நாடி சோதிடம் என்பது ஓலைச்சுவடிகளிலிருந்து பெறப்பட்ட ஒருவருக்கான தனிப்பட்ட ஓலையிலிருந்து அவரது ஆன்மா கடந்து வந்த வாழ்க்கை பாதையை அறிய உதவுகிறது. ஆன்மா என்பது அழிவற்றது. அதற்கு பிறப்போ, மனமோ அல்லது சுய விருப்பங்களோ கிடையாது. கர்ம வினைகளின் பலனை கழிப்பதற்காக ஆன்மா குறிப்பிட்ட உடல் தாங்கி பிறக்கிறது. அவ்வாறு கர்ம வினைகள் அகலும் வரை ஆன்மா பல உடல்களை தாங்கி பிறப்பெடுக்கிறது.
நாடி சோதிடம் மூலம், ஆன்மாவின் கடந்த கால பிறவிகள் மற்றும் இந்த பிறவி ஆகியவற்றை கண்டறிந்து, அவற்றோடு தொடர்புள்ள கர்ம வினைகளையும் அறிந்து கொள்கிறோம். அத்துடன் கடந்த பல பிறவிகளாக எஞ்சியுள்ள கர்ம வினைகளை தீர்ப்பதற்கு திறன் வாய்ந்த பரிகார முறைகளையும் நாடி சோதிடம் அருள்கிறது.
திரிகாலா நாடி சோதிடம் இணையதளம் மூலம் ஒருவரது நாடி ஓலைச்சுவடிகளை கண்டறிந்து, அதற்கான பலன்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறது. வாடிக்கையாளர்கள் சுலபமான அடுத்தடுத்த வழிகளைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் நாடி படிக்கும் அமர்வில் பங்கேற்க முடியும். இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள், அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் எளிமையான வழிகளை இங்கே தந்துள்ளோம். மேலும், எங்கள் வாடிக்கையாளர் சேவை மைய பிரதிநிதிகள் அந்த அமர்வு முழுவதும் தங்கு தடையில்லாமல் நாடி ஓலையைத் தேடிப் படித்து, பலன்களை அறியும் வரை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
நிலை :1 தொகுப்பிலிருந்து ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்தல்
இந்த அமர்வுக்கான காலம் : ஒரு மணி நேரம் முதல் 3 நாட்கள் வரை (ஓலைச்சுவடி கிடைப்பதைப் பொறுத்து).
அமர்வில் பங்கேற்போர் : திரிகாலா நாடி சோதிடர்கள் - வாடிக்கையாளர் உதவி மேலாளர்.
இந்த பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவின் பெருவிரல் ரேகையும் தனித்தன்மை வாய்ந்தது. நாடிச்சுவடி தொகுப்பிலிருந்து ஒருவரது ஓலைச்சுவடிகளை பிரித்தறிய கட்டைவிரல் ரேகை பெறுவதே நாடி சோதிடத்தின் முதல் படி. அவ்வாறு பெற்ற கட்டை விரல் ரேகையை கொண்டு, ஓலைச்சுவடிகளின் மாபெரும் தொகுப்பிலிருந்து பொருத்தமான ஓலைச்சுவடி தேர்வு செய்யப்படும்.
தேர்வு செய்யப்பட்ட சுவடிகள் ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 வரை பனை ஓலை பதிவேடுகள் இருக்கும். அதில் ஆன்மாவின் பயணங்கள் பதிவாக இருக்கும். அதற்கேற்ப பெருவிரல் ரேகைப்பதிவு மின்னணுப் படமாகவோ அல்லது மை அச்சு மூலம் எடுக்கப்பட்ட கை பெருவிரல் பதிவாகவோ எங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
இங்கிருந்து உங்கள் ஆன்மாவின் பயணம் குறித்த தேடல் தொடங்குகிறது.
நிலை 2 : ஓலைச் சுவடிகளை தேடிக் கண்டறிதல்
அமர்வுக்கான காலம் : 5 நிமிடங்கள் முதல் 2 நாட்கள் வரை.
அமர்வில் பங்கேற்போர் : நாடி படிப்போர் / மொழிபெயர்ப்பாளர் மற்றும் நாடி தேடுபவர்கள்.
ஆன்மா பற்றிய தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொரு பனை ஓலைச்சுவடியிலும் விரிவான தனிப்பட்ட தகவல்களாக எழுதப்பட்டிருக்கும். திரிகாலா நாடி சோதிடர்கள் தொடக்க நிலையில் உங்கள் பற்றி ஒரு சில கேள்விகளைக் கேட்டு பெறப்பட்ட பதில்களையொட்டி உங்களுக்கான நாடியை அடையாளம் கண்டறிவார்கள். நாடிச்சுவடிகளின் தொகுப்பிலிருந்து உங்கள் பதில்களுக்கேற்ற சுவடியை அறிந்து அதை எடுத்து அதில் உள்ளவற்றை படிப்பார்கள். அந்த தகவல்கள் வாடிக்கையாளரது வாழ்க்கையோடு ஒத்துப்போகும் நிலையில், அடுத்த சுவடி தொடர்ந்து படிக்கப்படும்.
நாடிச்சுவடிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைகளாக இருப்பதால், வாடிக்கையாளரிடம் எவ்வகையான கேள்விகளை பெற்று நாடியை அறிய வேண்டும் என்று எவ்வித வரையறையும் இல்லை. அதனால் நாடியை அறிவதற்காக நாங்கள் வாடிக்கையாளரிடமிருந்து அவரது பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், வாழ்க்கைத்துணையின் பெயர் ஆகியவற்றை பெற்று அதன் அடிப்படையில் நாடியை கண்டறிகிறோம். வாடிக்கையாளருக்கான நாடி ஏதாவது ஒரு ஓலைச்சுவடிக்குள்தான் இருக்கும். ஆனால், அவற்றில் மிகச்சரியான ஒன்றை தேடிக்கண்டறிவது மிகச் சிரமமான, கால அவகாசம் தேவைப்படும் வழிமுறையாக உள்ளது.
நிலை : 3 பனை ஓலைச்சுவடி பரிபாஷை தகவல்கள் அறிதல்.
அமர்வு காலம் : 2 மணி நேரம் முதல் 2 நாட்கள்.
அமர்வில் பங்கேற்போர் : நாடி ஜோதிடர்கள் மற்றும் குருமார்கள்.
இந்த முழு செயல்முறையும் தலைமை நாடி ஜோதிடரின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதலுடன் நிறைவேற்றப்படும்.நாடி ஜோதிட வல்லுநர்கள் திரிகாலா செயல்முறைகளின் படி, பழமையான தமிழில் பரிபாஷையாக எழுதப்பட்டு, தேடி எடுக்கப்பட்ட தெய்வீக நாடியில் உள்ள தகவல்கள் வாடிக்கையாளருக்கு உரியதா என்று அறிய சில அடிப்படை தகவல்கள் மூலம் உறுதி செய்து கொள்வார்கள்.
திரிகாலா நாடி ஜோதிடர்கள், திரிகாலா நாடி ஜோதிடம் கல்வி மையத்தில் பல ஆண்டுகளாக கல்வியும், பயிற்சியும் பெற்று திறமையாக செயல்படுபவர்கள். அவர்கள் ஓலைச்சுவடியில் பண்டைய தமிழ் மொழி வழக்கில் பரிபாஷையாக குறிப்பிடப்பட்ட தமிழை, இன்றைய நவீன காலத்திற்கேற்ற வழக்குத் தமிழாக வாடிக்கையாளர் புரிந்து கொள்ளும் வகையில் படிக்கும் திறன் பெற்றுள்ளார்கள்.
நிலை 4 : இணையவழியில் பலன் அறிதல்
அமர்வு காலம் : அதிக பட்சம் ஒரு மணி நேரம்
அமர்வில் பங்கேற்போர் : நாடி சோதிடர்கள் / மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளரிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் தேடிக் கண்டறியப்பட்ட நாடிச் சுவடிகள் மகரிஷியின் திரு முன்னர் வைக்கப்பட்டு அவரது ஆசிகள் பெறப்படும். அதன் மூலம் நாடி படிப்பதில் ஏற்படக்கூடிய தடை தாமதங்கள் அகலும். அதன் பின்னர் எங்கள் நாடி சோதிடர்கள் மொழி பெயர்ப்பாளர் உதவியுடனோ அல்லது நேரடியாகவோ இணையதள ஆலோசனை அல்லது காணொளிக்காட்சி ஆலோசனை முறையில் நாடி படிப்பார்கள். அது வாடிக்கையாளர் தேர்வு செய்த நாடி தொகுப்பின் தன்மைக்கேற்ப பல விதங்களில் இருக்கும். வாடிக்கையாளர் வேண்டுகோளுக்கேற்ப அந்த அமர்வில் படிக்கப்பட்ட நாடி பலன்கள் ஒலி வடிவில் பதிவு செய்தும் தரப்படும்.
வாடிக்கையாளர் நலனை பாதுகாக்கும் வகையில் திரிகாலாவில் நாடி வாசித்த தகவல்கள் எதுவும், ஒருபோதும் தனிப்பட்ட முறையில் ரகசியமாக சேமித்து வைக்கப்படுவது கிடையாது.
நிலை : 5 இணைய வழியில் கர்மாவுக்கான பரிகாரம்.
அமர்வுக்கான காலம் : அதிகபட்சம் ஒரு மணி நேரம்.
அமர்வில் பங்கேற்போர் : நாடி சோதிடர்கள் மற்றும் கர்ம ஞான வல்லுனர்கள்.
இந்த பிரத்யேக முறை திரிகாலாவில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நாடி படிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் மனதில் எழும் கேள்விகளை இந்த அமர்வு மூலம் கேட்டு, நாடி வல்லுனர்களால் அதற்காக அளிக்கப்பட்ட பதில்களை பெறலாம்.
எங்களது கர்ம ஞான வல்லுனர்கள் வாடிக்கையாளருக்கு படிக்கப்பட்ட நாடியில் உள்ள கர்மவினை மற்றும் அதன் விளைவுகள் பற்றி துல்லியமாக கண்டறிந்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த அமர்வின் நோக்கம் வாடிக்கையாளருக்கு படிக்கப்பட்ட நாடியில் தெரிவிக்கப்பட்ட அவரது வாழ்வின் கர்ம பலன்களை அறிவியல் முறைப்படி புரிந்து கொள்ள உதவி புரிவதாகும். அந்த வகையில் நாடி படிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கு மாறுபட்ட முறையில் பரிகாரங்களை கடைப்பிடித்து நல்வாழ்வு பெறுகிறார்.
நிலை 6 : பரிகார முறைகளை மேற்கொள்ளல்.
அமர்வுக்கான காலம் : நாடியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப
அமர்வில் பங்கேற்போர் : நாடி படிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்
இந்த அமர்வில் வாடிக்கையாளர் தனக்கு படிக்கப்பட்ட நாடியில் தெரிவிக்கப்பட்டவாறு வாழ்வில் மீதமுள்ள கர்ம வினைப் பயன்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அவ்வகையில் நாடி படிக்கப்பட்ட வாடிக்கையாளர் நிவர்த்தி முறைகளைக் கையாண்டு தனது வாழ்வில் மீதமுள்ள கர்ம வினைகளை சீர்படுத்திக்கொள்ளும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளருக்கு உதவி புரியும் வகையில் எங்கள் பரிகார மைய வல்லுனர்கள் அவர்கள் சார்பாக தீர்க்கமான நிவர்த்தி பரிகார முறைகளை மேற்கொள்வார்கள். (சுய பிரார்த்தனை முறைகள் தவிர) கர்ம பலன் நிவர்த்திக்கேற்ப ஹோமம், யாகம், பூஜை, திருக்கோவில் வழிபாடு ஆகிய முறைகளில் அவை அமையும்.