குரு மூர்த்தி – மாணிக்கவாசகருக்கு அருளிய சிவ அவதாரம்
சிவனை நினைத்து, சிவமயமாய், "சிவனே" என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும், சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு, உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்திநான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலைக் குறிப்புகள் மற்றும் புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இப்பிரபஞ்சத்தைக் காத்து அருள்புரிகிறார்.
குரு மூர்த்தி வடிவம்
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், குரு மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இக்குரு மூர்த்தி வடிவமானது மாணிக்கவாசகருக்கு அருளிய வடிவமாகும்.
பெயர்: குரு மூர்த்தி
வாகனம்: அமர்வாசனம்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்
சிவ அவதாரக் காரணம்
திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். சிறுவயதில்வே வேதாகமங்களை நன்கு அறிந்தவர். இவரது சிறப்பை அறிந்த மதுரை மன்னன் அரிமர்தனப்பாண்டியன் அவரை தனது அமைச்சராக்கி, தென்னவன்பிரமராயன் என்ற பட்டத்தையும் கொடுத்து மேலும் சிறப்பித்தார். மாணிக்கவாசகருக்கு திருவருள் புரிய வேண்டியிருந்தது.
அமைச்சராகவும், இறை தவமும் முழுமூச்சாகவும் வாழ்ந்த மாணிக்கவாசகரிடம் மன்னன் வேண்டிய அளவு பொருள் கொடுத்து கீழ்கடல் பகுதிகளில் சென்று குதிரைகள் வாங்கி வரும்படி அனுப்பினார்.அவர் திருப்பெருந்துறையை அடைந்தவுடன், தன்னுடைய இறைவனுடன் ஐக்கியமான உணர்வு எழுந்தது. அனைத்து இடங்களிலும் தேடினார். இறுதியில் குருமூர்த்தியைக் கண்டு வணங்கி பாடி துதித்து பரவசப்பட்டு, ஆனந்தப்பட்டு, ஆவி உருகி ஆனந்தக்கூத்தாடினார்.
அவருக்கு திருஐந்தெழுத்தை உபதேசித்தார். பின்னர் குருமூர்த்தி மாணிக்கவாசகரை அங்கேயிருக்கச் சொல்லி மறைந்தார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு, மாணிக்கவாசகரும் அங்கேயேயிருந்தார். தன்னுடன் வந்த காவலர்களிடம் ஆடித்திருத்தங்களில் குதிரைகள் வருமென அரசனிடம் சொல்லும்படி அனுப்பினார்.
பின்னர் கொண்டுவந்தப் பொருள் அனைத்தையும் ஆலய திருப்பணிக்கே அர்ப்பணித்தார். அவர் சொல்லியது போல் குதிரையும் வரவில்லை, மாணிக்கவாசகரும் வரவில்லை. மன்னன் இந்நிலையில் ஓலை அனுப்பினார்.
அதற்கு பதில் மாணிக்கவாசகர் சிவபெருமான் கூற்றுப்படி ஆவணியில் குதிரைகள் வரும் என பதிலோலை அனுப்பினார். பின்னர் சிவபெருமான் மாணிக்கவாசகரின் கனவில் தோன்றி "நீ முன் செல், குதிரைகள் பின்வரும்" என்றார். அதன்படி மாணிக்கவாசகர் முன் சென்று மன்னனிடம் சேர்ந்தார். பக்குவம் பெற்ற மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி திருஐந்தெழுத்தை உபதேசம் செய்தவர் சிவபெருமான். எனவே அவரது பெயர் குரு மூர்த்தி என்றானது.
தரிசிக்கும் முறை
குடந்தை – காரைக்கால் நடுவே அமைந்த பெருந்துரையாகும். இறைவனது திருநாமம் பிரணவேஸ்வரர், இறைவி திருநாமம் மலையரசி. இவரே குருவடிவம் கொண்டு மாணிக்கவாசகரை ஆட்கொண்டு உபதேசித்தவர்.
எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்.
Comments
Add a Comment