கர்மா சுமையை குறைக்க எளிய முறைகள்

கர்மா சுமையை குறைக்க எளிய முறைகள்

கர்மா என்பது அவரவர்  வினைப்பயன்.ஒருவரால் கர்மா வினை அற்ற நிலையை அடைய இயலாது ஆனால் கர்ம சுமையை கழிக்க பண்டைய சாஸ்திரத்தில் நூல்களில் சொல்லப்பட்ட வழிகள் முறைகள் 

நாடி சாஸ்திரத்தில்  ஒவ்வொருவரும் தனித்துவத்துடன்  அவர்களுடைய  கர்மவினைகளை அழிக்கும் பூஜை மூறைகள், விதிகள்  மற்றும் அதற்கு நிகராண அபூர்வ வழிகள் தெரிந்து வாழ்க்கையை மேன்படுத்தும் வழிகளை மஹரிஷிகள் பரிந்துஉறைகிறார்கள் 

உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய நாடி சாஸ்திரத்தில் நூல்களில் சொல்லப்பட்ட வழிகள்

உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

  1. பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
  2. தானியங்கள் வைத்தால் = 5 % (-)
  3. நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
  4. மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
  5. குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
  6. குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
  7. யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
  8. பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
  9. ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
  10. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)
  11. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
  12. கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)
  13. ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதர்வர்க்கும் = 70% (-)
  14. கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
  15. அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
  16. நோயளிகளுக்கு = 93% (-)
  17. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
  18. திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-

  1. கோயில் மயில்களுக்கு
  2. கோயில் காகத்திற்கு
  3. கோயில் சேவல்களுக்கு
  4. கோயில் யானைகளுக்கு
  5. கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு
  6. கோயில் பூசாரி
  7. பிராமனர்களுக்கு உணவு
  8. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு  உணவு
  9. கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்
  10. அன்னதானத்திற்கு உதவுதல்
  11. கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
  12. கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
  13. கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
  14. இறைவனுக்கு பூ மாலை
  15. முன்னோர்கள் வழிபாடு
  16. மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
  17. ஏழை மாணவர்கள் படிக்க
  18. 108 தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,

மற்றும் கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தையும் உணர்ந்து செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம்.

இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ,பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. 

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. 

அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.

அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து பகிர்வே.

எங்களின் தனித்துவமான கர்மா தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு  தொடர்புகொள்ளவும் 


Review

Write your Comment

Comments Section

Write Your Comment

Type The Code: