இகவாழ்வின் துன்பங்களை அகற்ற மிகச்சிறந்த வழிகாட்டுதல்
மகரிஷிகளின் தெய்வீக அருளைப் பெற்ற சீடர் பரம்பரையின் மூலம் இந்த பிரத்தியேக ரிஷி பிரசன்ன நாடி படிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. ரிஷி பிரசன்னம் என்பது மகரிஷிகள் தெய்வீக வழிகாட்டுதலை நேரடியாக உணர்ந்த சீடர்கள் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு அவருடைய துன்பங்களை அகற்றுவதற்கான தெய்வீக வழிகாட்டுதல் அளிக்கும் ஆன்மீக வழிமுறையாகும். அதன் மூலம் இகவாழ்வில் ஒருவர் அடைந்த துன்பங்களை அகற்றி, நன்மைகளை பெற்று வாழ்வின் உயர்ந்த லட்சியமான தெய்வீகத்தை உணரும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த தெய்வீக வழிகாட்டுதல் என்பது பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக மட்டும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான நல்ல வழிகாட்டுதலாகவும் அமைகிறது.
ரிஷிப் பிரசன்ன முறையில் மகரிஷிகளுடைய நேரடி வழிகாட்டுதலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அவருடைய சீடர்கள் துன்பங்களுக்கான காரணங்களை துல்லியமாக ஆராய்ந்து ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவை ஏன் ஏற்பட்டுள்ளன என்பதை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து அவற்றை எளிமையாக தீர்ப்பதற்கான பரிகார முறைகளையும் வழங்குகிறார்கள்.
இந்த நடைமுறைகள் அனைத்துமே காலம் காலமாக, பாரம்பரியமாக சித்தர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதனால் துல்லியமான பரிகாரங்கள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைப்பது சாத்தியமாகிறது. பொதுவாக ரிஷிபிரசன்ன முறையில் ஒருவருக்கு உரிய பலன்களை பெற்றால் அவை அடுத்து வரக்கூடிய ஆறு மாத காலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது ஐதீகமாகும்.