எந்திரங்கள் என்பவை தெய்வீக முறைப்படி உருவாக்கப்பட்டு ஆன்மீக சக்திகளை ஈர்க்கும் வண்ணம் அவை சக்தி ஊட்டப்படுகின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, தாமிரம் போன்ற பல்வேறு உலோகங்களில் கோண வடிவில் முறையில் உருவாக்கப்படும் எந்திரங்கள் அவை, பயன்படுத்தப்படுவதற்கான காரணத்தை மிகச் சரியாக பூர்த்தி செய்வதாக அனுபவம் மூலம் உணரப்பட்டுள்ளது.
திரிகாலாவில் ஆகம சாஸ்திர முறைப்படி கைகளால் எழுதப்படும் யந்திரங்கள் ஒருவருடைய தனிப்பட்ட கர்ம வினையின் அடிப்படையில் தயார் செய்யப்படுகின்ன. எங்களுடைய யந்திரங்கள் அனைத்துமே இந்த பேரண்டத்தின் சக்தி களத்தின் குறிப்பிட்ட அதிர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட பூஜை மற்றும் ஹோமங்கள் மூலம் ஆற்றல் ஈர்க்கப்பட்டு துல்லியமாக வடிவமைக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக ஆற்றல் அதை வைக்கும் இடத்திலும், வழிபடுபவருக்கும், தூய்மையான இறைசக்தியை அபரிமிதமாக வழங்குகின்றன.
எங்களுடைய சக்தியூட்டப்பட்ட எந்திரங்கள் ஒரு மனிதனுடைய ஸ்தூல, சூட்சும, காரண, பிராண சரீரங்களின் கர்ம வினை பதிவுகளை அகற்றும் வகையில் பிரத்தியேகமாக தயார் செய்யப்படுகின்றன. அவற்றை முறைப்படி பூஜை செய்து வருபவர்களுக்கு இந்த பிரபஞ்ச சக்தி அவர்களை நல்முறையில் வழிநடத்தி மகிழ்ச்சியான வாழ்வை அளிக்கிறது.
நமது பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்படும் எந்திரம் என்பது சப்த ரூபமான மந்திரத்தின் தோற்ற வடிவமாக குறிப்பிடப்படுகிறது. யந்திரங்கள் தெய்வீக அலை அதிர்வுகள் மூலம் மந்திர சக்தியால் அதற்குரிய பலன்களை அளிக்கின்றன. அந்த வகையில் ஒருவருக்கு உரிய குறிப்பிட்ட யந்திரத்தை அவர் பெற்று, அதற்குரிய மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் உச்சாடனம் செய்து வரும் போது தெய்வீக சக்திகள் அவரை சூழ்ந்து நின்று பாதுகாத்து, அவருக்கு வேண்டிய உதவிகளை அளிக்கின்றன.
யந்திரங்கள் ஒருவருடைய மன ஒருமையை அதிகப்படுத்துவதுடன், மன உறுதியையும் உருவாக்கி அவருடைய பிரார்த்தனைகள் மூலம் இறை சக்தியை பெறுவதற்கு சரியான வழியை காட்டுகிறது. ஒரு யந்திரத்தின் சக்தி என்பது இந்த பிரபஞ்சம் வெளிப்படுத்தும் சூட்சும அலை அதிர்வுகளை தன் சுற்றுப்புறத்தில் வெளிப்படுத்தி நேர்மறை சக்திகளை உருவாக்குவதாகும்.
ஒவ்வொரு யந்திரத்திற்கும் குறிப்பிட்ட ஒரு தேவதையின் அம்சம் உள்ளது. அந்த சக்தி மிக்க தேவதையின் ஆற்றல்கள் அந்த எந்திரத்தின் மூலம் அதற்குரிய பிரத்தியேக மந்திரத்தை ஜபம் செய்யும் பொழுது வெளிப்படுகிறது. அதனால் ஒரு யந்திரத்திற்கு முறையான பூஜை மற்றும் மந்திர ஜபம் ஆகியவை மிக அவசியம். அதன் மூலம் ஒருவரது வாழ்வின் துன்பங்களை அகற்றி இலட்சியத்தை அடையக்கூடிய மன உறுதியையும், வாய்ப்புகளையும் அந்த யந்திரம் அளிக்கிறது.
ஒருவரது பருவுடலானது கர்ம வினைகளின் வெளிப்பாடாக அமைகிறது. அதன் அடிப்படையில் ஒருவருக்குரிய பொருத்தமான யந்திரத்தை அறிந்து அவரது கர்மாவுக்கேற்ற உலோகத்தில் அதை வரைபடமாக வடிவமைக்கவும் முடியும். அதை ஆகம, நாடி சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ள பிரத்யேக மந்திரங்கள், பூஜை, ஹோமம், யாகம் மூலம் தூய்மைப்படுத்தி, சக்தியூட்டி சம்பந்தப்பட்டவருக்கு அளித்து வாழ்வின் கர்மவினைகளை அகற்றி நிம்மதியான வாழ்வை பெறச்செய்வது குருவருளாலும், இறையருளாலும் சாத்தியம். திரிகாலா வழங்கும் யந்திரங்கள் ஒருவரது ஸ்தூல, சூட்சும, காரண, பிராண சரீரங்களில் ஏற்பட்டுள்ள கர்ம வினையின் பதிவுகளை அகற்றி நல்வாழ்வை அளிக்கின்றன.
ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கான யந்திரத்தை பெற சுலபமாக வழிகளை திரிகாலா வகுத்துள்ளது. அதற்கான ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது இவையே :-