இன்றைய காலகட்டத்தில் இறையருள் தீர்வு முறை வழிகாட்டுதலின் முக்கியத்துவம்?

கலியுகத்தில் கர்மவினைகளால் வழிநடத்தப்படும் மனித வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. ஒருவரிடம் உள்ள ஆன்மீக சக்தியால் துன்பங்களை அகற்ற முடியும். ஆனால், ஆன்மீக சக்தி அனைவரிடத்திலும் இருப்பதில்லை. அந்த வகையில் ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவைப்படுகிறார். அவருடைய தெய்வீக வழிகாட்டுதல் மூலம் ஒருவரது கர்ம வினைகளை இந்த பேரண்டத்தின் கருணையினால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் மன நிறைவுடன் அவரவர்களுக்கு உரிய குடும்ப கடமைகளை செய்து, இறையருளையும் பெற முடிகிறது.

தெய்வீக அருளை பெறுவதற்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அந்த இடத்தை பூர்த்தி செய்ய தகுதி வாய்ந்த, பாரம்பரியமிக்க, ஆன்மீக நெறிமுறைகளில் அனுபவம் வாய்ந்த ஒரு வழிகாட்டி தேவை. ஆன்மிகம் என்ற மிக அவசியமான வாழ்வியல் நெறிமுறைக்கு அப்படிப்பட்ட தெய்வீக வழிகாட்டுதல் இல்லாமல் தனி மனிதர் ஒருவர் தன்னுடைய துன்பங்களை தீர்க்கவோ அல்லது வாழ்க்கையின் லட்சியங்களை அடைவது என்பதோ இயலாத காரியம்.

அதனால் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக வழிகாட்டி ஒருவர் மிக அவசியம். இன்றைய சூழலுக்கேற்ப உலக மக்கள் அனைவரும் எளிதாக பெறும் வகையில் ஆன்லைன் மூலம் சித்தர் பாரம்பரியத்தில் வந்த, ஆன்மீக நெறிமுறைகளில் பல்லாண்டு அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் பூஜை நிவர்த்தி சேவை திரிகாலாவில் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.