சோமாஸ்கந்த மூர்த்தி – கருணையின் முகம்
சிவனை நினைத்து, சிவமயமாகி, “சிவனே” என்று வாழ நினைக்கும் அனைவருக்கும், சிவன் அருளால் சிவன் தாள் பற்றிப் பயணிக்க விரும்பும் யாவருக்கும், நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
பக்தர்கள் தன்னிடம் அடைக்கலம் அடையும் போது, அவர்களை எந்தச் சூழலிலும் காத்து அருள்வதே சிவனின் இயல்பு. அதேபோல், உலகில் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தியுள்ளார். நாடி ஓலை குறிப்புகளும் புராணங்களும், சிவபெருமான் அறுபத்திநான்கு திருமேனிகளை கொண்டு இவ்வுலகைக் காத்தார் என்பதை தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும், பிரபஞ்சத்தின் சமநிலையை நிலைநிறுத்தி, உயிர்களுக்குப் பாதுகாப்பாக நின்றார் சிவன்.
அந்த 64 தாண்டவ வடிவங்களில், சோமாஸ்கந்த மூர்த்தி எனப்படும் வடிவமும் ஒன்றாகும். இந்த வடிவம், நெற்றி தீ பொறியில் உருவான முருகப் பெருமானுடன் இணைந்து, சிவ, பார்வதி, கந்தன் ஆகிய மூவர் சேர்ந்து உருவாக்கிய கருணையின் வடிவமாகும்.
பெயர்: சோமாஸ்கந்த மூர்த்தி
வாகனம்: நந்தி தேவர்
மூர்த்தி வகை: மகேசுவர மூர்த்தம்
சிவன், பார்வதி, கந்தன் – ஒரே திருவுருவம்
சோமாஸ்கந்தர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக வணங்கப்படும் வடிவமாகும். சிவபார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனை காட்சியளிக்கும் முறையே இதன் ஆரம்பம். இவ்வடிவத்தில் சைவம் (சிவன்), சக்தி (உமை), கௌமாரம் (கந்தன்) ஆகிய பிரதானத் தெய்வங்கள் இடம்பெறுகின்றன.
மகேசுவர வடிவங்களில் இந்த திருவுருவம், தமிழகத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பான வடிவமாகும். பஞ்சகுண சிவமூர்த்திகளில், சோமாஸ்கந்தர் "கருணா மூர்த்தி" என அறியப்படுகிறார்.
வேறு பெயர்களாக குழந்தை நாயகர், இளமுருகு உடனுறையும் அம்மையப்பர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு ஆகிய பெயர்களும் பயன்படுகின்றன.
உருவத்தின் காரணம்
சூரபத்மன் தனது கொடுமைகளை எல்லைக்கடந்து நடந்துவிட்டான். அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள், சிவபெருமானிடம் சென்று உதவி கோரினர். “வல்லமை பெற்ற ஒரே மகனே சூரபத்மனை வெல்ல முடியும்” என்று துதித்தனர்.
சிவபெருமான், மனமிரங்கி, தமது ஆறு முகத்திலும் நெற்றிக் கண்களிலும் இருந்து ஆறு நெருப்புப் பொறிகள் வெளிக்கொடுத்து பரப்பினார். அந்த வெப்பம் முழுஉலகத்தையும் ஆழமாக தாக்கியது. ஆனால், தேவர்கள் அதைத் தாங்க முடியாமல் கலங்கினர். வினையை சரிசெய்ய, சிவன் வாயு தேவனையும் அக்னிதேவனையும் அழைத்து, ஆறு நெருப்பு பொறிகளை கங்கை நதியில் விட்டார். கங்கை அதை சரவணப் பொய்கையில் சேர்த்தது.
கார்த்திகைப் பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள்
சரவணப் பொய்கையில் ஆறு நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. பரமேஸ்வரன் அவர்களை கார்த்திகைப் பெண்களிடம் வளர்க்க ஒப்படைத்தார். கார்த்திகைப் பெண்கள் அன்பும் பக்தியும் கலந்து குழந்தைகளை பாலூட்டி வளர்த்தனர்.
பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாக உருவெடுத்து வளர்ந்தனர்.
கந்தன் பிறப்பு
சில காலம் கழித்து, சரவணப் பொய்கையில் வளர்ந்த குமாரனை காண, சிவன் மற்றும் பார்வதி தேவிகள் வாகனத்தில் முன் சென்றனர். அந்த நேரத்தில், ஆறு குழந்தைகளை பார்வதி ஒரேகாலத்தில் தூக்குகையில், அவர்கள் அனைத்தும் ஒரே குழந்தையாக மாறியது.
அந்த குழந்தை ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டவர். அதன் பேரில் கந்தன் மற்றும் ஆறுமுகன் என அழைக்கப்பட்டார். பின்னர் மூவரும் வெள்ளிமலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்து அருள் புரிந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி தோற்றம்.
தரிசிக்கும் முறை
சோமாஸ்கந்த மூர்த்தியை தரிசிக்க விரும்புவோர் திருவாரூர் செல்ல வேண்டும். மேலும், கீழ்க்காணும் ஆலயங்களிலும் அவர் தரிசனம் செய்யப்படுகிறார்:
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், குமரக்கோட்டம், காமாட்சியம்மன் கோயில், தென்காசி காசி விஸ்வநா கோயில், இலங்கை திருக்கேதீஸ்வரம்.
திரிகாலா தனித்துவமான கர்மா தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனைகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு தொடர்புகொள்ளலாம்.
Comments
Add a Comment