பாசுபதக் கணை அருளிய சிவபெருமானின் திருவவதாரம்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பலதெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், பாசுபத மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் பாசுபத மூர்த்தி வடிவமானது அர்ஜுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம்.
பாசுபத மூர்த்தி விவரங்கள்
பெயர் : பாசுபத மூர்த்தி
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
பாசுபத மூர்த்தி அவதாரக் காரணி
பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான்.அப்போது மைத்துனனும், தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ணமாட்டேன் என்றான்.
கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ச்சுனனும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான்.அவனது கனவில் கண்ணன் வந்து “மைத்துனா! சிந்து மன்னனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும்” என்றான். இருவரும் கையிலை சென்றனர்.
சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ச்சுனன் மகிழ்ந்தான்.பின்னர் சிவபெருமான் எதிரியை அழிக்க வல்ல பாசுபதக் கணையை அளித்தார். இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர். சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார்.
அர்ச்சுனன் கனவிலிருந்து விழித்தபோது தன் அம்பறாத்தாணியில் பாசுபதக் கணை இருப்பதைக் கண்டான். மீண்டும் சிவபெருமானையும் கண்ணனையும் வணங்கினான்.அதே நாளில் சிவபெருமான் அருளிய பாசுபதத்தினால் சயந்திரனை அழித்து தனது சபதத்தை நிறைவேற்றினான். கண்ணனும் அர்ச்சுனனும் வேண்டிய வண்ணம் பாசுபதத்தை அருளிய கோலமே பாசுபத மூர்த்தி ஆகும்.
இவரை தரிசிக்கும் முறை
குடவாசல் அருகே அமைந்துள்ள கொள்ளம்புதூரில் பாசுபத மூர்த்தியை தரிசிக்கலாம். இங்குள்ள இறைவன் பெயர் வில்வவனநாதர், இறைவி பெயர் சௌந்தர நாயகி என்பதாகும்.
திரிகாலா தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா - கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment