அகத்தியர் அய்யா ஓலைச்சுவடியின் சிறப்பம்சங்கள்
நாடி சோதிடத்தில் அகத்தியர் சித்தர்யின் ஓலைச்சுவடி மிகவும் பழமை வாய்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. கைலாச மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் வாயிற்காவலரான நந்திபெருமான், அகஸ்திய மகரிஷிக்கு, இந்த அகண்ட பேரண்டத்தில் உயிர்களின் பிறப்பு-இறப்பு ஆகிய படைப்பின் மறுசுழற்சி விதிகளை உபதேசம் செய்வதாக அகஸ்திய மகரிஷி தனது நாடி ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளார்.
ஒருவரது வாழ்வில் மறைந்துள்ள கர்ம வினைகளை அறிந்து அதற்குரிய தெய்வீக பரிகாரங்களை அகஸ்தியர் நாடி சோதிடம் தருகிறது. ஒருவரது முற்பிறவி, இப்பிறவி, எடுக்கப்போகும் பிறவி, இந்த வாழ்வில் ஒருவர் பெற்ற, பெறவுள்ள பலன்கள், தொழில், பணி, சொத்து, குழந்தைகள், திருமணம், நோய்கள் உள்ளிட்ட பல விபரங்களையும் அது தெரிவிக்கிறது. உள்ளொளி பெற்ற சித்தர் தலைவரான அகத்தியர் சித்தர் கி.மு. 550 முதல் 300-க்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தவர்.
உயிர்களின் கர்ம வினைகள் குறித்த விபரங்களை அகஸ்திய மகரிஷி சுமார் 900 நாட்களுக்கான (தோராயமாக இரண்டரை ஆண்டுகள்) பலன்களை ஒரே செய்யுளாக பதிவு செய்துள்ளார்.