நடராஜர் சதா நிருத்த மூர்த்தி ஆனந்த தாண்டவம்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசியை வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பலதெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், சதா நிருத்த மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். சதா நிருத்த மூர்த்தி எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவாகும்.
பெயர் : சதா நிருத்த மூர்த்தி
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
விளக்கம்
சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்சாட்சரத்தையே தன் மேனியாகக் கொண்டு இருப்பவர். அவரது மூன்று கரங்களும், இருபாதங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை செய்கிறது. அது எப்படியெனில் டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும், அமைந்த கரத்தினால் காத்தலும், மழு தாங்கிய கரத்தினால் அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தலும், அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளலும் புரிகின்றார்.
மேலும் உலக உயிர்கள் அனைத்தும் எங்கும் நிறைந்துள்ள இறைவனுடன் ஐக்கியமாவதைக் குறிக்கிறது. இந்த நடனத்தை இடது புறமாக நின்று தரிசிக்கும் உமாதேவியாரின் தோற்றம். சிவபெருமான் திருத்தக் கோலம் கொண்டு நடனம் புரியும் திருவடியில் நகரமும், திருவயிற்றின் மீது மகரமும், திருத்தோளின் மீது சிகரமும், திருமுகத்தில் வ கரமும், திருமுடியின் மீது ய கரமும் கொண்டு கருணையால் இயற்றினார்.
சிவபெருமான் பல காரணங்களால் பல முறை நடனம் புரிந்துள்ளார். இருப்பினும் உமாதேவியார் தரிசிக்கும் நிலையில் தேவர்கள், சிவகணங்கள் நத்திதேவர் போன்றவர்களோடும், இசைவாத்தியங்களோடும், பஞ்சாட்சரமேனியோடு எப்பொழுதும் திருநடனம் புரிந்து கொண்டே இருப்பதால் இவரது பெயர் சதா நிருத்த மூர்த்தி யாகும்.
தரிசன இடங்கள்
சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டேயுள்ளார். எங்கெங்கெலாம் நடராஜர் இருப்பினும் அவர்களனைவரும் இரவில் இங்கு வருவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் நடராஜ பெருமானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்யலாம். இறைவனைக் கூத்தபிரான் என்றும், இறைவியை சிவகாம சுந்தரி என்றும் அழைப்பர்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment