கர்ம வினை தீர்க்கும் எளிய பூஜைகள், ஆன்லைன் பூஜை, இணையவழியில் பூஜை, சித்தர் வழி தெய்வீக பூஜைகள்

ஆன்லைன் மூலம் வெற்றி தரும் பூஜைகள், இறையருளை பெற பிரத்யேக பூஜைகள், உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி நிலவ விஷேச பூஜைகள்

கர்மவினை போக்கும் கால பைரவர் ராகு கால பூசை

கால பைரவர் என்பவர் சகல உலகங்களையும் படைத்துக், காத்து நிற்கின்ற சிவபெருமானின் கால தத்துவத்தை வெளிப்படுத்தும் தோற்றம் ஆகும். கால பைரவர் பூசை ராகு காலங்களில் செய்யப்படுகிறது. சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஏற்படுத்தும் கர்ம வினை பாதிப்புகளிலிருந்து மீள கால பைரவர் பூசை என்பது சிறந்த வழியாகும்.அதன் மூலம் ராகு மற்றும் கேது ஏற்படுத்தும் கர்ம தோச விளைவுகளிலிருந்து எளிதாக நாம் விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும்.

கால பைரவர் பூசை மக்களின் துன்பங்கள் அகற்றி, மகிழ்ச்சியான வாழ்வைத் தரக்கூடியது.

Kalasarpa Puja: Join sacred Puja performed in Kalahasti temple to mitigate the effects of Kalasarpa Dosha, seeking blessings for harmony, prosperity

தென் காளத்திநாதர் கோவிலில் ராகு-கேது பரிகார பூசை

ராகு, கேது தோச பரிகார பூசை அதாவது, சர்ப்ப தோசங்களை நிவர்த்தி செய்யும் பரிகார பூசை சக்தி வாய்ந்த திருத்தலமான தென் காளத்திநாதர் கோவிலில் செய்யப்படுவது சிறந்தது. அந்த பூசையில் உங்கள் சார்பாக ஒருவர் பங்கேற்று, கர்ம வினை பாதிப்புகளுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வெள்ளியால் உருவான சர்ப்ப உருவங்களுக்கு முறைப்படி பூசை செய்கிறார். பின்னர், சர்ப்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, கடல் அல்லது ஆற்று நீரில் விடப்படுகிறது.

ராகு, கேது கர்ம தோச பரிகார பூசை துன்பங்களை நீக்கி இனிமை நிறைந்த வாழ்வைத் தருகிறது.

தோசங்களை அகற்றும் பிரதோச பூசை

தன்னை யாரென்று அறியும் வாழ்வின் லட்சியத்தை உணர்ந்திருந்த சித்தர்கள் அந்த அறிவைப் பெற நமக்கு வழிகாட்டி உள்ளனர். அவற்றைப் பின்பற்றி, தன்னை அறிந்தவரே துன்பங்களிலிருந்து விடுபடுகிறார். நமது கர்ம வினைகளை அகற்றி இறைவனது கருணையை பெற்றுத் தரவல்லது பிரதோச பூசை. நித்திய பிரதோசமாக தினசரி மாலையிலும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளிலிருந்து 13-வது நாளிலும் பிரதோச பூசை செய்யப்படுகிறது. அதில் கலந்து கொள்பவர்களின் சகல கர்ம தோசங்களும் விலகி, மங்கள வாழ்வுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன.

பிரதோச பூசை செய்பவர்கள் எல்லாம் வல்ல ஈசனின் அருளால் தோசங்கள் நீங்கி மகிழ்வார்கள் !      

Online Durga Puja Experience Puja from comfort of your home, participate in virtual ceremony to seek Durga blessings for strength protection

துன்பம் நீக்கும் ராகு கால துர்க்கை பூசை

தீமையை அழித்து நன்மை தரும் எல்லாம் வல்ல இறைவனின் மகத்தான சக்தி வடிவம் அன்னை துர்க்கை. துர்க்கை பூசை செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் ஏற்படுத்தும் கர்ம தோசங்களை நிவர்த்தி செய்யும் சக்தி பெற்றது. கர்ம வினைகளைக் களைய துர்க்கை பூசை செய்வது, அதில் கலந்து கொள்வது ஆகியவற்றால் துன்பங்களை விலக்கிக் கொள்ளலாம்

இந்த பூசையில் பங்கு பெறுபவர் கர்ம வினைகள் அகலப்பெற்று ,காரியத் தடை நீங்க ,இனிய வாழ்க்கைத்துணை, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, சிறந்த குழந்தைகள் ஆகிய பாக்கியங்களை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்வார். துர்க்கை பூசை வாழ்க்கையின் எல்லா தடைகளையும் அகற்றி மகிழ்ச்சி ஒளியை ஏற்றுகிறது. 

Participate auspicious Ganesh Chaturthi puja celebrations online, seeke the blessings of Ganesha  prosperity, success, removal of obstacles

சங்கடம் அகற்றும் சதுர்த்தியில் விநாயகர் பூசை

விநாயகப் பெருமானுக்குரிய சங்கடம் அகற்றும் சதுர்த்தி நாளில் செய்யப்படும் பூசைகள் கர்ம வினைப்பதிவுகளை அகற்றும் மகத்துவம் பெற்றது. சங்கடம் அகற்றும் சதுர்த்தி என்பது தேய்பிறை நான்காம் நாள் ஆகும். சகல துன்பங்களையும் அகற்றும் அந்த நன்னாளில் விநாயகருக்கு செய்யப்படும் பூசை மூலம் அவரது பேரருள் பக்தர்களுக்கு கிடைப்பதாக ஐதீகம்.

அதனால் சங்கடம் அகற்றும் சதுர்த்தி பூசை செய்வோர் தங்களது கர்ம வினைப் பதிவுகள் அகலப்பெற்று, துன்ப துயரங்கள் நீங்கி, இகபர சுக வாழ்வை பெற்று மகிழ்கின்றனர்.அனைவரும் சங்கடம் அகற்றும் சதுர்த்தி பூசையால் கர்ம வினை நீங்கி நல்வாழ்வு பெறுவார்களாக !   

Shiva Vakkiyar Puja: Seek the belssing of Shiva Vakkiyar through this sacred puja, known for its profound insights, Spiritual guidance ,self-realization

சந்திர தோசம் நீக்கும் பூசை

சந்திரனால் ஏற்படும் கர்ம தோசங்களை அகற்ற, சந்திரன் அம்சமாக அவதரித்த சித்தர் மகா சிவ வாக்கியர் அருள் பெறும் பூசைகளை செய்து நன்மை அடையலாம். சிவனின் நாமத்தை உச்சரித்து பிறப்பெடுத்த சிவ வாக்கியர் அருளை பெற்றுத்தரும் சந்திர தோச நிவர்த்தி பூசையை மேற்கொள்பவர்கள் மனோவியாதிகள், மன அழுத்தம், உளவியல் சிக்கல், மன மாயை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள்.
தெளிவான சிந்தனையை ஆசிகளாக வழங்கும் சிவ வாக்கியர் அருளால் மன உறுதி, நம்பிக்கை மற்றும் நற்சிந்தனை ஆகிய குணநலன்களை பெற்று இந்த உலகில் நல்ல வண்ணம் வாழ்வார்கள். சந்திர தோசநிவர்த்தி பூசையில் கலந்து கொண்டு மனநலம் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள் !

Online Puja : Experience divine blessings of Idaikattur Siddhar Puja through this sacred transformative puja for inner growth enlightenment

புதன் தோசம் நீக்கும் பூசை

நவக்கிரகங்களின் நிலையையே மாற்றியமைத்தவர் இடைக்காடர் சித்தர். அவர் புதன் என்ற கிரகத்தின் கர்ம வினைகளை அகற்றி நல்வாழ்வை தரும் சக்தி படைத்தவர். அவரது பேரருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் புதனின் கர்ம தோச விளைவுகளை அகற்றும் பூசை செய்பவர்கள், பூசையில் பங்கு கொள்பவர்கள் கூர்ந்த நுண்ணறிவும், நல்ல ஞாபக சக்தியும் பெறுவார்கள்.
பூசை செய்வதால் நல்ல கல்வி, கல்வித் தடைகள் அகலுதல், தோல் நோய்கள் நீங்குதல், தொழில் வளம், சந்தான பாக்கியம் ஆகிய வரங்களும் கிட்டும். புதனின் கர்ம தோசம் அகல இடைக்காடர் சித்தர் பூஜை செய்து நற்பலன்களைப் பெறுங்கள் !  

Sattamuni Siddhar Puja: Seek the divine blessings Sattamuni Siddhar  puja, aiming to attain spirituality inner peace, higher consciousness

கேது தோசம் நீக்கும் பூசை

சித்தர் சட்டைமுனி ஐயா அவரது மானுடவியல் சிந்தனைகளுக்காக முக்கியத்துவம் பெற்றவராக விளங்குகிறார். அவர் நவக்கிரகங்களில் கேதுவை பிரதிபலிக்கும் சித்தராக குறிப்பிடப்படுகிறார். அதனால், சித்தர் சட்டைமுனி பூசை செய்வதால் பக்தர்கள் கேதுவால் ஏற்படும் கொடுமையான கர்ம வினைப்பதிவுகள் அகலப்பெற்று வாழ்வில் வளம் பெறுவார்கள்.
சட்டை முனி சித்தர் அருளை அள்ளித்தரும் இந்த பூசை மூலம் மன பாதிப்பால் ஏற்படும் மாயத்தோற்றங்கள், குழப்பம், மன அழுத்தம் ஆகியவை அகன்று, நல்ல நினைவும், அறிவாற்றலும் பெறுவார்கள்.சட்டைமுனி சித்தர் பூசை சிந்தனையில் தெளிவும், அறிவு மேன்மையும் அளிக்கும்

Karuvoorar Siddhar Puja: Experience the divine blessings from Karuvoorar Siddhar through transformative puja for enlightenment , inner peace

சனி தோசம் அகற்றும் பூசை

கருவூர் சித்தர் சிவபெருமான் மீது உறுதியான பக்தி கொண்டவர். யந்திரங்கள் வரைவதில் பெரும் திறன் படைத்தவர். கருவூர் சித்தர் நவக்கிரகங்களில் சனியை குறிப்பிடுபவராக உள்ளார். அதனால் கருவூர் சித்தர் பூசை செய்பவர்கள், அவரது அருளால் சனியால் ஏற்படுத்தப்படும் கர்ம வினைகளிலிருந்து விடுபடுவார்கள்.
அத்துடன், சனியால் பாதிப்பு ஏற்படும் காலகட்டங்களான  எழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி கோளாறுகள் நீங்கும். வாகன விபத்துக்கள் அகலும்.படிப்பில் உள்ள மந்த நிலை அகலும். எலும்பு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.பிரம்ஹத்தி தோஷம் அகலும்.முதலாளி தொழிலாளி பிரச்சனைகள் தீரும். கருவூர் சித்தர் பூசை செய்பவர் வாழ்வில் சனி தோசங்கள் அகன்று மனதில் நிம்மதி பிறக்கும்.

சூரிய தோசம் நீக்கும் பூசை

மகரிசி அகத்தியர் இன்றும் குற்றாலம் மலைப்பகுதிகளில் இருந்து, தனது சீடர்களுக்கு வழிகாட்டுவதாக உறுதியான நம்பிக்கை நிலவுகிறது. அவர் நவக்கிரகங்களில் சூரியனை பிரதிபலிப்பவர். அதனால், மகரிசி அகத்தியர் பூஜை செய்வோர், அவரது அருள் பெற்று, சூரியனால் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளிலிருந்து விடுபடுகிறார்கள்.
அப்போது, பக்தர்கள் முற்பிறவி பாவங்கள், முன்னோர்களின் கர்ம வினைகள் ஆகிய தோஷங்கள் நீங்கப்பெறுவதுடன், இருதயம் சம்பந்தமான நோய்களிலிருந்தும் குணமடைகிறார்கள்.மகரிசி அகத்தியர் பூசை மகத்தான நன்மைகளை அளித்து அனைவரையும் காப்பாற்றும் !  

Online Puja Bogar Siddhar Experience divine power of Bogar Siddhar blessings through an authentic personalized Tirikala online puja service

செவ்வாய் தோசம் நீக்கும் பூசை

போகர் சித்தர் மருத்துவ வேதியியலின் தந்தை என்றே குறிப்பிடப்படுகிறார். அவர் நவக்கிரகங்களில் செவ்வாயை பிரதிபலிக்கிறார். அதனால், போகர் சித்தர் பூஜையில் பங்கேற்பவர்கள் அவரது அருளால் மங்களன் என்ற செவ்வாய் தரும் தீய கர்ம வினைகளிலிருந்து விடுபடுகிறார்கள்.
போகர் சித்தரின் அருளால் தாமத திருமணம், சொத்து சம்பந்தமான சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள் ஆகிய பிரச்சினைகள் நீங்குவதோடு, ரத்தம் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய குறைகளும் நீங்கப் பெறுகிறார்கள்.போகர் சித்தர் பூசை மேற்கொள்பவர்கள் சோகங்கள் அகன்று சுக வாழ்வு பெறுவார்கள் !    

Kagabhundar Puja: Seek spiritual grace through this  puja, dedicated to Kagabhundar for well-being, prosperity, spiritual upliftment

குரு தோசம் நீக்கும் பூசை

காகபுசண்ட சித்தர் இறைவன் ஈசனிடமிருந்து உபதேசம் பெற்று, சாகாக்கலை ஆசானாக நான்கு யுகங்களிலும் வாழ்கிறார். அந்த வகையில் அவர் நவக்கிரகங்களில் குருவை பிரதிபலிப்பவராக இருக்கிறார். காகபுசண்ட சித்தர் பூசையில் பங்கு கொள்பவர்கள் குரு கிரகத்தால் ஏற்படும் கர்ம வினை பாதிப்புகளிலிருந்து விடுபடுகிறார்கள். 
பூசை மூலம் அவரது அருளை பெறுபவர்கள் பொருளாதாரப் பற்றாக்குறை, திருமணம் ஆவதில் சிக்கல், குழந்தை பாக்கிய தாமதம், தொழில் தடை ஆகிய குறைகள் நீங்கப்பெறுவதுடன், செல்வச் செழிப்பையும் அடைகிறார்கள்.

காகபுசண்ட சித்தர் பூசை செய்வோர் பொருளாதார வளம் பெற்று மகிழ்வோடு வாழ்வார் !         

Kalanginathar Puja: Seek  divine blessings and spiritual grace through Kalanginathar puja for well-being, prosperity, spiritual upliftment

சுக்கிரன் தோசம் அகற்றும் பூசை

காலாங்கிநாதர் சித்தர் கஞ்சமலை சித்தர் என்றே அழைக்கப்படுகிறார். கஞ்சம் என்பது புனிதமான உலோகம் என்று அர்த்தம். நவக்கிரகங்களில் அவர் சுக்கிரனை பிரதிபலிப்பவராக குறிப்பிடப்படுகிறார். காலாங்கி நாதர் சித்தர் பூசையில் பங்கு பெறுபவர்கள் அவரது அருளால் சுக்கிரனின் கர்ம தோச வினைகளை கடந்து செல்கிறார்கள்.
காலாங்கி நாதர் அருள், களத்திர கர்மத்தால் தோஷம், குடும்பத்தில் ஏற்படும் சண்டை-சச்சரவு, கணவன்-மனைவியிடையே பிரச்சினை, தாமத திருமணம் ஆகிய குறைகளை அகற்றுவதோடு, பெண்களுக்கு நல்ல உடல் நலனையும் அளிக்கிறது.காலாங்கி நாதர் சித்தர் பூசை செய்பவர்களைத் தேடி நன்மைகள் ஓடி வரும் !    

Pambatti Siddhar Puja: Divine blessings Pambatti Siddhar through sacred puja, seeking his wisdom for healing, transformation,spiritual evolution

ராகு தோசம் நீக்கும் பூஜை

பாம்பாட்டி சித்தர் அட்டமா சித்திகளையும் பெற்றவர். கடும் விடம் கொண்ட பாம்புகள் அவருக்கு கட்டுப்பட்டு அவருடன் வசித்ததால் நவக்கிரகங்களில் ராகு கிரகத்தை பிரதிபலிப்பவராக குறிப்பிடப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பூசை செய்பவர்,
அதில் பங்கேற்போர் அவரது அருளை பெற்று, ராகு தரும் தீய கர்ம வினை பாதிப்புகளிலிருந்து விடுபடுகிறார்கள். பாம்பாட்டி சித்தர் அருளுக்கு பாத்திரமானவர்கள் மனப்பிரமை, நாக தோசம், வாழ்க்கையில் நீண்ட காலமாக தீராத பிரச்சினைகள் ஆகிய துன்ப துயரங்களை கடந்து நிம்மதியான வாழ்வு பெறுகிறார்கள்.பாம்பாட்டி சித்தர் பூசையால் வாழ்வில் தோசங்கள் அகன்று, நன்மைகள் பலவாகப் பெருகும் !    

Donate Oil to Temple: Be a part of the sacred tradition by contributing oil to the temple, supporting Tirikala rituals services for well-being

கோவிலில் ஏற்றும் தீபம் தோசங்கள் அகற்றும்

கோவிலில் விளக்கேற்றி வழிபடுவது நமது ஆன்மிக மரபாகும். அதன்படி திருக்கோவில்களில் விளக்கேற்றுவது எளிமையான, சக்தி வாய்ந்த தோச நிவர்த்திக்கான வழியாகவும் உள்ளது. மகான்களின் சீவ சமாதிகளிலோ அல்லது திருக்கோவில்களிலோ ஒரு மாதம் தீபமேற்றுவதற்கான எண்ணெய்யை அளிப்பதால் பிரபஞ்ச சக்தியான இறையருளை சுலபமாக பெறலாம்.
இந்த எளிய செயல் மூலம் அறியாமை இருள் அகன்று, ஒளி மிகுந்த வளமான வாழ்வை அனைவரும் பெற முடியும். பழமையான கோவில்களில் தீபமேற்றி வழிபட ஒரு மாத பூசைக்கு தேவையான தீப எண்ணெய்யை வழங்குவதால் முற்பிறவி பாவங்களால் விளைந்த தீய கர்ம தோசங்கள் நீங்கி, பாவங்களிலிருந்து நம்மை விடுபடச் செய்து நல்வாழ்வை அளிக்கிறது.      

திரிகாலா என்பது...

பூர்வ கர்ம வினைகளால் துன்பம் அடைந்தோருக்கு வழிகாட்டி, எல்லோரும் பயன்பெறும் வகையில் செயல்படும் இணையதளம் திரிகாலா ஆகும். இதன் மூலம் உலகில் உள்ள யாவருக்கும், பிரபஞ்ச சக்தி நிறைந்த கோவில் பூசை மூலம் முன் வினைப்பதிவுகள் நீங்கி நல்வாழ்வு பெற வழி காட்டப்படுகிறது. அந்த வகையில் மிக முக்கிய பூசைகள், புராதன கோவில்கள், சோதிட முறைகள், சித்தர் மரபு, திருவழிபாட்டு முறை, மறந்து விட்ட ஆன்மிக நெறிகள் போன்ற ஏராளமான விசயங்கள் அனைவருக்கும் சென்றடைவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.