துர்கா தேவியின் கடுமையான மற்றும் இரக்கமுள்ள வடிவமான சண்டி தேவி, ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவுகரமான தெய்வீக பெண் ஆற்றலைக் குறிக்கிறது. தேவியானவள் தீமையை அழிக்கவும், தன் பக்தர்களைப் பாதுகாக்கவும், பிரபஞ்சத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் சக்தியைப் பிரதிபலிக்கிறாள். சண்டி ஹோமம் தனது பக்தர்களுக்கு தைரியம், வலிமை மற்றும் தெய்வீக பாதுகாப்பை வழங்கும் சண்டி தேவியின் ஆசீர்வாதத்தை வேண்டி மேற்கொள்ளபடுகிறது.
சண்டி ஹோமம் என்பது தெய்வீக பெண் ஆற்றல், வலிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் உருவகமான சண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான பண்டைய சடங்காகும். தைரியம், தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுவதற்கு, ஆன்மீக மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக சண்டி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற இந்த சக்திவாய்ந்த ஹோமம் செய்யப்படுகிறது
இந்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் சண்டி தேவியின் தெய்வீக பிரசன்னத்தைப் பெறுவதொடு, தேவியினுடைய சக்திவாய்ந்த ஆற்றல், கருணை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றையும் பெறலாம்.
சண்டி ஹோமத்தை செய்வதால் துர்கா தேவியின் அருளைப் பெற்று தைரியமுடன் வாழ்க்கையில் வரும் தடைகளை கடப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
எங்களுடைய ஆசான் மற்றும் வல்லுனர்கள் உங்களுக்குரிய கர்ம வினைகள் மற்றும் உங்களுடைய பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவைகளை விண்வெளி சாஸ்திரத்துடன் ஆராய்ந்து சண்டி ஹோமம் செய்வதற்கு தகுந்த நேரம் மற்றும் தேதியை தீர்மானித்து பின் உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.
ஹோமம் செய்வதற்கு உகந்த இடம்: கோவில்கள் மற்றும் ஏனைய மத கூட்டங்கள் நடத்தக்கூடிய இடங்கள்.
மங்களகரமான நேரம்: சூரிய உதயத்திற்கு முன் அல்லது அஸ்தமனத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சூரிய உதயத்திற்கு முன் அல்லது அஸ்தமனத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை தேவைகேற்ப மேற்கொள்ளலாம்.
எங்களுடைய (திரிகாலா) உயர்தரவீடியோஒளிபரப்பின்(High Quality Video Streaming)மூலம் இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கான இந்த சண்டி ஹோமத்தில் பங்கேற்பதற்காக சிறப்பான தொழில்நுட்ப உட்கட்டமைபுடன் அமைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய தலைமை குரு உங்கள் சார்பாக மற்றும் உங்களிடம் உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில் ஹோமத்தை மேற்கொள்வார். உங்களது கர்மவினை நிவர்த்தி செய்வதற்கு நேரிலோ அல்லது நேரடி ஒளிபரப்பு மூலமாகவோ அவர் அறிவுரைப்படி பூஜையில் பங்கேற்று உங்களுடைய பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் எந்த ஒரு கூடுதல் செலவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே நிறைவேற்றி கொள்ளலாம்.
துர்கா தேவியின் ஆசிர்வாதங்கள்: துர்கா தேவியின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பாதுகாப்பு, வெற்றி ஆன்மீக வழியில் முன்னேற்றம் மற்றும் அனைத்து நலன்களையும் பெறலாம்.
பிரசாதம்: ஹோமத்தின் மூலம் உங்களுடைய வேண்டுதல்கள் நல்ல படியாக நிறைவேறிய பிறகு உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க பெறுவீர்கள் மற்றும் பிரசாதமானது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், உங்களுக்கு வாழ்க்கையில் இனி நல்ல காலங்கள் அமைய உறுதிப்படுத்தி கொள்கிறோம்.
திரிகாலாவின் ஆன்லைன் ஹோமம் (நெருப்பினால் செய்யகூடிய சடங்குகள்) சேவைகளானது உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே தெய்வீக அருளைப் பெறுவதற்கும் பண்டைய சடங்குகளை அனுபவிப்பதற்கான உங்களுடைய நம்பிக்கையான இடமாக திகழ்கிறது. சண்டி ஹோமத்தின் ஆற்றலின் புனிதத்தன்மையையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் (Virtual platform) மூலம் நேரடியாக உங்களுக்குக் கொண்டு வருகிறோம், நீங்கள் இருக்கும் இடத்தில இருந்து கொண்டும் அல்லது நேரிலும் இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்று கொள்ளலாம். நீங்கள் ஆன்மீக வளர்ச்சி அல்லது அதில் குறிப்பிட்ட நோக்கங்களை எதிர்பார்பவராக இருந்தாலும், எங்கள் ஹோம சேவைகள் மூலம் (நெருப்பை வைத்து செய்யும் சடங்குகள்) ஆன்மிகத்துடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உங்களுடைய கர்ம வினைகளினால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்கவும் வாழ்க்கையில் வெற்றி பெறும் சந்தர்பத்தை உருவாக்கி கொடுக்கிறது.
சண்டி ஹோமத்தை மிகுந்த பக்தியுடனும், மனத்தூய்மையுடனும், வாழ்க்கையில் கர்ம வினைகளால் ஏற்படும் தடைகளை நீக்க பெறுவதற்கும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, திரிகாலாவின் குருநாதர் தங்களுடைய கர்ம சடங்குகளை அதற்குரிய ஆகம விதிகளின் படி துல்லியமாகவும் மேலும் எங்களுடைய தலைமை குருநாதர் அவர்களின் மேற்பார்வையில் மிகவும் நேர்த்தியாக ஹோமத்தை மேற்கொள்வதனால் ஏற்படும் ஒலி மற்றும் ஒளியின் ஆற்றல் மூலம் பிரபஞ்ச ஆற்றலுடன் பிணைக்க வழி வகுக்கிறது. இந்த ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆற்றல், தேவியின் சக்தி வாய்ந்த ஆற்றல், கருணை மற்றும் பாதுகாப்பை வெளிக்கொணர அதிகபட்ச செயல்திறன் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களை உறுதிப்படுத்த உதவுகிறது.
திரிகாலாவில் செய்யப்படும் சண்டி ஹோமம் என்பது பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு புனிதமான சடங்காகும்:
பிரசன்னம் பூஜை
புண்யாஹ வசனம்
கணபதி பூஜை
மகா சங்கல்பம்
கும்ப கலச பூஜை
ஹோமம் மந்திரங்களை உச்சரிப்பது
மங்கள தீப ஒளி எழுப்புதல்
பூர்ணாஹுதி
அபிசேகம் (நீரேற்றம்)*
தெய்வீகத்திற்கு தீபா ஆரத்தி
நவக்கிரக சாந்தி
உணவு தானம்
*
13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எங்கள் மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்கள் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் இறை அருளால் சிவஞான ஜீவசமாதி ஏறினார். தன் பயிற்சியினால் ஞானத்தில் தெளிவு பெற்று அதில் உள்ளார்ந்த ஆன்மீக சித்தாந்தங்கள் மற்றும் பிணைக்கப்பட்ட மனித குலத்தின் கர்மவினை வாழ்க்கை சவால்களை அகற்றுவதற்காக நெறிமுறைகள் தனது சீடர்களுக்கு போதனைகள் மூலம் இன்றும் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.
ஐயா சித்தர் சிவப்பிரகாசம் அவர்களின் மானசீக சீடர்கள் ஆகிய எங்கள் குருமார்கள் ஒவ்வொரு குறைந்தது 15 வருடங்களாகவும், சிலர் கடந்த 45 வருடங்களாகவும் அய்யாவின் போதனைகளில் இருந்து கற்றதில் மூலம் கர்ம வினையால் மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து சவால்களுக்கும் சமன் செய்வதற்கான அறிவுரைகள் மற்றும் நிரந்தர தீர்வு நெறிமுறைகள் மக்களுக்கு வழிகாட்டுதலின் மூலம் உதவுகின்றனர்.
தனிமனிதனின் கர்மவினைகளை ஆராய்ந்து , அதன் செயல் வினைகளை பகுப்பாய்வதின் பலனாக மனித வாழ்வை மேம்படுவதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதே எங்களது நிபுணத்துவம். கர்ம வினைகளை பகுப்பாய்வதில் முதன்மையாக விளங்குவது தமிழர் பாரம்பரிய உடன் பிணைக்கப்பட்ட பழங்கால ஆகம சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு முறைகள். இந்த முறைகளை கையாள்வதில் செயல் அனுபவம் மிக்க நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.
மேலும் ஒருவருடைய கர்மவினைகளை அகற்றுவதற்கான எதிர்வினை மற்றும் எதிர் மறை ஆற்றல்களையும் கையாள்வதற்காக தனித்துவம் மிக்க பரசுராமகல்ப சூத்திரம்,தந்திர சமுச்சயம்,பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தன்னுள் கொண்டுள்ள நிகமா சாஸ்திரத்தில் நடைமுறை அனுபவம் தேர்ச்சி பெற்ற சிறந்த நிபுணர்களாக எங்கள் குருமார்கள் விளங்குகிறார்கள்.
கர்மவினை தீர்வுகள் அனைத்தும் தனித்துவமாக செயல்முறை படுத்துவதன் மூலம் உங்களின் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர தீர்வு பெற உதவுகின்றன. அதன் அடிப்படையில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை நிவர்த்தி செய்வதற்காக பிரத்தியோகமாக எங்களின் அணுகுமுறைகள் மற்றும் சேவைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப பரிகார முறைகள் அவர்களுக்கு தகுந்த கோயில்கள் , யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய அனைத்து சடங்குகளையும் மேற்கொள்வதற்காக எங்களுடைய திரிகாலாவின் உள்கட்டமைப்பு பிரத்யோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் தங்களின் கர்மவினை பரிகாரங்கள் மிக நேர்த்தியாக அதிகாரபூர்வமாக செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை உறுதி அளிக்கிறது.
Worshipping Our Varahi Yantra will help to enhance inner strength, courage to overcome obstacles to achieve success in various endeavors.
Participate in duraga puja online now to boosts mind power and concentration abilities helps to control over negative feelings.
Help us in the Spiritual Journey to Light lamp at temple which will help to get rid of the negative energy in Universe. Sponsor Now for Oil donation.
Participate Durga Astami puja online now to bring peace, prosperity, and happiness in the lives you for Betterment. Reserve you spot now.