முனிவர்களின் அபிசார ஹோமத்தை அடக்கிய சிவபெருமான்
சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.
தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்திலும் சிவன் இவ்வுலகை காத்து அருள்புரிகின்றார்.
சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், சார்தூலஹர மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவமானது புலியினை அழித்த திருக்கோலமாகும்.
பெயர் : சார்தூலஹர மூர்த்தி
வாகனம் : நந்தி தேவர்
மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்
சிவ அவதாரக் கதைகள்
தாருவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் ரிஷிபத்தினிகளை பிட்சாடன அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்க முடிவு செய்தனர். அதனால் அபிசார ஹோமம் செய்தனர்.
அந்த ஹோமத்திலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி தோன்றியது. அதை சிவபெருமானிடம் ஏவினர்.சிவபெருமான் அந்த புலியை அடக்கி கொன்று அதன் தோலை ஆடையாக்கினார். பின்னர் மழு ஆயுதம், மான், நாகம், பூதகணங்கள், மண்டையோடு, துடி (உடுக்கை) ஆகிய அனைத்தையும் தன் அம்சமாக மாற்றினார்.
பின்னர் முயலகனை ஏவினர். சிவபெருமான் நெருப்பை கையில் ஏந்தி முயலகனை தன் காலால் அடக்கி அதன் மேல் நின்று நடனம் ஆடினார். இனி எதையும் செய்ய இயலாது என உணர்ந்த முனிவர்கள் சரணடைந்தனர்.சிவபெருமான் அவர்களை மன்னித்து அருள்புரிந்தார். முனிவர்கள் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட இந்த திருக்கோலமே சார்தூலஹர மூர்த்தி ஆகும்.
தரிசிக்கும் முறை
மாயவரம் அருகே அமைந்த வழுவூரில், தாருவனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க சிவபெருமான் இந்தத் தலத்தில் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது.
திரிகாலா தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான பரிகார ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
திரிகாலா - கர்மவினைத் தீர்வுகள்
Comments
Add a Comment