தட்சிணாமூர்த்தி ஹோமம் என்பது நமது பாரம்பரியத்தில் ஆழமான மதிப்பிடையும் ஆன்மிக ரீதியான முக்கியத்துவமும் கொண்ட ஒரு யஜ்ஞமாகும். இது, தெய்வீக அறிவு மற்றும் ஞானத்தின் உருவகமாகிய தட்சிணாமூர்த்தியை வணங்கும் ஆழ்ந்த ஆகம சடங்காக உள்ளது. ஆலமரத்தின் கீழ் மௌனத்தில் அமர்ந்து, தனது சீடர்களுக்கு அறிவை வழங்கும் சிவபெருமானின் தட்சிணாமூர்த்தி ரூபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஹோமம், தெய்வீக ஞானம் மற்றும் அருளை பெறுவதற்காக செய்யப்படுகிறது.
இந்த புராதன ஹோமம், ஆன்மிக ஞானத்தை வழங்கி, அறியாமையை நீக்கி, உயர்நிலை அருளைப் பெற வழி வகுக்கும். தட்சிணாமூர்த்தி ஹோமம், தெய்வீக ஞானத்தை தேடுவதற்கும், தீங்கான விளைவுகளைத் தவிர்க்கவும், கல்வியில் முன்னேற்றம் பெற விரும்புவோருக்கான பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான ஹோமமாகும்.
தட்சிணாமூர்த்தி ஹோமம், தட்சிணாமூர்த்தி பெருமானின் அருளைப் பெற்று ஆன்மிக அறிவை வழங்கி, ஞானத்தை விரிவாக்கி, வாழ்க்கையில் செழிப்பையும், மன அமைதியையும் அடைய உதவுகிறது, மேலும் தியானத்தில் வெற்றியடைந்து சிறந்து விளங்க வழி வகுக்கிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன,
எங்களுடைய குருமார்கள், உங்கள் பிறந்த நட்சத்திரம், கர்ணம், திதி, யோகம் ஆகியவற்றை வான்வெளி நிகழ்வுகளுடன் பொருத்தி, கர்ம வினைகளை சமன் செய்ய உகந்த நேரம் மற்றும் தேதியை ஆராய்ந்து தீர்மானிப்பார்கள். பின்னர், உங்களுடன் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தி ஹோமத்தின் நிகழ்வுகளை உறுதி செய்யப்படும்.
ஹோமம் செய்வதற்கு உகந்த இடம் : கோவில்கள், இல்லங்கள், அலுவலகங்கள், மற்றும் மத சடங்குகள் நடைபெறும் பிற இடங்கள்.
மங்களகரமான நேரம் : பிரம்ம முகுர்த்தம், சூரிய உதயத்திற்கு முன் 4.30 மணி முதல் 6.00 மணி வரை.
மங்களகரமான தேதி : அனைத்து தினங்களிலும், குறிப்பாக வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யுவது விசேஷமாக கருதப்படுகிறது.
நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், எங்களுடைய உயர்தர வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த சனி ஹோமத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கான உறுதியளித்த நாள் மற்றும் நேரத்தில், எங்களுடைய தலைமை குருநாதர் ஹோமத்தை நடத்துவார். அவர் வழங்கும் வழிகாட்டுதலின்படி, உங்கள் கர்ம வினைகளை நீக்குவதற்கான சனி ஹோமம், சடங்குகள், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, எந்த கூடுதல் செலவின்றி உங்கள் இடத்திலிருந்தே உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் அல்லது,
நேரில் ஹோமம் பூஜையில் கலந்து கொள்ளலாம்.
ஹோமத்தின் மூலம் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்கள் தட்சிணாமூர்த்தி பகவானின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி பகவானின் அருளினால், கர்ம வினைகளால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து ஆன்மீக மெய்ஞான தடைகளை மற்றும் தடங்களை அகற்றி, நல்ல ஆன்மீக ஞானம் , அறிவு பெற்று அனைத்து மெய்ஞானம் முயற்சிகளிலும் வெற்றி பெற உதவுகிறது.
இந்த தட்சிணாமூர்த்தி ஹோமம் வழிபாட்டில் "ரட்சை" என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் உங்கள் நெற்றியில் பூசிக் கொண்டே பயன்படுத்தி வர, இறைவனின் அருளைப் பெற உதவுகின்றது.
திரிகாலா ஹோமம் சேவைகள் உங்கள் வீட்டிலிருந்தே பண்டைய ஆன்மிக சடங்குகளின் மகிமையையும் தெய்வீக அருளையும் அனுபவிக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. தட்சிணாமூர்த்தி ஹோமத்தின் புனித ஆற்றலையும் சக்தியையும் எங்களின் ஆன்லைன் தளத்தின் மூலம் நேரடியாக உங்கள் பங்களிப்புக்கு கொண்டு வருகிறோம். நீங்கள் வீட்டில் இருந்து கலந்துகொண்டாலும், அல்லது நேரில் பங்கேற்றாலும், இந்த தெய்வீக நிகழ்வில் எளிதாக இணைந்து அனுபவிக்கலாம்.
திரிகாலாவின் தலைமை குருநாதரின் மேற்பார்வையில், குருமார்கள் ஆகம விதிகளை மிகத் துல்லியமாக பின்பற்றி தட்சிணாமூர்த்தி ஹோமம் நடத்துகிறார்கள். இந்த சடங்கின் போது உருவாகும் அக்னியின் ஒளி மற்றும் மந்திரங்களின் ஒலி பிரபஞ்ச சக்திகளுடன் இணைந்து, உங்கள் உள்ளார்ந்த ஆற்றல்களை சமநிலைப்படுத்தி, புத்துணர்வையும் தெய்வீக ஆற்றலையும் அளிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நேர்மறை ஆற்றல்களை உருவாக்கி, எதிர்மறை சக்திகளை அகற்ற உதவுகிறது.
ஆகம விதிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் இந்த தட்சிணாமூர்த்தி ஹோமம், தட்சிணாமூர்த்தி பெருமானின் தெய்வீக அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையின் தடைகளை அகற்றுவதற்கும், உங்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கும் உதவுகிறது.இக்தட்சிணாமூர்த்தி ஹோமம், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து ஆன்மீக மெய்ஞான தடைகளை மற்றும் தடங்களை அகற்றி, நல்ல ஆன்மீக ஞானம் , அறிவு பெற்று அனைத்து மெய்ஞானம் முயற்சிகளிலும் வெற்றி பெற உதவுகிறது.
திரிகாலாவில் நடைபெறும் தட்சிணாமூர்த்தி ஹோமம் பின்வரும் முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்:
13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதிப்பிற்குரிய ஐயா சித்தர் சிவப்பிரகாசம் திருவெள்ளறை திருச்சிக்கு அருகில் சிவஞான ஜீவசமாதி அடைந்தார். தனது ஞானத்தினால் ஆன்மீக சித்தாந்தங்களை விளக்கி, மனித குலத்தின் கர்மவினை சவால்களை அகற்ற நெறிமுறைகளை உருவாக்கி, சீடர்களுக்கு போதனை செய்து வருகிறார்.
ஐயா சித்தர் சிவப்பிரகாசத்தின் மானசீக சீடர்களான எங்கள் குருமார்கள், அவருடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதர்களின் கர்மவினை சவால்களுக்கு நிரந்தர தீர்வுகளைக் கண்டறிந்து, மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.
தனிநபரின் கர்மவினைகளை ஆராய்ந்து வாழ்க்கை மேம்படுத்த தேவையான தீர்வுகளை வழங்குவதே எங்கள் நிபுணத்துவம். இது தமிழர் பாரம்பரிய ஆகம சாஸ்திரங்களின் தொன்மையான வழிமுறைகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் செயல்படுகிறது.
எங்கள் குருமார்கள், கர்மவினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை சமநிலைப்படுத்த பரசுராம கல்ப சூத்திரம், தந்திர சமுச்சயம், பதாதி மற்றும் அதர்வண வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள், யந்திரம் போன்ற பரம்பரிய தீர்வு முறைகளில் சிறந்த அனுபவத்துடன், தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
கர்மவினை தீர்வுகள் தனித்துவமான செயல்முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கை சவால்களில் இருந்து நிரந்தர ஆன்மீக ஜோதிடத் தீர்வுகளை வழங்க உதவுகின்றன.ஒவ்வொருவரின் கர்மவினைகளுக்கு ஏற்ப, கர்ம பலன்களை நிவர்த்தி செய்ய தகுந்த கோயில்கள், யாக சாலைகள், இயந்திர பூஜைகள் மற்றும் தோஷ நிவர்த்தி பூஜைகளுடன் கூடிய பரிகார முறைகள் எங்களுடைய உள்கட்டமைப்பின் மூலம் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், எங்களுடைய சேவைகள் பல பரிகார ஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக வல்லுனர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பரிகாரங்களை அதிகாரபூர்வமாக மற்றும் நேர்த்தியாக செயல்படுத்த உறுதிப்படுத்தும் சாத்தியங்களை உருவாக்குகிறது.
அனைத்து கல்வி தோஷங்களை நீக்கி, அறிவு வளர்த்து, ஞானத்தை மேம்படுத்தி, வாழ்க்கையில் வெற்றியும் ஈர்க்கும் சக்திவாய்ந்த தட்சிணாமூர்த்தி யந்திரம்.
அறிவு, ஞானம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் அளித்து, மன அமைதி, ஆன்மிக வளர்ச்சி மற்றும் வெற்றியை தரும் தட்சிணாமூர்த்தி பூஜையில் பங்கேற்கவும்.
குரு கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். கல்வி, கேள்வி, ஞானம், புதிய- அரிய கலைகளில் தேர்ச்சி பெற உதவும் சக்திவாய்ந்த தட்சிணாமூர்த்தி அபிஷேக பூஜையில் பங்கேற்கவும்.
அறிவுசார் திறன்களை மேம்படுத்த, ஞானம் பெற, ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் சிறந்து விளங்க மற்றும் அறிவில் முன்னேற்றம் பெற உதவும் சரஸ்வதி ஹோமத்தில் பங்கேற்கவும்