உமேசமூர்த்தி – உமையுடன் இணைந்த சிவன்
சிவனை நினைத்து, சிவமயமாய், “சிவனே” என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இவ்வ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், உமேஷா மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வ் உமேஷா மூர்த்தி வடிவமானது உமையுடன் நின்றருளும் வடிவம்.
பெயர்: உமேசமூர்த்தி
வாகனம்: காளை
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
சிவ அவதார காரணி
படைப்பின் கடவுளான பிரம்மா, படைத்தல் தொழிலுக்கும் தனக்கும் உதவியாக சநகர், சநந்தனர், சனத்குமாரர், சதானந்தர் என்ற நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார்.
அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்கொள்ளாமல், ஞானம் பெற முயன்றனர். குரு இல்லாமல் ஞானம் பெற முடியுமா? எனவே ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். ஆனால் உரிய குரு கிடைக்கவில்லை.
நான்முகன் விஷ்ணுவிடம் புதல்வர்கள் குறைகளைச் சொன்னார். இக்குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே. எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர். அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்கள் நால்வரும் எரிந்து சாம்பலானார்கள்.
அப்பொழுது தனிமையில் இருந்த சிவபெருமான் தன் இடதுபுற தோளைப்பார்க்க, அவரது சக்தியே உமாதேவியாக வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன், உமாதேவியை தன் இடபுறமாக இருக்கச் செய்தார். பின்னர் எரிந்து சாம்பலானவர்களை முன்போல் படைத்தார். அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால், அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார். உலகமே செழித்தது.
உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை உமையவளாக இடது பாகத்தில் வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே, சிவபெருமானது பெயர்களில் உமேசமூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது.
இவரை தரிசிக்கும் முறை
இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் தலம் திருவிடைமருதூர் ஆகும்.
திரிகாலா தனித்துவமான கர்மா தீர்வுகளுக்கான பரிகார ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு தொடர்புகொள்ளவும்.
Comments
Add a Comment