உலகின் மிகத்தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ், பிராமி என்ற தொன்மையான எழுத்து வடிவத்திலிருந்து உருவான ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. சிவபெருமானின் கைகளில் உள்ள டமரு என்ற உடுக்கையிலிருந்து "தமிழ்" மொழி பிறந்தது என்று பல்வேறு சாஸ்திரங்கள் சொல்கின்றன. சிவபெருமான் தனது டமருவின் இருபுறங்களிலிருந்தும் 5 விதமான ஓசைகளை எழுப்பினார். அந்த 5 சப்த ஒலிகளே தமிழ் மொழியின் ஒலி வடிவத்துக்கு அடிப்படையாக அமைந்தது. தமிழ் மொழி என்பது செவ்வியல் இலக்கிய வடிவத்திலும், பேச்சு வழக்கு நடையிலும் உள்ளது குறிப்பிடத்தகுந்தது.
சொல்லதிகாரம் மற்றும் நன்னூல் ஆகிய இலக்கிய படைப்புகளில் தமிழ் மொழியின் ஒலியியல் அம்சங்கள் பற்றி நன்கு விளக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இலக்கியப் படைப்புகளில் பயன்படுத்தப்படும் சொற்களையும், உரையாடல்களையும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியில், நீளமாகவும், குறுகியதாகவும் உள்ள 5 அடிப்படையான குரல் உச்சரிப்பு முறைகள் இருக்கின்றன. நீண்ட உச்சரிப்பு என்பது குறுகிய ஒலிப்பு முறையை விட இருமடங்கு கூடுதலான கால அளவு கொண்டது. இந்த மாறுபாடே உயிரெழுத்துக்கள் வெளிப்படுத்தும் சப்த நீளங்களுக்குரிய அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
தமிழின் செவ்வியல் உரை வடிவங்கள் அடிப்படையான 5 வித உச்சரிப்பு முறையிலிருந்து 51 வகையான குரல் உச்சரிப்பு முறைகளாக மாற்றம் பெற்று வெளிப்படுத்தப்பட்டன. அவ்வாறு சொற்கள் உருவாகி உச்சரிக்கப்பட்டு வெளிப்படும் குரல் ஒலிப்பின் சப்த பேதங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை, மார்பிலிருந்து வெளிப்படும் சப்தம், நாசியிலிருந்து (மூக்கு) வெளிப்படும் சப்தம், வாயிலிருந்து வெளிப்படும் சப்தம் என்று குறிப்பிடப்படுகின்றன.
மார்பு மற்றும் நாசியிலிருந்து வெளிப்படுத்தப்படும் சப்தங்கள் அவை ஒலிக்கப்படும் விதத்திற்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல்லாண்டு காலங்களாக இருந்து வந்த இந்த முறைகள் பனை ஓலைச்சுவடிகளாகவும், நாடி கிரந்தங்களாகவும் பதிவு செய்யப்பட்டன.
இன்றைய நவீன கால தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளன. அவ்வகையில் நாடி படிப்போர் நாடி சுவடிகள் மற்றும் கிரந்தங்களில் உள்ள 51 உச்சரிப்பு சப்த பேதங்களையும், இன்றைய தமிழ் மொழியின் 247 எழுத்துகளின் ஒலிக்குறிப்பையும் அல்லது ஆங்கிலத்தின் 26 எழுத்துகளின் ஒலிக்குறிப்பையும் ஒருங்கிணைத்து விவரணை செய்வது சவாலான பணியாக அமைந்துள்ளது.
ஒலிப்பின் அடிப்படை | தமிழ் ஒலி | ஆங்கில ஒலி |
---|---|---|
உயிர் எழுத்துகள் | அ இ உ ஐ ஒ | A E I O U |
உயிர் மெய் எழுத்துகள் | க | KA (or) CA (or) GA (or) HA |
ச | CHA (or) GHA or SA | |
ட | TA (or) DA | |
த | THA (or) DHA | |
ப | PA | PHA or BA/BHA | |
ர ற | RA | |
ங ஞ ண ந ன | NA | |
ம | MA | |
ய | YA | |
ல | LA | |
ள | Lla | |
வ | VA | |
ழ | ZHA (Pronounced as LA) |
பிறமொழிச் சொற்கள் மற்றும் எழுத்துகளின் கலப்பும் இன்றைய நவீன தமிழ் மொழியில் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. அவற்றிற்கு பொருத்தமான தூய தமிழ் எழுத்து ஒலிக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
பிறமொழி எழுத்துகள் | ஆங்கில உச்சரிப்பு |
---|---|
J | Cha |
Za | Sa |
Qa | Ku |
Wa | Va |
Xa | KS |
Qha | Ku |
FA | PAA |
Fazil → பாசில்
Wang—--> வாங்
XIN—---> சின்
செய்யுள் வடிவ நாடிச்சுவடிகளில் பிற மொழிச்சொற்கள் இருக்காது. அதனால், அவற்றுக்கு இணையான ஒலி உச்சரிப்பு கொண்ட தமிழ் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக ஒருவரது முழுப் பெயர் DAVID VARBHONU MILEU என்று இருந்தால் அது,
முதல் பெயர் - டேவிட்
தந்தை பெயர் - வர்போனு
குடும்பப் பெயர் - மிலாவ்
என்ற நிலையில் நாடிச்சுவடிகளில் முதல் பெயரான டேவிட் என்பதை மட்டுமே குறிப்பிடப்படும்.