போகர் அய்யா ஓலைச்சுவடி எவ்வகையில் சிறந்தது.?
நாடி ஓலைச்சுவடிகளில் போகர் அய்யாவின் நாடி ஓலைச்சுவடிகளே மிகவும் பழமையானதாக குறிப்பிடப்படுகிறது . தனது குருவான மகரிஷி அகஸ்திய முனியிடமிருந்து கற்ற ஞானத்தை தனது நாடிச்சுவடிகளில் பதிவு செய்து போகர் மகரிஷி மனித சமூகத்துக்கு தந்தருளியுள்ளார். அவ்வகையில் மனித ஆன்மாக்கள் உய்வடையும் வகையில் தெய்வீக வழிகளை நேரடி உபதேசமாக போகர் மாமுனிவர் தந்துள்ளார்.
உங்கள் வாழ்வில் மறைபொருளாக உள்ள கர்ம வினையின் பலாபலன்களை போகர் மகரிஷி தனது கணிப்புகளில் வெளிப்படுத்தி நல்வாழ்வுக்கான தெய்வீக வழியைக் காட்டுகிறார். அவ்வகையில், போகர் நாடி படிக்கும்போது ஒருவர் தனது கர்ம வினைகளை அறிவதுடன், அவரது புத்திர பாக்கியம், நோய் அகன்று உடல் நலமடையும் வழிமுறைகள் உள்ளிட்ட மனித வாழ்வின் பல அம்சங்களை அவர் பதிவு செய்துள்ளார். போகர் மகரிஷியின் காலம் கி.மு. 550 மற்றும் கி.மு.300 ஆகிய காலகட்டத்துக்கு இடைப்பட்டதாகும்.
ஒரே செய்யுளில் போகர் அய்யா சுமார் 365 நாட்களுக்கான (தோராயமாக ஒரு ஆண்டு) மனிதனின் கர்மபலன் குறித்த கணிப்புகளை தந்திருக்கிறார்.