logo

சித்தர் வழி ஆன்மிக ஜோதிடம் தெய்வீக ஜோதிடம் துல்லிய ஆருட முறை பிரசன்ன ஜோதிடம்

சித்தர் முறை ஆன்ம நெறி ஜோதிடம், கர்மாவை அகற்றும் தெய்வீக ஜோதிடம், சித்தர் அருளாசியுடன் துல்லிய பலன்கள், அனுபவமிக்க ஜோதிட வல்லுனர்கள்

மேற்கண்ட தெய்வீக வழிகாட்டு நெறிமுறைகள் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் நாடி ஜோதிடம் ஆகிய முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாகும். அவற்றின் மூலம் ஏற்படுத்தப்படும் ஆன்மிக தொடர்புகள் ஒருவருக்கு நல்வழியை தெளிவாக காட்டுகின்றன.

அந்த நல் வழிகாட்டுதல்கள் பேரண்ட சக்தி மையத்திலிருந்து தக்க குருமார்களால் பெறப்பட்டு ஒருவருக்கான தனிப்பட்ட வழிகாட்டுதலாக திரிகாலாவில் அளிக்கப்படுகிறது.

துன்பங்களை அகற்றும் ஆன்மிகப் பாதை எது ?

இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக வழிகாட்டி அவசியமா..?

கலியுகத்தில் கர்மவினைகளால் வழிநடத்தப்படும் மனித வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. ஒருவரிடம் உள்ள ஆன்மீக சக்தியால் துன்பங்களை அகற்ற முடியும். ஆனால், ஆன்மீக சக்தி அனைவரிடத்திலும் இருப்பதில்லை. அந்த வகையில் ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவைப்படுகிறார். அவருடைய தெய்வீக வழிகாட்டுதல் மூலம் ஒருவரது கர்ம வினைகளை இந்த பேரண்டத்தின் கருணையினால் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் வாழ்க்கையில் மன நிறைவுடன் அவரவர்களுக்கு உரிய குடும்ப கடமைகளை செய்து, இறையருளையும் பெற முடிகிறது. தெய்வீக அருளை பெறுவதற்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் மிகவும் அவசியம். அந்த இடத்தை பூர்த்தி செய் தகுதி வாய்ந்த, பாரம்பரியமிக்க, ஆன்மீக நெறிமுறைகளில் அனுபவம் வாய்ந்த ஒரு வழிகாட்டி தேவை. ஆன்மிகம் என்ற மிக அவசியமான வாழ்வியல் நெறிமுறைக்கு அப்படிப்பட்ட தெய்வீக வழிகாட்டுதல் இல்லாமல் தனி மனிதர் ஒருவர் தன்னுடைய துன்பங்களை தீர்க்கவோ அல்லது வாழ்க்கையின் லட்சியங்களை அடைவது என்பதோ இயலாத காரியம். தனால் ஒவ்வொருவருக்கும் ஆன்மீக வழிகாட்டி ஒருவர் மிக அவசியம். இன்றைய சூழலுக்கேற்ப உலக மக்கள் அனைவரும் எளிதாக பெறும் வகையில் ஆன்லைன் மூலம் சித்தர் பாரம்பரியத்தில் வந்த, ஆன்மீக நெறிமுறைகளில் பல்லாண்டு அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் சேவை திரிகாலாவில் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

எங்களுடைய பாரம்பரியம்

 எங்களுடைய குரு ரிஷி சிவப்பிரகாசம் ஐயா அவர்கள் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் திருச்சி என்ற நகருக்கு அருகில் சித்தி அடைந்தார். அவர் தன்னுடைய மானுட ரூபத்தில் இருக்கும்பொழுது எங்களுக்கு வழங்கிய போதனைகள்ஆன்மீக பயிற்சிகள் இன்றைய காலகட்டத்திலும் எங்களை வழிநடத்திச் செல்லும் தெய்வீக தன்மை பெற்றவையாக இருக்கின்றன.

எங்களுடைய நாடி ஜோதிடர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நாடி ஜோதிட மையத்தில் பயின்று சிக்கலான நுட்பங்களை அறிந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாடி ஜோதிடத்தில் 25 வருடங்கள் முதல் 50 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவர்கள். அவர்கள் பாரம்பரியமிக்க நாடி ஜோதிட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் பரம்பரை பரம்பரையாக நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எங்களிடம் நாடி ஜோதிடம் படிக்க வரும் வாடிக்கையாளர்கள் கந்தர் நாடி,  ஜீவநாடி,  பிரசன்ன நாடி உள்ளிட்ட பல்வேறு நாடி வகைகளில் இருந்து தங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை பெற முடியும். அந்த வகையில் ஆன்ம ஞானம் பெற்ற ரிஷி முனிவர்களின் அருளால் அவர்கள் அளிக்கும் தெய்வீக வழிகாட்டுதல்கள் மூலம் தனிமனிதருடைய கர்மவினைகளின் தன்மைகளை அறிந்து, எளிமையான தீர்வுகளை எங்கள் நாடி ஜோதிடர்கள் அளிக்கிறார்கள். 

பனை ஓலைச்சுவடிகள் மூலம் வாழ்க்கையில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகள் பற்றி சித்தர்கள் குறிப்பிட்ட ரகசிய உண்மைகளை சித்தர்கள் அருளால் அறிந்து, துல்லியமான பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அந்த வகையில் எங்களுடைய நாடி ஜோதிடர்கள் குழு இந்த உலகில் கிடைப்பதற்கரிய பனை ஓலைச்சுவடி நாடிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான பலன்களை ஆய்வு செய்து வழங்குகிறார்கள்.

ஆன்மிக வழிகாட்டுதல் பெற கீழ்க்காணும் முறையை பின்பற்றவும்

திரிகாலாவில் ஆன்லைன் மூலம் ஒருவர் இருந்த இடத்திலிருந்தே ஆன்மிக வழிகாட்டியிடம் தகுந்த ஆலோசனைகளை பெற தகுந்த தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

உங்களுக்குரிய பொருத்தமான ஆன்மிக வழிகாட்டுதலை பெற நீங்கள் செய்யவேண்டியது இவையே :-

1
நேரம் தேர்ந்தெடுக்கவும்

ஆன்லைன் ஆலோசனைக்கு நேரம் தேர்வு செய்க


தெய்வீக நியதிகளை பின்பற்றவும்

2
பூஜையில் பங்கேற்கவும்

தெய்வீக வழிகாட்டியுடன் ஆன்லைனில் ஆலோசிக்கவும்


கேள்விகளுக்கான பதிலை பெறவும் 

3
நல் வாழ்வு பெறவும்

கர்மவினை தீர்க்கும் முறைகளை பின்பற்றவும்


பரிகாரங்களை முறையாக செய்யவும் 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


ஆன்மிக சிகிச்சை பெற சரியான நேரம் எது..?

ஆன்மிக சிகிச்சை என்பது ஒருவரது வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஒன்றாகும். ஒருவர் சந்திக்கும் வாழ்வியல் சிக்கல்களின் நிலைக்கேற்ப அவருக்கு ஆன்மிக சிகிச்சை மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படலாம். 

ஆன்மிக சிகிச்சைக்கு என்னை எப்படி தயார் செய்து கொள்வது..?

உங்கள் பிரச்சினை மற்றும் கேள்விகள் அனைத்தையும் வரிசையாக ஒரு பேப்பரில் எழுதி வைத்து அதை ஆலோசனையின் போது மறக்காமல் கொண்டு வருவது நல்லது. அப்போதுதான் ஆலோசனை நேரத்தில் நீங்கள் கேட்க நினைத்த விஷயங்களை மறக்காமல் கேட்டு தக்க விடைகளை பெற முடியும்.

ஆன்மிக சிகிச்சை பெறுவதால் என்ன நன்மை ஏற்படுகிறது..?

ஆன்மிக சிகிச்சை என்பது இந்த பேரண்ட சக்தியின் வழிகாட்டுதல் படி ஒருவரது கர்ம வினை பதிவுகளை அகற்றி, அவருக்குரிய தனிப்பட்ட வழிகளை அன்புடன் அளித்து முன்னேறச் செய்யும் வழிகாட்டு நெறிமுறையாகும். அதனால், எவ்வித பயமோ, தயக்கமோ தேவையில்லை.

நேரடி ஆன்மிக சிகிச்சை தரும் பலனை ஆன்லைன் சிகிச்சை அளிக்குமா..?

நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உருவமற்ற ஆன்மிக ஆற்றலுக்கு இடம், காலம் போன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. தேவதைகளும்,சித்தர்களும் எங்கும், எப்போதும் இருப்பார்கள். அனைத்தையும் பார்ப்பார்கள். உலகில் ஒருவர் எங்கே இருந்தாலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆன்மிக ஆற்றல் மூலம் துல்லியமாக உடனடியாக அவருக்கு சென்றடைந்து விடும்.

ஆன்லைன் வாசிப்பு, சிகிச்சைக்கு எவ்வாறு பதிவு செய்வது..?

திரிகாலா ஆன்லைன் ஆலோசனை பெற 3 எளிமையான வழிகளை உருவாக்கியுள்ளது. உங்களுக்கு வசதியான நேரத்தை பதிவு செய்து கொண்ட பின்னர் எங்கள் பிரதிநிதி உங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறும் வழிமுறைகளை தெரிவிப்பார்.