logo

கர்மவினை அகற்றுதல்

மக்களில் பலரும் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்று நிலைகளில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதனால் பதட்டம், பயம் அல்லது மனச்சோர்வு போன்ற உளவியல் சிக்கல்களாக அவை மாறுகின்றன. அவை நீண்டகால நோயாகவோ அல்லது வெளியில் தெரியாத நோயாகவோ இருக்கலாம். உறவுச்சிக்கல்கள், குடும்ப வாழ்க்கையில் தொந்தரவு அல்லது வியாபார இழப்பு ஆகியவையும் ஏற்படலாம். 

அதனால் கர்மவினையறிந்து அதை அகற்றுவதன் மூலம் நிரந்தரமாக சிக்கல்கள் தீர்வது மட்டுமல்லாமல், வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமநிலையை உருவாகும். உடல், மனம், ஆன்மா ஆகிய நிலைகளில் உள்ள கர்மவினைகளை அகற்ற நாங்கள் பல வழிகளை கடைபிடிக்கும் நிலையில், சில செயல்முறைகளை நீங்கள் செய்ய வேண்டும்.

உடல், மனம் மற்றும் ஆன்மீக நிலைகளில் ஏற்படும் நல்ல மாற்றங்களை அளிக்கும் வகையில் திரிகாலாவின் பரிகார முறைகள் அமைந்துள்ளன.

கர்மவினை என்பது என்ன ?

கர்மவினை என்பது பிராரப்த கர்மா, சஞ்சித கர்மா, ஆகாமிய கர்மா  என்று மூன்று வகையாக இருக்கிறது.  

பிராரப்த கர்மா என்பது இந்த பிறவியில் நாம் அனுபவித்துக்கொண்டுள்ள இன்ப துன்பம் என்ற கர்ம வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. 

சஞ்சித கர்மா என்பது இந்த பிறவியில் நாம் இனிமேல் எதிர்கொள்ள வேண்டிய கர்மா வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.

ஆகாமிய கர்மா என்பது இனிமேல் நாம் எடுக்கக்கூடிய பிறவிகளில் பலனை அளிப்பதற்கான கர்ம வினைகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.

ஒருவரது வாழ்க்கையை இந்த மூன்று விதமான கர்மவினைகள் தான் வழிநடத்திச் செல்கின்றன. மனித வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு  பிராரப்த கர்ம வினைகளை அகற்றும் பொழுது தற்போதைய நடைமுறை துன்பங்களுக்கு ஒரு விடிவு ஏற்படுகிறது. அதை சித்தர்களுடைய வழிமுறைகளை பயன்படுத்தி ஒருவருடைய நாடியை அறிந்து படிப்பதன் மூலமாக பிராரப்த கர்மாவை சுலபமாக தீர்த்துக் கொள்ள முடியும். 

சஞ்சித கர்மா என்பது பல பிறவிகளாக பின் தொடர்ந்து வரக்கூடிய கர்ம வினைகளை குறிப்பிடுகிறது. அந்த சஞ்சித கர்ம வினை என்பதை அவ்வளவு எளிதாக உடைக்க இயலாது. அதன் காரணமாகவே மனிதர்களால் தாங்க இயலாத துன்பங்களான பலவித நோய்கள்,  பொருளாதார முடக்கங்கள்,  உடல் மற்றும் மன ரீதியான தீர்க்க இயலாத சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்கான சரியான தீர்வுகளும் சித்தர்கள் நாடிமுறையில் மற்றும் பல்வேறு ஆன்மீக வழிமுறைகளில் தீர்ப்பதற்கு நெறிகளை வகுத்து அளித்துள்ளார்கள்.

ஆகாமிய கர்மா என்பது இனிமேல் எடுக்கக்கூடிய பிறவிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்பதன் மூலம் அது முற்றிலும் ஆன்மீக ரீதியான வழிகாட்டுதல்கள் மூலமே கண்டறிந்து தீர்க்கப்பட முடியும். அதற்கான வழிமுறைகளையும் சித்தர் பெருமக்கள் நமக்கு தந்து சென்றுள்ளார்கள்.

திரிகாலாவில் மேற்கண்ட மூன்று விதமான கர்ம வினைகளையும் அகற்றுவதற்கான நாடி படிக்கும் தெய்வீக வழிமுறை சித்தர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படுகிறது.

எங்கள் பின்னணி

13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எங்களுடைய அன்பிற்குரிய குரு ரிஷி சிவப்பிரகாசம் அவர்கள் இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திருச்சி என்ற நகரத்திற்கு அருகில் முக்தி அடைந்தார். அவ்வாறு அவர் முக்தி அடைவதற்கு முன்பாக, மனித உடலில் இருந்து அவர் எங்களுக்கு அளித்த போதனைகள் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் மூலமாக இன்றும் எங்களை அவர் வழிநடத்தி வருகிறார்.

திரிகாலாவில் உள்ள நாடி படிப்பவர்கள் மற்றும் ஆன்மீக சேவை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவருமே எங்களுடைய அன்பிற்குரிய குருவான ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்களுடைய அருளாசியை பெற்றவர்கள். 15 வருடங்கள் முதல் 45 வருடங்கள் வரை நாடி ஜோதிட துறையில் அனுபவம் பெற்றவர்கள்.