காண்டம் வாசிப்பதில் கூறப்படுவது என்ன

நாடி ஜோதிடம் காண்டம் பார்த்தல்

நாடி சோதிட பிரிவுகள்

ஆன்மாவின் கடந்த பிறவிகளின் கர்ம வினைகளை அறியும் கண்ணாடி போல நாடி சோதிடம் செயல்படுகிறது. ஆத்மாவுக்கு உருவமோ, விருப்பங்களோ இல்லாததும் அழிவற்றதுமாகும். அழிவும், மாற்றங்களும் உடலுக்கு மட்டுமே உரிய விஷயங்களாகும். கர்ம வினைகளின் விளைவுகளாக ஆன்மா பிறப்பெடுத்து குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் ஆகியவற்றை அடைந்து இறுதியில் மரணம் அடைகிறது. அப்பிறவியில் செய்யப்பட்ட நல்ல அல்லது தீய கர்ம வினைகளுக்கேற்ப அந்த ஆன்மா மீண்டும் மறு பிறவி எடுக்கிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட பிறவியில் முந்தைய கர்மாவுக்கேற்ப துன்பங்களை அந்த உடல் எடுத்த ஆன்மா அனுபவிக்க வேண்டும். அந்த துன்பங்களை நீக்கும் விதமாகவே நம்முடைய ரிஷிகள் நாடி சோதிடத்தை அருளியுள்ளார்கள். நாடி சோதிடத்தை 12 பொதுக்காண்டங்களாகவும், 8 சிறப்பு காண்டங்களாகவும் வகைப்படுத்தி ஆன்மாவின் கர்ம வினைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து, நல்வாழ்வு பெறுவதற்கான வழிகளையும் அந்த நாடிச்சுவடிகளில் தெரிவித்துள்ளார்கள். பொதுக்காண்டம்

நாடி சோதிடத்தில் பொதுக்காண்டம் மிக முக்கியமானது. இதன் மூலம் ஒருவர் எஞ்சியுள்ள தனது எதிர்கால வாழ்க்கைக்கான பலன்களை அறிந்து கொள்கிறார்.

ஒருவரது தகுதிகள், விருப்பங்கள், ஆசைகள், வசதிகள், மகிழ்ச்சி, இன்பம், கர்ம வினைகளிலிருந்து விடுபடுதல், வாழ்க்கையின் லட்சியம் அறிந்து ஆன்ம ஒளி பெறுதல் போன்ற பல ரகசியங்களை இக்காண்டம் வெளிப்படுத்துகிறது. குடும்ப காண்டம்

இந்த காண்டம் படிப்பதன் மூலம் ஒருவரது குடும்ப உறுப்பினர்கள், பந்தபாசம், குடும்ப சொத்துகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அத்துடன் கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள் உள்ளிட்ட மற்றவர்களுடன் உள்ள உறவுமுறை, குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சங்கடங்கள், வம்புவழக்குகள், பலம், பலவீனம், நல்ல சூழ்நிலைகள், பொருளாதார நிலை ஆகிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். 

ஒருவரது குடும்பம் சார்ந்த பொருளாதாரம், உடல்நலம், மகிழ்ச்சி, இனிமையான குடும்ப சூழல் ஆகியவற்றை பெறும் வழியறிந்து வாழ்க்கையை சிறப்பாக விரும்பிய வகையில் மாற்றம் செய்து கொள்ள இந்த காண்டம் வழிகாட்டுகிறது.

உடனே அணுகவும்


சகோதர காண்டம்

இந்த காண்டம் படிப்பதன் மூலம் ஒருவருக்கு உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் எத்தனை பேர், அவர்களுடன் உள்ள உறவு நிலை, பாசம், அன்பு, சாதக, பாதக நிலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அத்துடன், தனது உடன் பிறந்தவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது, அவர்களுடன் சுமுகமான, ஆரோக்கியமான நல்ல உறவை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

உடன்பிறந்த, ரத்த சம்பந்தம் கொண்ட உறவுகளின் நிலை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள இந்த காண்டம் வழிகாட்டுகிறது.

உடனே அணுகவும்


தாயார் குறித்த காண்டம்

இந்த காண்டம் படிப்பதன் மூலம், ஒருவர் தன்னை ஈன்ற அன்னையுடன் உள்ள பாசம், அன்பு, உறவு நிலை, எவ்விதமான கர்ம வினைகள் இருவரையின் பிணைத்துள்ளது, உறவில் ஏற்படும் சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அத்துடன் பெற்ற அன்னை மூலம் ஒருவர் அடையக்கூடிய மன மகிழ்ச்சி, சொத்து சுகங்கள், வண்டி வாகனங்கள், பண வரவுகள் போன்ற செய்திகளையும் அறியலாம். 

ஈன்ற அன்னையின் ஆசிகளைப் பெற்று ஒருவர் நல் வாழ்வு வாழவும், அவர்களுடன் ஆத்மார்த்தமான, இனிய உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த காண்டம் வழிகாட்டுகிறது. சந்தான / குழந்தைகள் காண்டம் 

இந்த காண்டம் படிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினைகளின் மூலம் பிறக்க உள்ள குழந்தைகள், குழந்தைகள் ஆணா, பெண்ணா, குழந்தை பிறப்பில் ஏற்படும் தடைதாமதங்கள், பிறந்த குழந்தைகளின் ஆயுள், அவர்களது பெறும் கல்வி, செய்யும் சாதனைகள், அவர்களது துன்பங்கள் போன்ற விபரங்களை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

ஒரு பெற்றோராக தான் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், குழந்தை பாக்கிய தடையாக உள்ள கர்ம வினைகளை அகற்றி சத்புத்திர பாக்கியம் பெற்று வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை இந்த காண்டம் தெரிவிக்கிறது. நோய், எதிரி அறியும் காண்டம்

இந்த நாடி படிப்பதன் மூலம் ஒருவரது கர்ம வினையால் ஏற்படும் உடல் - மன நோய்கள், வைத்திய முறைகள், மறைமுக - நேர்முக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், எதிரிகளால் ஏற்படும் வம்புகள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றை விபரமாக அறியலாம்.  

வாழ்க்கை பாதையில் கர்ம வினைகளால் ஏற்படும் உடல் - மன நோய்கள் அகலவும், குடும்பம், தொழில், பணியிடம் உள்ளிட்ட பல நிலைகளில் நேரடி - மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அகல கர்ம வினைப்படி நிவர்த்தி செய்து மகிழ்ச்சி நிரம்பிய வாழ்வைப் பெற இந்த காண்டம் வழிகாட்டுகிறது.  திருமண காண்டம்

இந்த காண்டம் படிப்பதன் மூலம் ஒருவரது திருமண வாழ்க்கை, வாழ்க்கைத்துணையின் நிலை, திருமணம் நடக்கும் காலம், தடை-தாமதம் ஏற்படுவதற்கான காரணம், வாழ்க்கைத்துணையின் குடும்பம், அவர் வசிக்கும் திசை, மணப்பொருத்தத்திற்கேற்ற மனப்பொருத்தம், திருமண வாழ்வில் சந்திக்க உள்ள பிரச்சினைகள் போன்ற விபரங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

மனம் போல மாங்கல்யம் என்ற வகையில் விரும்பியவரை வாழ்க்கை துணையாக பெற முடியுமா, மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு விதிமுறைகள் ஆகியவற்றுடன், மண வாழ்வு அமைய தடை செய்யும் கர்ம வினைகள் நீங்கி நல்வாழ்வு பெறவும் இந்தக் காண்டம் வழிகாட்டுகிறது. ஆயுள் காண்டம்

நாடி சோதிடத்தில் படிக்கப்படும் காண்டம் பிரிவுகளில் ஒருவர் இந்த பூவுலகில் எவ்வளவு காலம் வாழ்வார் என்ற காலக்கணக்கை இந்தக் காண்டம் தெரிவிக்கிறது. உடல் தாங்கி, உயிர்க்காற்றைச் சுவாசித்து நடமாடும் அந்த ஆன்மா இப்பிறப்பில், இந்த பேரண்டத்தின் மறுசுழற்சி விதிகளுக்குட்பட்டு, முந்தைய கர்ம வினைகள் தீரும் வரை அந்த உடலில் இருக்கும் காலகட்டத்தை இந்த காண்டம் அறிவிக்கிறது. 

ஆன்மாவின் வாழ்க்கைப் பயண காலம், மொத்த வயது, பிறந்த நட்சத்திரம், லக்னம், ராசி ஆகிய கர்மப் பதிவுகளை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் வாழ்வை நிறைவாக பூர்த்தி செய்து இறைநிலை நோக்கி செல்லவும் இந்தக் காண்டம் வழிகாட்டுகிறது.தந்தை காண்டம்

இந்த காண்டம் படிப்பதன் மூலம் ஒருவரது தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர் பற்றி அனைத்து பூர்வீக தொடர்பு விபரங்களும், தன் தந்தை மூலம் பெறும் ஆன்மிக ஞானம், உலகியல் அறிவு, சொத்து-சுகம், தொழில், வியாபாரம், உறவு நிலை, சண்டை-சச்சரவு, கருத்து வேறுபாடு போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

வழிவழியாக உள்ள குடும்ப பாரம்பரியம், தந்தை வழி உறவினர்கள், அவர்களுடன் உறவுமுறை, வாழ்வியல் நெறிகள், தானதர்மங்கள், சமூக சேவை போன்றவற்றையும், கர்ம வினைப்பயனால் அவற்றில் ஏற்படும் தடைகளை அகற்றி நல்வாழ்வு பெறும் வழிகள், குறிப்பாக ஆன்மிக குருவை கண்டறியும் வழியையும் இந்த காண்டம் தந்தருள்கிறது.பணி - தொழில் காண்டம்

இந்த காண்டம் படிப்பதால் ஒருவர் மேற்கொள்ளும் தொழில் பற்றிய விபரங்கள், அதில் ஏற்படும் லாப-நஷ்டங்கள், பணி, பணியாற்றும் அலுவலகம், அதில் உள்ள பொறுப்புகள், சங்கடங்கள் ஆகியவற்றையும், வர்த்தகம் உள்ளிட்ட இதர வாழ்வாதார நடவடிக்கைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். 

கர்ம வினைக்கேற்ப லாபம் தரும் தொழிலை அல்லது நல்ல பணியை எப்படி தேர்வு செய்வது, தொழில் அல்லது பணியில் நல்ல காலம், சிக்கலான காலம், தொழில் வளர்ச்சி அல்லது பணி உயர்வு எப்போது, தொழில், வர்த்தகம் அல்லது பணியில் கர்ம வினைகளால் உண்டாகும் தடை தாமதங்களை நீக்கி நல்வாழ்வு பெறும் வழிமுறைகளையும் இந்த காண்டம் அளிக்கிறது.  லாப காண்டம்

இந்த காண்டம் படிப்பதன் மூலம் ஒருவர் பெறக்கூடிய தனது முயற்சிகளால் அடையக்கூடிய லாபங்களை அறிந்து கொள்ளலாம். அந்த லாபம் பொன், பொருள், நவரத்தினங்களாகவோ, தனது பணி அல்லது தொழில் மூலம் அடைந்த லாப பலன்களாகவோ இருக்கலாம். தனது லட்சியம் மற்றும் ஆழ்மன விருப்பம் நிறைவேறும் காலத்தையும் இந்த காண்டம் சொல்கிறது.

பங்கு வர்த்தகம், வெளிநாட்டு தொடர்புகள், பூர்வீக சொத்துகள், வாரிசுவழி சொத்துகள் உள்ளிட்ட வெவ்வேறு வழிகளில் ஒருவர் பெறும் லாப பலன்களையும், லாபம் அடைவதை தடை செய்யும் கர்ம வினைகளை அகற்றி நல்வாழ்வு பெறவும் இந்த காண்டம் வழிகாட்டுகிறது. ஆன்மிக காண்டம்

இந்த காண்டம் மிகவும் விஷேசமானது. அதாவது, இந்த உலகில் பிறவி எடுத்ததன் காரணத்தை அறிந்து கொண்டு, அதை பூர்த்தி செய்து, ஆத்ம பரிபூரண நிலையான வீடுபேறு அடைய வழிகாட்டும் ஆன்மிக வழிகள் விபரமாக இதில் தெரிவிக்கப்படும். 

ஆன்மிக பாதையில் சாதகர்கள் செல்லும்போது கர்ம வினைகளின் விளைவாக அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், தடை-தாமதங்கள் ஆகியவற்றை அகற்ற மிகச்சரியான வழிமுறைகளை இந்த காண்டம் அளிக்கிறது. அத்துடன் கர்ம வினைகளை அகற்றும் பொருத்தமான உபாயங்களையும் இக்காண்டம் தெரிவிக்கிறது. முற்பிறவி கர்ம காண்டம்

இந்த காண்டம், நாடி படிக்கப்படும் வாடிக்கையாளர்களின் பல்வேறு முற்பிறவி கடந்த கால வாழ்க்கை சம்பவங்கள் பற்றியும், அவற்றால் ஏற்பட்ட கர்ம வினைகள் மற்றும் பலன்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது. 

அவற்றால் இப்பிறவியில் ஆன்மா பெறும் சுக-துக்கங்கள், திருமண வாழ்வு தரும் இன்ப-துன்பங்கள், செல்வ வளம், வறுமை போன்ற வாழ்க்கை நிலைகளையும் இந்த காண்டம் குறிப்பிட்டு, துன்ப துயரங்களை நிவர்த்தி செய்யும் தகுந்த வழியையும் காட்டுகிறது. 

திரிகாலாவின் தனிச்சிறப்பான நாடி சோதிட சேவை

திரிகாலாவில் ஒரு ஆன்மாவின் கர்ம வினையின்பாற்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து அதற்கேற்ப நல்வழிகாட்ட நாடி சோதிடம் என்ற மகத்தான செயல்முறையைப் பின்பற்றி வருகிறது. ஓலைச்சுவடிகளில் பல நூற்றாண்டு காலகட்டத்துக்கு முன்னரே நமது மகரிஷிகள் தங்கள் மெய்ஞானத்தால் ஆன்மாக்களின் கர்மவழிப்பட்ட பாதையை உள்ளுணர்ந்து அவற்றை ஓலைச்சுவடிகளில் பதிவு செய்து நமக்கு அருளியுள்ளார்கள். அவை மனித குலத்தின், பல பிறவிகளில் ஏற்பட்ட கர்மப் பதிவுகளை அகற்றி நல்வாழ்வு பெற உற்றதுணையாக உள்ளன. 

திரிகாலா நாடி சோதிடர்கள், இந்தியாவின் தெற்கே தமிழகத்தில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற ஊரில் உள்ள நாடி சோதிட மையத்தில் பல்லாண்டுகள் கடும் பயிற்சி பெற்றவர்கள். பாரம்பரியமாக நாடி படிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவ்வகையில் திரிகாலா தனது வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, துல்லியமான நாடி சோதிடம் மூலம் சிறந்த சேவைகளை இணையதளம் மூலமாகவும் வழங்கி வருகிறது.

திரிகாலா - நாடி படிப்புக்கு பிந்தைய சேவைகள் 

  • வாடிக்கையாளர் விரும்பினால் நாடி விபரம் ஒலிப்பதிவாக தரப்படும் 
  • கர்ம வினை விளைவுகளை விளக்கமாக அறிந்து கொள்ள உதவி
  • நாடியில் குறிப்பிட்ட பிரத்யேக மந்திரம் அளித்தல் 
  • வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப பூஜை - பரிகாரங்கள்
  • தேர்வு செய்த நாடி தொகுப்புக்கேற்ப மந்திர சக்தியூட்டிய இலவச தாயத்து
  • நாடி படிப்புக்கு பின்னர் 2 முறை ஆலோசனை பெறலாம்