மச்ச சம்ஹார மூர்த்தி | திரிகாலா - சிவனின் 64 தாண்டவ அவதாரங்கள்

மச்ச சம்ஹார மூர்த்தி – மச்ச வடிவா திருமலை அடக்கிய வடிவம்

சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களை புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்தைக் காத்து அருள்புரிகிறார்.

மச்ச சம்ஹார மூர்த்தி வடிவம்

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், மச்ச சம்ஹார மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்விட வடிவமானது மச்ச வடிவா திருமலை அடக்கிய வடிவம்.

பெயர்: மச்ச சம்ஹார மூர்த்தி

வாகனம்: நந்தி தேவர்

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

சிவ அவதாரக் காரணம்

சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரமனிடம் சென்று, நான்குப் பிரிவான வேதங்களை பிடுங்கிக் கொண்டு கடலிலுள் மறைந்தான். பிரமன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார்.

கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடி கடலை கலக்கிய பிறகு ஒளிந்திருந்த அவனை கண்டுபிடித்து அவனை துன்புறுத்தி கொன்றார். அவனிடமிருந்து பறிக்கப்பட்ட வேதங்களை மீண்டும் பிரமனிடம் சேர்த்தார். ஆனால் சோமுகனின் உடலிருந்து வெளியான இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாக மாற்றியது.

அந்த பெரிய மந்தரம் போன்ற மீன் கடலில் பரவி, அனைத்து மீன்களையும் அழித்தது. இதன் செய்தி தேவர்களுக்கு அறியாமல் சிவபெருமானை நோக்கி வந்தது.

சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி, அக்கடலில் மீனவரைப் பிடிக்க வேண்டும் என உருவம் மாறி மீனைப் பிடித்தார். பின்னர் அதன் கண்னை தோண்டி, தன் மோதிரத்தில் பதித்தார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் பழைய உருவை மீண்டும் கோரினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அந்த மீனை அழிக்க சிவபெருமானால் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி ஆகும்.

தரிசிக்கும் முறை

இவ்வுருவத்தை காஞ்சிபுரம் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் செதுக்கப்பட்ட இந்த உருவத்தை காணலாம்.

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Post Tags

Comments

Add a Comment

Categories