சிஷ்ய பாவ மூர்த்தி – பிரணவ உபதேச திருவிளையாடல்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிஷ்ய பாவ மூர்த்தி வடிவம்
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், சிஷ்ய பாவ மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவமானது முருகனிடம் பிரணவ பொருளைக் கேட்க சிவபெருமான் மாணவனாக மாறிய தெய்வீகக் கோலமாகும்.
பெயர் : சிஷ்ய பாவ மூர்த்தி
வாகனம் : பொற் ஆசனம்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
சிவ அவதார காரணி
கயிலையில் சிவனைத் தரிசிக்க வந்த பிரமனை கண்ட முருகன், அவரிடம் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார். அதன் பொருள் தெரியாமல் பிரம்மன் தடுமாறியபோது, முருகன் அவரைத் தலையில் குட்டி சிறையிலடைத்தார்.
அதன் பின் படைப்புத் தொழிலை முருகனே மேற்கொள்ளலானார். பிரம்மனின் சிறைவாசத்தால் உலகில் சிருஷ்டி தடைபட்டதால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.சிவபெருமான் முருகனிடம் சென்று, “பிரம்மனை பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் சிறைபடுத்தியிருக்கிறாய், உனக்கு அதன் பொருள் தெரியுமா?” என வினவினார்.
அதற்கு முருகன், பிரணவத்தின் பொருள் தனக்கு தெரியும் என்றும், அறிந்ததை உரைப்பவர் குருவாகவும், அதை கேட்பவர் சீடராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.அதன்படி முருகன் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க, சிவபெருமான் சீடனைப் போல பணிவுடன் அமர்ந்து பிரணவத்தின் பொருளை கேட்டறிந்தார்.
தந்தைக்கே குருவாக இருந்து உபதேசம் செய்ததால், முருகனுக்கு “தகப்பன் சாமி” என்ற திருநாமம் ஏற்பட்டது. சிவபெருமான் சிஷ்யராகவும், குமரன் குருவாகவும் உபதேசம் செய்த இந்த தத்துவ வடிவமே சிஷ்ய பாவ மூர்த்தி ஆகும்.
இவரை தரிசிக்கும் முறை
இவரை தரிசிக்க அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை குடந்தையருகே செல்ல வேண்டும். இத்தலத்திலேயே தந்தைக்கு உபதேசம் வழங்கிய தெய்வீகக் காட்சி நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
சேவை தொடர்பு
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment