சிவவாக்கியர் அய்யா ஓலைச்சுவடியின் சிறப்பம்சங்கள்
மகா சிவ வாக்கிய மகரிஷியின் நாடி ஓலைச்சுவடிகள் நாடி சோதிடத்தில் பொதுவான பலன்களை அறிய உதவுகிறது. சிவ வாக்கியர் தனது நாடிச் சுவடிகளில் பதித்துள்ள தகவல்களை சிவபெருமானுக்கும், அன்னை பார்வதிக்கும் இடையில் நடந்த உரையாடல் வடிவில் அளித்துள்ளார். அதில் இந்த பிரபஞ்சத்தின் படைப்பு மற்றும் அழிவு பற்றிய ரகசியங்களை தந்துள்ளார்.
ஒருவரது வாழ்வில் புதிராக உள்ள கர்ம வினைகளை வெளிப்படுத்தி பலன் கூறும் நாடி முறையை அவர் அளித்திருக்கிறார். அவ்வகையில், ஒரு ஆன்மா 4 யுகங்களிலும் கடந்து வந்த பாதையையும், அந்த வாழ்க்கைகளில் பெற்ற செல்வம், பெற்றோர், திருமணம், ஆரோக்கியம், தொழில், பணி உள்ளிட்ட பல தகவல்கள் அதில் உள்ளன. மெய்ஞானம் பெற்ற சிவ வாக்கிய மகரிஷி 7-ம் நூற்றாண்டை சேர்ந்தவராக குறிப்பிடப்படுகிறார்.
தனது ஒரே செய்யுள் மூலம் கிட்டத்தட்ட 750 நாட்களுக்கான (தோராயமாக 2 ஆண்டுகள்) கர்ம வினைப்பலன்களை மகா சிவ வாக்கிய மகரிஷி பதிவு செய்துள்ளார்.