
கணபதி யந்திரம் என்பது ஸ்ரீ
விநாயகப் பெருமானின் அருட்சக்திகளை தன்னிடம் ஈர்த்து வைக்கப்படும் இடத்தில் அதன் ஆற்றலை
வெளிப்படுத்தும் வல்லமை பெற்றது. அதன் மூலம் சகல முயற்சிகளிலும் வெற்றி, செல்வ வளம்,
ஞானம் போன்ற இகபர நன்மைகளை எளிதாக ஒருவர் பெற இயலும்.
வடிவியல் நுட்பங்களை உள்ளடக்கிய கணபதி யந்திரம் என்பது விநாயகப் பெருமானின் செய்வீக சக்தியை தன்னுள்ளே அடக்கிய பேரண்ட சக்தியின் வரி வடிவமாக அமைந்துள்ளது. அதனால் அந்த இடமே சக்தி அலைகளால் நிரப்பப்படுகிறது. பிரபஞ்ச சக்தியை யந்திர வடிவத்தில் வரையப்பெற்று அதை தெய்வீக முறைப்படி சக்தியூட்டி, பெறப்பட்டு பூஜை செய்யப்படும்போது ஒருவருடைய விருப்பங்கள் பூர்த்தி பெற்று அவரது லட்சியங்கள் நிறைவேற கணபதி யந்திரம் உற்ற துணையாக உள்ளது.