மகா சதாசிவ மூர்த்தி | சிவனின் 64 தாண்டவ வடிவம்

மகா சதாசிவ மூர்த்தி – 25 முகங்களின் தத்துவம்

சிவனை நினைத்து, சிவ மயமாய், சிவனே என்று இருக்க சித்தப்படும் அனைவருக்கும் சிவன் அருளாலே சிவன் தாள் பற்றி வாழ நினைக்கும் யாவருக்கும் நமது குருவின் ஆசி வேண்டி இந்த வியாசத்தினை எழுதுகின்றேன்.

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் நம் ஈசன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என நாடி ஓலை குறிப்புக்கள் மற்றும் புராணங்கள் பல தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு அவதாரத்தில் சிவன் இவ் பிரபஞ்சத்திற்கு காத்து அருள்புரிகின்றார்.

சிவனின் 64 தாண்டவ வடிவங்களில், மகா சதாசிவ மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். இவ் மகா சதாசிவ மூர்த்தி வடிவமானது இருபத்தி ஐந்து முகத்துடன் உள்ள வடிவம்.

பெயர் : மகா சதாசிவ மூர்த்தி

வாகனம் : நந்தி தேவர்

மூர்த்த வகை : மகேசுவர மூர்த்தம்

சிவ அவதார காரணி

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர்.

மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர்.

இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றே கொள்ளுதல் வேண்டும்.

மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன.

எனவே மகா சதாசிவ மூர்த்தி, 25 தலைகள், 50 கைகள் மற்றும் தாமரை மலரின் மீது அமர்ந்து சில சமயங்களில் கைலாச மலையில் இருக்கிறார். சிவன் வெளிப்பாடுகளின் ஐந்து குழுக்கள் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றன.

அவர் சர்ப்ப யக்னோபவித்திரத்தை அணிந்திருந்தார். அவனது இரண்டு கைகளும் அபய மற்றும் வர ஹஸ்தத்தில் உள்ளன. மற்ற கைகளில் பல்வேறு பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளன.

கைகளில் உள்ள ஆயுதங்கள்

வலது கை – அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சக்தி, பிராசம், பரசு, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சிறுகத்தி, கொடி, தண்டம், வஜ்ரம், குந்தம், அஸ்திகம் ஷ்ட்ரம், ரம்பம், பிண்டி, பாலம்

இடது கை – வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், கோடாரி, முத்தகம், உடுக்கை, மணி, சுவடி, ருத்ர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுன்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்தரிக்கோல், உலக்கை, மயில் தோகை

இவரை தரிசிக்கும் முறை

இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். இந்த மகா சதாசிவ மூர்த்தி வடிவம் கோயில்களில் சிலை வடிவில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் கோயில் கோபுரங்களில் சுதை வடிவில் காணப்படுகின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்தில், காஞ்சிபுரம் கரகரேசுவரர் கோயிலின் விமானத்தில்,

வைத்தீசுவரன் கோயில் கோபுரம் மற்றும் தில்லைக் கோயில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.

எங்களின் தனித்துவமான கர்ம தீர்வுகளுக்கான ஜோதிட ஆலோசனை மற்றும் ஆன்மீக பரிகார வழிகாட்டலுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

திரிகாலா – கர்மவினைத் தீர்வுகள்

Receive Divine Blessings of Lord Shiva
Participate in sacred Shiva rituals and homams performed with authentic Vedic traditions, devotion, and spiritual energy.
DIVINE YANTRA OFFER

Rudra Yantra

Starting from
₹3678
Lord Shiva energy • Protection, peace & spiritual strength
  • Enhances spiritual positivity
  • Helps remove negative energies
  • Supports inner strength
  • Receives Shiva blessings
Post Tags

Comments

Add a Comment

Categories