ஆன்ம வளம் - உடல் நலம்
திரிகாலாவில் எங்களுடைய தெய்வீக பிரசன்ன மார்க்க நாடி வாசிப்பு முறை ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்களின் சீடர்கள் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சிவபெருமானுடைய மகனான கார்த்திகேயன் பெயரில் அமைந்த கந்தர் நாடி என்பது பிரசித்தி பெற்றதாகும். கந்தர் நாடி என்பது மனித குல நலனுக்காக தெய்வத்தால் அருளப்பட்ட செய்யுள் வடிவ நாடிச் சுவடிகள் ஆகும். அவற்றை படிப்பவருக்கு தெய்வீக அருள் அவசியம் தேவை. அத்துடன் குருவின் அருளும் மிக முக்கியம்.
கந்தர் நாடி என்பது அதை நாடி வந்து படிக்கும் அன்பர்களுக்கு தேவையான ஆன்மீக மற்றும் சமூக வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு உடனடி பதில்களை அளிக்கிறது. அதன் மூலம் அருள் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய இந்த இக வாழ்வை சிறப்பான முறையில் கர்மவினையின் பிடிகளில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்வதற்கு இந்த பிரபஞ்சம் துணை செய்கிறது.
கந்தர் நாடி படிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய உடனடி தீர்வுகள் வாழ்வின் பல சிக்கல்களுக்கு சிறந்த வழியாக அமைகின்றன. அவற்றில் தனிப்பட்ட தெய்வீக வழிகாட்டுதல்கள், பலன் தரும் மருத்துவ முறைகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை போன்ற தனிப்பட்ட விஷயங்கள் துல்லியமாக குறிப்பிடப்படுகின்றன.
கந்தர் நாடி மூலம் பெறப்படும் வழிகாட்டி நெறிமுறைகள் ஒரு வருட காலத்திற்கு பலன்களை அளிப்பவையாக இருக்கும்.