பைரவரை எந்தெந்த நாளில் வணங்க வேண்டும்

பைரவரை எந்தெந்த நாளில் வணங்க வேண்டும்

சிவபெருமானின் அவதாரமான பைரவரை எந்தெந்த நாளில் எப்படி வழங்கினால் நம்முடைய வாழ்க்கையில் துன்பம் நீங்கி இன்பமாக வாழலாம் என்ற தகவல் இதோ உங்களுக்காக.

சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவர் தான் பைரவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான் அனைத்து சிவாலங்களையும் பைரவருக்கு என்று தனியாக ஒரு சன்னதி இருக்கும். சிவாலயத்தில் சிவபெருமானுக்கு இருக்கும் அத்தனை விசேஷங்களும் இந்த பைரவருக்கும் இருக்கும்.

ஒருவருடைய பயத்தை நீக்கி எதிரி தொல்லைகளில் இருந்து காத்து, கடன் தொல்லை தீர்ப்பது என ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த தெய்வம் தான் இந்த பைரவர். அத்தகைய பைரவரை நாம் எந்த கிழமையில் எப்படி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவரை ராகு கால நேரத்தில் வழிபட வேண்டும். அப்படி வழிபடும் போது வடை மாலை சாற்றி ருத்ராபிஷேகம் செய்தால் பணப்பிரச்சனை கடன் பிரச்சனை தீர்வதுடன் திருமண தடைகள் நீங்கும். இத்துடன் பைரவருக்கு முந்திரி மாலையும் புணுகும் சாற்றி வழிபட்டால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமைகளில் நாம் பைரவரை வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். அது மட்டும் இன்றி சங்கட சதுர்த்தி தினங்களில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதும் புணுகு சாற்றுவதும் சந்தன காப்பு செய்து வழிபடுவதும் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபடும் பொழுது கடன் தொல்லைகள் நீங்கும். அதுமட்டுமின்றி வாழ்க்கையில் நாம் இழந்த பொருள் செல்வம் அனைத்தையும் திரும்ப பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினத்தில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

புதன்கிழமை

புதன்கிழமையில் பைரவரை நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் இப்படி வழிபடுவதன் மூலம் வீடு மனை சொத்து செல்வம் சேர்வதற்கான அனுகூலம் கிடைக்கும். அது மட்டும் இன்றி தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய இந்த நாளில் பைரவரை வணங்கி வரலாம்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமைகளில் பைரவரை நெய் தீபம் ஏற்றி வழிபடும் போது நம் வாழ்க்கையில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் நீங்கும் . அதாவது கண் திருஷ்டி மட்டுமின்றி நமக்கு வேண்டாதவர்கள் நமக்கு கெடுதல் செய்ய நினைத்து செய்யும் அனைத்து தீய செயல்களையும் வேரோடு அழிய வியாழக்கிழமை வழிபாடு உகந்தது.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமையில் பைரவரை வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வதும் வில்வ மாலை கொண்டு வழிபாடு செய்வதும் நம்முடைய வாழ்க்கையில் சகல செல்வத்தையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.

சனிக்கிழமை

சனி பகவானின் குரு இந்த பைரவர் ஆகையால் சனிக்கிழமையில் பைரவரின் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டால் சனியின் பாதிப்பான ஏழரை சனி அஷ்டம சனி உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் நீங்கும்.

இத்துடன் பைரவருக்கு அஷ்டமி தினம் மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. இதில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி இந்த இரண்டிலும் அவரை வழிபடுவது மேலும் சிறப்பானது. நம்முடைய கடன் துன்பங்கள் தீர தேய்பிறை அஷ்டமியிலும், வாழ்க்கையில் செல்வ வளம் வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பவர்கள் வளர்பிறை அஷ்டமியிலும் பைரவரை வணங்க வேண்டும்.

பைரவரை எந்த நாளில் எப்படி வணங்க வேண்டும் என்ற இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இனி நீங்களும் இது போல வழிபட்டு வாழ்க்கையில் வசந்தத்தை பெறலாம்.

Book Your Online Bhairavar Puja online Now at Tirikala


Review

Write your Comment

Comments Section

Write Your Comment

Type The Code: