மகரிஷிகள் கொடையாக அளித்த வாஸ்து சாஸ்திரம்

மகரிஷிகள் கொடையாக அளித்த வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் என்பது மிகவும் பழமையான வாழ்வியல் நெறிமுறையாக நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சித்தர் பெருமக்கள் இந்த சாஸ்திரத்தில் தெளிவான விதிமுறைகளை நமக்கு அளித்து சென்றுள்ளார்கள்.


வாஸ்து சாஸ்திரம் என்ற மிகவும் பழமையான சாஸ்திரம் என்பது கட்டிடங்களின் வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த பிரபஞ்ச சக்திகளை அன்றாட மனித வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்ற உண்மைகளை விதிமுறைகளாக அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். அதன்மூலம் குறிப்பிட்ட வடிவத்தில், குறிப்பிட்ட அளவுகளில் வீடுகள் உள்ளிட்ட கட்டிட அமைப்புகள் ஏற்படுத்தும் பொழுது நிம்மதியான வாழ்க்கை நமக்கு கிடைக்கிறது.


வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மையில் அறிவியல் பூர்வமான அடிப்படையை கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இயற்கை நமக்கு தருகின்ற  நன்மைகளை பெறுவதற்கான எளிய வழிமுறைகளையும் அது தருகிறது.  இந்த முறையை பின்பற்றுவதன் மூலமாக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பல துன்ப, துயரங்களுக்கு எளிமையான தீர்வுகளை பெற்று நல்வாழ்வு வாழ முடியும்.