திருமூலர் அய்யா ஓலைச்சுவடி எவ்வகையில் சிறப்பு பெற்றது?
எங்களது மிக நீண்ட நாடி ஓலைச்சுவடி ஆய்வுகளின் அடிப்படையில், திருமூலரின் ஓலைச்சுவடிகள், நாடி வகைகளிலேயே மிக அரிதான ஒன்று என்று அறிந்துள்ளோம். மகரிஷி திருமூலர் வேத, வேதாகமங்களின் சாரத்தை உணர்ந்து மகத்தான தூய மெய்ஞான அமுதமாக திகழ்பவர். ஆன்மாவின் கர்மப் பாதையை அவரது தெய்வீக பார்வை மூலம் உள்ளுணர்ந்து, அகஸ்தியர் அய்யா மூலம் அவற்றை நாம் அறியும் வண்ணம் அருளிச்செய்த ஞானப்பதிவுகளாக அவரது ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.
திருமூலர் நாடி ஓலைச்சுவடி என்பது, ஒருவரது கடந்த கால (முற்பிறவி) வாழ்க்கை முறைகள் ஏற்படுத்திய கர்ம வினைகள், அவை இப்போதைய வாழ்வில் ஏற்படுத்திய விளைவுகள், விதிப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட நல்வினை, தீவினைகள், அவற்றை அகற்ற முயலும் மனித முயற்சிகள் ஆகியவை குறித்து விரிவான பார்வையை அளிக்கிறது. திருமூலர் மகரிஷியின் ஓலைச்சுவடிகள் கி.பி. 5 அல்லது 8-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
அவ்வகையில் திருமூலர் அய்யாயின் ஒரே ஒரு பாடல் மூலமே 300 நாட்களுக்கான (தோராயமாக ஒரு ஆண்டு) கர்ம வினைப்பயன்கள் குறித்த விபரங்களை அளித்துள்ளார.