லிங்கோத்பவர் மூர்த்தி – அகந்தை அழித்த ஜோதி வடிவம்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பலதெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ அவதார, லிங்கோத்பவர்மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் லிங்கோத்பவர்மூர்த்தி வடிவமானது பிரம்மன் மற்றும் திருமால் அகந்தை அழிக்க சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய வடிவம்.
பெயர் : லிங்கோத்பவர்
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
சிவ அவதார காரணி
பாடல்:
"மாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடி பண்பன் நல்லனே"
- திருமுறை பாடல்
பாடல்பொருள்: திருமால் நான்முக ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியு பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.
விளக்கம்: நான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன் உறங்கினார். இதனை கண்ணுற்ற அனைவரும் குழந்தையை ஆராதித்தனர். ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார். உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார்.
பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல் ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார். இடையில் ஏற்பட்ட சம்பவம் தெரியாததால், இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற எண்ணத்துடன் உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில் திருமால் இருப்பதைக் கண்டு அவரிடம் சென்று நீ யார்? என வினவினார்.
அவரோ நான் உனது தந்தை என்றார். இதனால் பெரும் வாக்குவாதம் இருவருக்கும் ஏற்பட்டது. அது யார் பெரியவர் என்றளவில் பெரும் போரானது. இப் போரினால் உலக உயிர்கள் அனைத்தும் வாடின. உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது. சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார். மேலும் இனியும் போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார். இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது,
அதிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும் கண்டு வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது.உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட, திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை. இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர். மனம் வருந்தினர். உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர்.
உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும் வணங்கிய சிவலிங்கமே லிங்கோர்பவர் ஆகும்.
சிவ தோற்றம்: சிவாலயங்களின் கருவறையில் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச்சிவமூர்தத்தின் அடியில் வாரக மூர்த்தி வடிவத்தில் திருமாலும் ஈசன் முடியில் அன்னபட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர். சிவராத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் இடம்பெறும். சிவனுக்குரிய 64 வடிவங்களில் ஒன்று அண்ணாமலையார். 'லிங்கோத்பவ மூர்த்தி' என்றும் குறிப்பிடுவர்.
முதல் சிற்பம்: தமிழ்நாட்டில் முதன்முதலில் இராசசிம்ம பல்லவனாலே (கி.பி.700-730) காஞ்சி கைலாசநாதர் கோவில் இலிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் பின்ன முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-953) காலத்திலே சிவாலயங்களின் கருவறையில் பின்புறம் அமைத்தார். இதுவே தொடங்கலாயிற்று; இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இம்முறை நடைமுறைபடுத்தினார்கள்.
இவரை தரிசிக்கும் முறை
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால் நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது. நமக்கு வேண்டிய அனைத்தையும் அளிக்க வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது.
திருவண்ணாமலை: இருவரும் சிவனே சரணம் என்று சிவனை வணங்கினர். உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும் "நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எனக்கு இருவரும் ஒன்றே உயர்வு தாழ்வு கிடையாது" என்றுக் கூறி மறைந்தார்.
வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். இந்த திருவுருவ மேனி தத்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவிலில் அக்னியின் ரூபமாக லிங்கோத்பவர் நின்ற இடத்தில் வருடம் தோறும் நடைபெரும் "அண்ணாமலை ஜோதி" விழா இதை நினைவு கூறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிக்குரிய ஸ்தலமாகும்.
சாப தோஷ நிவர்த்தி முறை: இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளும் விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும் பௌர்ணமி அன்று கொடுக்க சித்தம் தெளிவடையும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்.
கடைசியில் வரும் வரிகள் அருமையாக இருக்கும். "நேற்று வந்த துன்பம் இன்று விலகவும், நாளை நேருகின்ற வாழ்வில் இன்பம் பெருகவும்" என்ற வரும். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வின் துயரம் விலகி இனி வாழ்வில் இன்பம் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment