கிராத மூர்த்தி | திரிகாலா - சிவனின் 64 தாண்டவ அவதாரங்கள்

கிராத மூர்த்தி – அர்ச்சுனனுக்கு அருளிய சிவ அவதாரம்

சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்திநான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களை புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்தைக் காத்து அருள்புரிகிறார்.

கிராத மூர்த்தி வடிவம்

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், கிராத மூர்த்தி – வேட மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இக்கிராத மூர்த்தி – வேட மூர்த்தி வடிவமானது ஐராவதத்திற்கு அருளிய வடிவம்.

பெயர்: கிராத மூர்த்தி

வாகனம்: நாய்

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

சிவ அவதாரக் காரணம்

பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அங்கே அவர்களின் குகைகளை கேட்கவும் ஆலோசனை வழங்கவும், மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றிப் பேசவும் வியாசமுனிவர் கானகம் சென்றார். பலவாரமாக இன்னல்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு சக்திவாய்ந்த அஸ்திரத்தைப் பெற சிவபெருமானை நோக்கி தவம் செய்ய அர்ச்சுனன் முன்வந்தான். குறிப்பிட்ட நல்ல நாளில், உடையுடன், பொருளுடன் அர்ச்சுனன் வெள்ளிமலையை அடைந்தான்.

அங்கே வசிக்கும் முனிவர்கள், ரிஷிகள், தேவகணங்களின் ஆசிகளுடன், சிவபெருமானை மனதில் நினைத்து, வெந்நீரணிந்து இருகைகூப்பி ஒரு காலை மடித்து தவம் செய்யத் தொடங்கினார்.அர்ச்சுனனின் தவத்தை சோதிக்க இந்திரன் நாடியக் கன்னிகளை அனுப்பி தவத்தை கலையச் செய்ய முயன்றார், ஆனால் அது தோல்வியடைந்தது.

தேவகணங்கள் மூலம் அர்ச்சுனனின் தவத்தை அறிந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் கூறினார். அப்போது சிவபெருமான் வேடராகவும், பார்வதி தேவி வேடுவச்சியாகவும், முருகன் குழந்தையாகவும், வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும், தேவகணங்கள் வேட்டுவக் கூட்டமாகவும் மாறினர். அர்ச்சுனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர்.

அங்கே அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக்கண்ட சிவபெருமானும் பன்றியில் அம்புவிட்டு, அர்ச்சுனனும் பன்றியில் அம்புவிட்டு, தேவகணங்கள் வேட்டுவக் கூட்டமாக இருந்தனர். ஒருவர் கொன்ற மிருகத்தை மற்றொருவர் சொந்தம் கொள்வதாக இல்லை என தீர்மானித்தனர்.

வாய்ச்சண்டை முற்றியது. அர்ச்சுனனின் வில்லின் நாணை சிவபெருமான் அறுத்தார். பதிலுக்கு வில்லால் அர்ச்சுனன் சிவனை அடித்தான். இதனால் உலக உயிர்களின் மீதமும் அதிகாரம் பட்டது. உடன் சிவபெருமான் தம்பதி சமேதராய் காட்சிக் கொடுத்தார். பின் அர்ச்சுனன் அஸ்திரத்தையும் (பாசுபதம்) பெற்றான். முகாசுரனை கொல்ல சிவபெருமானின் ஏற்ற வடிவமே "கிராத மூர்த்தி" ஆகும்.

தரிசிக்கும் முறை

குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம் புதூர் ஆகும். அவ்வூரில் இத்தலத்தை "நம்பர் கோயில்" என அழைக்கின்றனர். இறைவன் பெயர் வில்வாரண்யேஸ்வரர், இறைவி பெயர் அழகு நாச்சியார்.

சேவை தொடர்பு

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்.

Post Tags

Comments

Add a Comment

Categories