சிவபெருமானின் 64 அவதாரங்கள் - ஏகபாத மூர்த்தி

ஏகபாத மூர்த்தி – ஒற்றை திருவடி உடைய சிவ மூர்த்தி

சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களை புரிந்தார் என நாடி ஓலை குறிப்புகள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்தைக் காத்து அருள்புரிகிறார்.

ஏகபாத மூர்த்தி வடிவம்

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், ஏகபாத மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்விட வடிவமானது ஒற்றை திருவடி உடைய வடிவம்.

பெயர்: ஏகபாத மூர்த்தி

வாகனம்: –

மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்

சிவ அவதாரக் காரணம்

கருத்திற்கு எட்டாத, வண்ணமில்லாத, குணமில்லாத, அறிய முடியாத பொருளாகவும், எங்கும் நீக்கமற நிறைந்தவராகவும், அழியாத சோதியாயும் அமைந்தவர் சிவபெருமான். அவர் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டுமே நிலையாக இருப்பதை அறிந்து அதை அகற்ற அருள் செய்தார். அதன் மூலம் ஞானத்தை கொடுத்து, ஆணவம், கன்மம் மற்றும் மாயையை அகற்றி, இறுதியில் தூய்மையான தன்னை அடையச் செய்தார்.

ஆகவே, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என ஐந்து தொழில்களைச் செய்து வந்தார். ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அவரிடம் ஒடுங்க, தங்கள் தேவையும் அவரிடம் ஒடுங்கி விடும். இவரே மட்டும் அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும், அனைத்தும் இவரிடமே ஆரம்பித்து, இவரிடமே முடிகின்றன. இவரே தனியான முதன்மையானவர். இவரிடமே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன மற்றும் அவரிடமே தஞ்சமடைகின்றன.

அனைத்து தேவரும், மூர்த்திகளும் அவரை வணங்கி அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர். உலகின் முதல்வர் மற்றும் முதன்மையானவர் இவர். அனைக்காலங்களிலும், எல்லாவுலகமும் தன் திருவடியின் கீழ் இருப்பதால் இவரை நாம் ஏகபாத மூர்த்தி என்கிறோம். இந்த வடிவத்தையே ஏகபாத மூர்த்தி என அழைக்கின்றோம்.

தரிசிக்கும் முறை

இவரைத் தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் தப்பளாம் புலியூர் ஆகும்.

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Post Tags

Comments

Add a Comment

Categories