கருடனின் கர்வம் அடங்க அருளிய கருடன் அருகிருந்த மூர்த்தி
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், கருடன் அருகிருந்த மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் கருடன் அருகிருந்த மூர்த்தி கருடனுக்கு அருளிய வடிவம்.
பெயர் : கருடன் அருகிருந்த மூர்த்தி
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
சிவ அவதார காரணி
ஐம்படைகளையும் கையில் ஏந்திக் கொண்டும் பாற்கடலில் தன்தேவியருடனும், பாம்பாணையில் அமர்ந்திருக்கிறார் திருமால். இவர் தேவராலும் போற்றப்படவர். இவர்க்கு ஒருமுறை சிவதரிசனம் செய்ய வேண்டி தனது வாகனமான கருடன் மீதேறி வான்வழியே சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலைச் சென்றார். அங்கே நந்தி தேவனின் அனுமதியுடன் உட்சென்றார். கருடன் வெளியே இருக்கலானான்.
உள்ளே சிவனார் நீலகண்டமும், முக்கண்களுடன், மான், மழு, வரத, அபய முத்திரை கொண்ட சதுர்புஜங்களுடன், கங்கையில் கொன்றை மலரை அணிந்து சடாமுடியுடன் அர்த்தநாரீஸ்வரராக நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட மேடையில் வீற்றிருக்கிறார். இக்காட்சியைக் கண்ட அனைவரும் அவரை ஆராதித்தனர்.
திருமால் உட்சென்று நெடுநேரமாகியும் திரும்ப வராததால் கருடன் உட்செல்ல முயன்றது. அதற்கு நந்தி தேவர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட கருடன் நந்தி தேவரைப் பார்த்து, என்னை தடுக்க நீ யார்? நீயே சுடலையாடியின் வாகனம்; உன்னை விரைவில் கொல்வேன் என்றது.
இதனைக் கேட்ட நந்தி தேவர் ஆழ்ந்து தன் மூச்சை இழுத்தும் வெளியிட்டும் வந்தது. அக்காற்றில் அகப்பட்ட கருடன் நிலை தடுமாறியது.
திருமால் தான் தன்னைக் காப்பவர் என எண்ணி, இறைவா பாற்கடல் வண்ணா என்னைக் காக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது. சிவதரிசனம் செய்து கொண்டிருந்த திருமாலின் காதில் இது விழ, அவர் சிவபெருமானிடம் வேண்டினார்.
கருடனை மன்னித்து நந்தி தேவர் விடுவிக்கும்படி சிவபெருமான் கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கு குற்றுயிரும் குலையுயிருமான கருடனை நந்தி தேவர் விடுவித்தார்.
கருடன் தன் கர்வம் அடங்கி, பின்னர் பழையபடி திருமாலுடன் பாற்கடல் சென்றது. நந்தி தேவரால் துன்புற்ற கருடனுக்கு அருள் செய்த காரணத்தால் சிவபெருமானுக்கு கருடன் அருகிருந்த மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
இவரை தரிசிக்கும் முறை
குடந்தை – ஆவுர் செல்லும் வழியில் உள்ளது பட்டீஸ்வரம். இறைவன் பெயர் பட்டீஸ்வரநாதர், இறைவி பெயர் பல்டனை நாயகி. இங்கு நந்தி சற்று விலகியவாறு அமைந்துள்ளது.
இதற்குக் காரணமாக சம்பந்தர் வெளியே நின்று வழிபட்டபோது நந்தி வழிவிட்டு விலகியதாக கூறுவர்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment