வசிட்டர் அய்யா நாடி ஓலைச்சுவடிகளின் தனிச்சிறப்பு.
நாடி ஓலைச்சுவடி வகைகளில் மனித ஆன்மாவின் கர்ம வினை பயன்களின் விளைவுகளை வெகு துல்லியமாக குறுகிய காலகட்டத்தில் சொல்லக்கூடிய வகையில் தன்னுடைய நாடிச் சுவடிகளை வசிட்டர் அய்யா படைத்திருக்கிறார்.தன்னுடைய சிறந்த நற்செயல்களுக்காகவும், குணங்களுக்காகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் வசிட்டர் அய்யா. ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் பற்றி அவரது தெய்வீக கணிப்புகளை பொதுவான ஆலோசனை அளிக்கும் வகையில் நேரடியாக ஒருவருக்கு தெரிவிப்பது போல தன்னுடைய நாடியில் குறிப்பிட்டுள்ளார்.
வசிட்டர் அய்யா நாடியில் ஆன்மாவின் பயண அனுபவனக்கள், அதன் இயல்பான வாழ்வு, மனித ஆன்மா அடையும் துன்ப துயரங்கள், இயற்கை அந்த ஆன்மாவிற்கு அளிக்கக்கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள், ஆன்மாவின் சுய விருப்பம், மனிதனுடைய படைப்புத்திறன் மற்றும் ஆன்மீக விடுதலை போன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வசிட்டர் அய்யா காலகட்டம் கிமு 6 முதல் 8 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்ததாகும்.
ஒரே ஒரு ஒற்றை செய்யுள் மூலமாக கிட்டத்தட்ட 225 நாட்களுக்கு (தோராயமாக 7 மாதங்கள்) ஒரு ஆன்மாவின் கர்மப் பதிவுகள் பற்றி தன்னுடைய விளக்கமான கணிப்புகளை நாடியில் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் வசிட்டர் அய்யா நாடி படிப்பதன் மூலம் தெய்வீக வழிகாட்டும் முறைகளை அறிந்து ஒருவருடைய வாழ்க்கைப் பாதையில் உள்ள புதிர்களை விடுவித்து, மகிழ்ச்சியும், அமைதியும் கொண்ட வாழ்வை அடைய முடியும்.