கர்மவினையறிதல்
கர்மவினையறிதல் என்ற இந்த செயல்முறை உங்கள் சிக்கல்களை தீர்க்க வாழ்வின் மையத்திலிருந்து செயல்படும் வழிமுறைகளை வழங்குகிறது.
உங்கள் வாழ்க்கை சிக்கல்களின் மூல காரணத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம், உங்கள் சிக்கல்கள் அல்லது உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் ஆகியவை எந்தவிதமான பூர்வஜென்ம கர்ம வினைகளால் ஏற்பட்டது என ஆராய்ந்தறிகிறோம். அதன் மூலம் இந்த வாழ்வின் சிக்கல்களுக்கு உண்மையான காரணம் மூதாதையர் சாபமா அல்லது வேண்டாத நபர்களால் செய்யப்பட்ட பில்லி சூனியமா அல்லது வேறு இதர எதிர்மறை சக்திகளால் ஏற்பட்ட விளைவுகளா என்பதை துல்லியமாக ஆராய்ந்தறிவோம்.
கர்ம வினைகளின் அடிப்படையில் பல சிக்கல்கள் எளிதாக அகற்ற இயலாதவையாக வலுவுடன் இருக்கின்றன. அதனால்தான் ஒருவரது வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அப்படிப்பட்ட சிக்கல்களை தீர்த்து நிவாரணம் அளிக்க சித்தர் வழி நெறிகளை பயன்படுத்தி எளிய தீர்வுகள் எங்களால் வழங்கப்படுகிறது.
சித்தர்களின் தெய்வீக வழிகாட்டுதல் மூலம் பல்வேறு நாடிகளின் வாசிப்பில் எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருப்பதால், உங்கள் துயரங்களை அகற்ற தெய்வீக வழிகள், சித்தர்கள் காட்டிய பண்டைய நெறிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய பரிகாரங்களை எங்களால் வழங்க முடிகிறது.