உமா மகேஸ்வரர் – மகேசுவர மூர்த்தி, தரிசன வழிகாட்டல் மற்றும் வரலாறு

உமா மகேஸ்வரர் சிவன் மற்றும் உமாவின் ஐக்கியம்

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.

உமா மகேஸ்வரர் வடிவம்

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், உமாமகேஸ்வரர் வடிவமும் ஒன்றாகும். இவ் உமாமகேஸ்வரர் வடிவமானது உமையுடன் கயிலையில் பொருந்திய வடிவமாகும்.

பெயர் : உமா மகேச மூர்த்தி

வாகனம் : பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனம்

மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்

சிவ அவதார காரணி

திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் எண்ணப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார்.

பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்.

பராசக்தி – இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.

ஆதிசக்தி – பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இச்சா சக்தி – ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

ஞானசக்தி – இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

கிரியாசக்தி – ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையை அளிப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானம் ஒளிரச் செய்பவர்.

இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவன் – சக்தி பிரிக்க முடியாத ஒன்றாகும்.

தோற்றம்

மகேசன் சுகாசனத்தில் அமர்ந்து, வெண்ணீறு பூசிய மேனியும், மான், மழு, அஞ்சேல், அபயம் தாங்கிய நான்கு கரங்களும் கொண்டு, அருகே குவளை மலரேந்திய கரத்தினளாகக் காட்சிதரும் உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பான்.

சில வடிவங்களில், ஈசனின் திருமடியில் அம்மை அமர்ந்திருப்பாள். கயிலையில் அம்மையும் அப்பனும் அளிக்கும் அருட்காட்சியே இந்தக் கோலமாகும்.

இவரை தரிசிக்கும் முறை

இத்தகைய சிறப்பு வாய்ந்த உமா மகேஸ்வர மூர்த்தியை நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள கோனேரி ராஜபுரம் ஆகும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே உமாமகேஸ்வரர் ஆவார். இறைவி பெயர் தேகசௌந்தரி என்பதாகும்.

சேவை தொடர்பு

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Post Tags

Comments

Add a Comment

Categories