கு சிவபெருமான், மலைமன்னன் குழந்தை வரம் வேண்டி தவம் செய்கிறான், அவனுக்கு மகளாகப் பிறந்து, பின்னர் நான் வந்து மணமுடிப்பேன் என கூறினார். அதன்படி பார்வதி தேவி குழந்தையாகப் பிறந்து வளரத் தொடங்கினார். இந்நிலையில் நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் ஆகிய சனகாதி முனிவர்கள் வேதாகமங்களை முழுமையாகக் கற்றிருந்தாலும், மன அமைதி பெற முடியாமல் இருந்தனர்.
அவர்கள் சிவபெருமானை அணுகி, வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினர். சிவபெருமானும் நந்திதேவரிடம், மன்மதனைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் எனக் கட்டளையிட்டார். பின்னர் சனகாதி முனிவர்களுக்கு பதி, பசு, பாசம் ஆகிய தத்துவங்களை விரிவாக விளக்கினார். மேலும் மனம் ஒடுங்கும் வகையில் ஞான உபதேசம் வேண்டியபோது, மெல்லிய புன்னகையுடன் மௌனமாக அமர்ந்தார்.
அதே நிலையில் சனகாதி முனிவர்களும் தியானத்தில் அமர்ந்தனர். அச்சமயம் மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மீது பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அவனை எரித்தார். பின்னர் தியான நிலை நீங்கி, சனகாதி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இவ்வாறு தென்முகமாக அமர்ந்து ஞான உபதேசம் செய்த கோலமே தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படுகிறது.
தட்சிணாமூர்த்தி தரிசிக்கும் முறை
தட்சிணாமூர்த்தியை தரிசிக்கச் செல்லவேண்டிய தலம் ஆலங்குடி ஆகும். குடந்தை – நீடாமங்கலம் வழியாக இத்தலம் அமைந்துள்ளது.
இத்தல இறைவன் காசியாரணியர் என்றும், இறைவி உமையம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகக் கருதப்படுகிறது.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment