நாடி ஓலைச்சுவடிகள்
நாடி வாசித்தலுக்கான கட்டமைப்பை உருவாக்கியவர்கள் பற்றிய தகவல்கள் இன்று வரை அறியப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. பனை ஓலை நாடிச்சுவடுகளில் உள்ள கோட்பாடுகள் இந்த பிரபஞ்சத்தால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த விதிமுறைகளுடன் தார்மீக ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த பேரண்டம் வாழ்க்கையின் நிரந்தரத்தன்மையை குறிப்பிடும் வகையில் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப இந்த பிரபஞ்சம் தன்னை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிக் கொள்ளும் திறன் பெற்றுள்ளது.
இந்த பேரண்டவியல் மற்றும் வானியல் ஆகியவற்றின் தத்துவார்த்த வெளிப்பாடுகள், வானியற்பியல் நிகழ்வுகள் வழியாக இந்த பிரபஞ்சம் மறுசுழற்சி செய்து கொள்வதை நம் பெருமைமிகு முனிவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவற்றை பல்வேறு கணித முறைகளாக வரையறை செய்து, பனை ஓலைச்சுவடிகளில் தெய்வீகமான செய்யுள் வடிவத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட அந்த ஓலைச்சுவடி தொகுப்புகள் துல்லியமாக நாடி முறை கோட்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய தெய்வீக முறை இந்த விரிவடையும் பிரபஞ்சத்தின் ரகசியங்கள் பற்றிய ஆழமான எதிர்கால உண்மைகளைத் தங்களுக்குள் கொண்டுள்ளன. அந்த வகையில் கர்ம வினைகளை அகற்றும் சமன்பாடுகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களின் எதிர்கால நலனுக்கும் ஏற்ற வகையில் அவற்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.