வாமனனை வீழ்த்தி தேவர்துயர் நீக்கிய சிவபெருமான்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவபெருமான் இவ்வுலகை காத்து அருள்புரிகின்றார்.
கங்காள மூர்த்தி விவரங்கள்
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், கங்காள மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவமானது வாமனை கொன்று அவன் முதுகெலும்பினைத் தண்டமாகக் கொண்ட தெய்வீகக் கோலமாகும்.
பெயர் : கங்காள மூர்த்தி
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
கங்காள மூர்த்தி அவதார காரணி
ஒரு முறை சிவாலயத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி பிரகாசமாக எரிய உதவியது ஒரு எலி. அதற்காக அந்த எலிக்கு திரிலோக ஆட்சி செய்யும் வல்லமை வழங்கினார் சிவபெருமான். அவ்வெலி பின்னர் மாவிலி (மகாபலி) மன்னன் என்ற பெயருடன் அசுரகுலத்தில் அவதரித்தது.
மாவிலி மன்னன் தான தர்மங்களிலும் யாகங்களில் சிறந்து விளங்கினான். இருப்பினும் அசுரகுலம் மிகுந்த வலிமை பெற்றதால் தேவர்குலம் அவனுடன் போரிட்டது. போரில் தேவர்கள் தோல்வியுற்றதால், அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.அதன்படி காசிப முனிவரின் மனைவி திதி வேண்டுதலின்படி, திருமால் வாமன அவதாரம் எடுத்து மாவிலி அரண்மனைக்கு சென்றார். மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அசுரகுரு சுக்கிராச்சாரியார் தடுத்தும், மாவிலி தானம் வழங்க ஒப்புக்கொண்டான்.
உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லை என்றபோது, மாவிலி தன் சிரமேல் அடியிடக் கூறினான். அவன் பாதாள லோகத்தில் அழுத்தப்பட்டான்.மாவிலியை அழித்த பின்னர், வாமனன் கர்வம் கொண்டு மனிதர்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினார். அச்சமடைந்த தேவர்கள் கையிலை மலைக்கு சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர்.
சிவபெருமான் வாமனரை அமைதிக்குக் கேட்டும், கர்வம் அடங்காததால் தன் திருக்கையில் உள்ள வச்சிர தண்டத்தால் வாமனன் மார்பில் அடித்தார். வாமனன் நிலம் வீழ்ந்தான்.உடனே சிவபெருமான் அவன் தோலை மேல் ஆடையாகக் கொண்டு, முதுகெலும்பினை எடுத்து தண்டமாகத் தரித்து தேவர்களின் துயரை நீக்கினார். கர்வம் ஒழிந்த திருமால் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டு வைகுண்டம் திரும்பினார்.
வாமனனின் முதுகெலும்பை தண்டமாகக் கொண்ட இந்த தெய்வீகக் கோலமே கங்காள மூர்த்தி என அழைக்கப்படுகிறது. (கங்காளம் – எலும்பு)
கங்காள மூர்த்தி தரிசிக்கும் முறை
சீர்காழியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற பெயர்களில் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் பெரியநாயகி திருநிலைநாயகி ஆகும்.
திரிகாலா தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா - கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment