வாழ்க்கை சிக்கல்களுக்கு துல்லியமான தீர்வுகளை அளிக்கும் அற்புதமான வழிமுறை
பிரசன்ன நாடி என்பது நாடி ஜோதிடத்தில் ஒரு மிக முக்கியமான அங்கம் ஆகும். அதன் மூலம் சகல விதமான கேள்விகளுக்கும் துல்லியமான பதில்கள் அளிக்கப்படுகின்றன.
பிரசன்ன நாடி முறையில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் சித்தர்களும், மகரிஷிகளும் தங்களுடைய ஞான திருஷ்டி மூலம் மனிதர்களுடைய கர்ம வினை அறிந்து அவற்றிற்கான பரிகார முறைகளை அருளும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
பிரசன்ன நாடி முறையில் ஒருவருடைய கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை நாடிச் சுவடிகளிலிருந்து பெறப்படுகிறது. அந்த நாடிச்சுவடிகள் பல்வேறு சித்தர்கள் தங்களுடைய ஞான திருஷ்டி மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். ஒருவருடைய கேள்விக்கான சரியான பதிலை பெறுவதற்கு அவர் இறையருள் பெற்றவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரது கேள்விகளுக்கான மிக சரியான துல்லியமான பதில்கள் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது.
அதனால் தான் நாடி படித்து முடிக்கும் வரையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. நாடி பிரசன்னம் மூலமாக வாழ்வின் சிக்கலான பல விஷயங்களுக்கு உடனடியான பதில்களை நிச்சயம் பெற முடியும். அது தொழில் சம்பந்தமான சிக்கலாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, நிலபுலன்களை வாங்குவதாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட சிக்கலாக இருந்தாலும் அதற்கு பிரசன்ன நாடி துல்லியமான தீர்வுகளை அளிக்கிறது.
பிரசன்ன நாடிமுறையில் பெறப்படும் பதில்கள் அனைத்துமே மூன்று மாத கால அவகாசத்திற்கு தங்களுடைய பலாபலன்களை அளிக்கின்றன.